வைட்டமின் டி பற்றாக்குறையா? கவலைப்படாதீங்க

Vitamin D foods in Tamil-ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி என சூரிய கதிர்கள் விழும்படி நின்றாலே போதும், நமக்கு தேவையான வைட்டமின் டி கிடைத்து விடும்;

Update: 2022-10-12 16:06 GMT

Vitamin D3 Foods in Tamil

Vitamin D foods in Tamil-நம்முடைய உடலுக்கு வைட்டமின் டி சத்து மிகவும் முக்கியாகும். இந்த வைட்டமின் டி சத்து இல்லாத காரணத்தால் தான் நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன, முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு சத்து குறைவு, இரும்பு சத்து குறைபாடு போன்றவற்றிக்கு வைட்டமின் டி சத்து குறைவாக இருப்பது தான் காரணம். எனவே நம்முடைய உணவில் வைட்டமின் டி சத்து உள்ள உணவு பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் வாழும் 70 சதவீத மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உடல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் டி குறைபாடு உடலில் பல்வேறு உபாதைகளையும் உண்டாக்குகிறது.


சூரிய ஒளியில் படும்போது நமது உடலானது வைட்டமின் டி சத்தை உற்பத்தி செய்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நம் நாட்டு மக்கள் சூரிய ஒளி படாமல் வீட்டுக்குள் அல்லது அலுவலகத்துக்குள் இருப்பது அதிகரித்து வருகிறது. பள்ளிகளிலும் மாணவர்கள் திறந்த வெளியில் விளையாடுவது குறைந்து என்பது வருகிறது.

வெயிலில் வெளியில் செல்பவர்களும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து கொள்ள சன்ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்திவருகிறார்கள். இவை தேவையான அளவு சூரிய ஒளியை கிரகிப்பதில்லை என்பதால் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்துவருகிறது.

உடலில் 20 நானோகிராமுக்கும் குறைவாக இருப்பதையே வைட்டமின் டி குறைபாடு என்கிறோம். இதன் காரணமாக முதுகுவலி, தசைவலி, உடல் வலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இவற்றை அலட்சியப்படுத்தும் போது எலும்புகள் வலுவிழக்கும், பற்கள் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கும்.

இந்த குறைப்பாட்டை சரி செய்யாவிட்டால் எலும்பு அழற்சி, எலும்பு புரை என எலும்பு சார்ந்த நோய்கள் உருவாக வாய்ப்புண்டு.

அதிகப்படியான குறைபாடு உண்டாகும் போது முடக்குவாதம், நுரையீரல் பிரச்சனைகளும் அதிகரிக்கலாம் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்

இனி எந்தெந்த உணவு பொருட்களில் வைட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது என பார்க்கலாம்

பால் :

தினமும் ஒரு தம்ளர் பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தில் 20 சதவீதம் வரை பெற முடியும். பாலில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ரைபோஃப்ளேவின் உள்ளது. அசைவம் உண்ணாதவர்கள் பால் குடிப்பது அவசியம் பசும்பால் போன்று சோயா பாலிலும் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்திருக்கிறது.


காளான் :

காளானில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. சூரிய ஒளியிலேயே வளரும் இந்த காளான்களில் வைட்டமின் பி1 பி2 பி5 சத்துகள், தாமிரம் போன்றவை நிறைந்திருக்கிறது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சூரிய ஒளியினால் திறந்த வெளியில் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் காளான்களில் மட்டுமே வைட்டமின் டி நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சால்மன் மீன் :

அசைவம் சாப்பிடுபவர்கள் குறிப்பாக மீன் விரும்பும் பிரியர்கள் உணவில் அதிகப்படியாக சால்மன் மீன் சேர்த்துவருவது நல்லது.

வைட்டமின் டி, கால்சியம், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த மீன் இது. இந்த மீனை தொடர்ந்து சாப்பிடும் போது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

மற்ற மீன்களை காட்டிலும் இந்த மீனில் அதிகப்படியான வைட்டமின் டி இருக்கிறது என்பதால் அசைவம் உண்பவர்கள் இனி சால்மன் மீனை தேடி சாப்பிடுங்கள்.

கானாங்கெளுத்தி

மீன் உணவுகள் வைட்டமின் டி யின் முதன்மை ஆதாரமாக இருக்கின்றன. ஏனெனில் அவை கல்லீரல் மற்றும் கொழுப்பு திசுக்களில் அதிகமான அளவில் வைட்டமின் டியை சேர்த்து வைக்கின்றன. எனவே தினசரி கானாங்கெளுத்தியை உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டியை பெற முடியும்.

ஆரஞ்சு பழச்சாறு :

ஆரஞ்சு பழச்சாறு தினமும் எடுத்துகொள்ளலாம். தினமும் காலை உணவோடு ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாறையும் எடுத்துகொள்ளுங்கள்.

இது வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்தது. சிலருக்கு பால் குடித்தால் ஒவ்வாமை பிரச்சனை உண்டாகும் இதற்கு மாற்றாக வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு நாளுக்கு வேண்டிய சத்தை கொடுத்துவிடும்.

இதையெல்லாம் விட இயற்கை நமக்கு இலவசமாக தந்துள்ள சூரிய ஒளியில் ஒரு நாளைக்கு ௨௦ நிமிடம் இருந்தாலே போதும், நமக்கு தேவையான வைட்டமின் டி கிடைத்து விடும். செலவும் இல்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News