இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது எப்படி?

Twins should be breastfed- இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தாய்மார்கள் சரியான முறையில் எப்படி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வது மிக முக்கியம்.

Update: 2024-06-28 13:57 GMT

Twins should be breastfed- இரட்டை குழந்தைகள் ( கோப்பு படம்)

Twins should be breastfed-ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிலும் புதிய தாய்மார்கள் அதற்காக நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டியிருக்கும். இப்படி இருக்கும் சமயத்தில் இரண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது மிகுந்த சவால்கள் நிறைந்தது.

உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தால் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே இரட்டை குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்கள் அதற்கென சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டியிருக்கும். அதற்கென போதிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகளை சரியான நிலையில் வைத்து பாலூட்ட வேண்டியிருக்கும். இப்படி இரட்டை குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் பாலூட்டுவதற்கு கீழ்க்கண்ட டிப்ஸ்களை பின்பற்றுவது நல்லது. அதைப்பற்றி காண்போம்.


இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பாலுட்ட எளிய டிப்ஸ்

பிரசவத்திற்கு முன்பே தாய்ப்பாலுட்ட கற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் புதிய தாய்மார்கள் என்றால் பிரசவத்திற்கு முன்பே தாய்ப்பாலூட்ட கற்றுக் கொள்ளுங்கள். இரட்டை குழந்தைகளுக்கு உணவளிப்பது, மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது, மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது போன்ற விஷயங்களை பிரசவத்திற்கு முன்பே அறிந்து வைத்திருப்பது நல்லது. இரட்டை குழந்தைகளுக்கு சரியாக உணவளிப்பது அவர்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கை அளிக்கிறது.

தாய்ப்பாலூட்டுவதில் உள்ள அடிப்படை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

தாய்ப்பாலூட்டுவதில் உள்ள அடிப்படை முறைகளை தெரிந்து வைப்பது நல்லது. தாய்ப்பாலூட்டும் போது பெண்கள் சரியாக அமராவிட்டால் வலி, கீழ் முதுகு வலி, மேல் உடல் வலி, மார்பக வலி போன்றவற்றை அனுபவிக்க கூடும். இது தாய்மார்களுக்கு அதிக சோர்வை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. தாய்ப்பாலூட்டும் போது மார்பகத்தின் மீது குழந்தையின் நிலை மற்றும் இணைப்பு சமமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு வயிறு போதுமானதாக நிரம்பினால் மட்டுமே குழந்தையின் எடையும் கூட வாய்ப்பு உள்ளது. நீங்கள் வேலைக்கு போகும் பெண்களாக இருந்தால் தாய்ப்பால் சேகரிக்கும் பம்ப்பை பயன்படுத்தலாம்.

தாய்ப்பால் சேகரிக்கும் பம்ப் இரட்டை குழந்தைகள் ஒரே நேரத்தில் அழும் போது இரண்டு பேருக்கும் ஒன்றாக தாய்ப்பால் கொடுப்பது கஷ்டமான காரியம். எனவே அந்த மாதிரியான நேரத்தில் நீங்கள் தாய்ப்பால் பம்ப்பை பயன்படுத்தலாம்.


தாய்ப்பால் பம்ப்

இதன்மூலம் போதுமான அளவு வரைக்கும் உங்களால் தாய்ப்பாலை சேகரிக்க முடியும். இது முற்றிலும் பாதுகாப்பானது. இந்த தாய்ப்பால் பம்ப் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று கைகளால் பயன்படுத்துவது, மற்றொன்று மின்சாரம் மூலம் பயன்படுத்தலாம். உங்களுக்கு செளகரியமான ஒன்றை இதில் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

நீங்கள் அடிக்கடி தாய்ப்பால் பம்ப்பை பயன்படுத்த வேண்டியிருந்தால் மின்சார பம்ப் ஏற்ற ஒன்றாக இருக்கும்.. இதன் மூலம் அதிகமான தாய்ப்பாலை உங்களால் சேமித்து வைக்க முடியும். குடும்பத்தினர் உதவியை நாடுங்கள் உங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது கஷ்டமாக இருந்தால் அல்லது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உதவியை நாடலாம்.

உங்களுக்கு ஓய்வு தேவைப்படும் சமயங்களில் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எப்பொழுதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது, சரியான நேரத்தில் சாப்பிடுவது, உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது, தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவை மிக மிக அவசியம்.


இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சவால்கள் இரட்டை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஒரு குழந்தை மற்ற குழந்தையை விட சுறுசுறுப்பாக இருக்கும். நல்ல எடையுடனும் இருக்க வாய்ப்பு உள்ளது. குழந்தையை சரியான நிலையில் வைத்து பால் கொடுக்காத போது அது குழந்தைக்கு நெஞ்செரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

NICU யில் தங்கியிருக்கும் குழந்தைகள் இந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். எனவே தாய்ப்பாலூட்டுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உடனே குழந்தைகள் நல நிபுணரின் உதவியை நாடுவது நல்லது. உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் அவர்களின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெறுங்கள்.

Tags:    

Similar News