நோய்களை சூரையாடும் சூரை மீன்..
Tuna Fish In Tamil Name-சூரை மீன் சாப்பிடுவதால் அழகான தோல் முதல் இருதயம் ஆரோக்கியம் வரை பல நன்மைகள் கிடைக்கும்.
Tuna Fish In Tamil Name-அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவான சூரை மீன் பற்றி இப்போது பார்க்கலாம். இதனை அங்கிலத்தில் Tuna Fish என்று கூறுவர்கள். இது கானாங்கெளுத்தி எனும் வகையை சேர்ந்தது. உவர்நீரில் வாழும் மீன் இனம் ஆகும். நீரில் வாழும் சூரை மீன் இனம் மிக வேகமாக நீந்தக்கூடிய மீன் வகையை செர்ந்தது. சூரை மீன்களில் (Tuna Fish) மொத்தம் 15 இனங்கள் உள்ளன. சூரை மீன் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல கூடிய திறன் கொண்டது.
டுனா மீன் ஆசிய கண்டத்தில் ஒரு பிரபலமான மீன் வகையாகும். இது இந்தியாவில் இருந்து உலக அளவில் அதிகம் ஏற்றுமதி ஆகிற மீனும் கூட. இதை தமிழில் 'சூரை மீன்' என்கிறார்கள். இது மீன் வகைகளிலேயே அதிக புரதச்சத்தையும், குறைந்த கொழுப்புச் சத்தையும் உடையதாக இருக்கிறது.
நூறு கிராம் டுனா மீனில் எனர்ஜி - 136 கலோரிகள், நீர்ச்சத்து - 10.4 கிராம், நைட்ரஜன் - 3.79 கிராம், புரோட்டின் - 23.7 கிராம், கொழுப்பு - 4.6 கிராம், சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் - 1.0 கிராம், பாலி அன் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் - 1.60 கிராம், கொலஸ்ட்ரால்- 3.0 மி.கிராம், ரெட்டினால் வைட்டமின் ஏ -26 மைக்ரோ கிராம், கரோட்டின் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளது.
மேலும் தயாமின், ரிபோபிளாவின், நியாசின், ட்ரிப்ட்டோபன், வைட்டமின் ஈ, ஃபோலேட், சோடியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
டுனா மீன் புரதச்சத்து மிகுதியாக இருக்கிறது. அதுவும் கொழுப்புச்சத்து குறைந்த புரதச்சத்துக்களை உடையதாக இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு டுனா மீன் சிறந்த உணவாக இருக்கிறது. குழந்தைகளின் ஹைப்பர் ஆக்டிவிட்டி குறைபாட்டையும், நடத்தைக் கோளாறுகளையும் சரி செய்யும் DHA என்ற வேதிப்பொருள் அதிகமாக இருக்கிறது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. பக்கவாதம் பிரச்னைகளை சரி செய்கிறது. மேலும் இயற்கையான ஒமேகா-3 - கொழுப்பு அமிலம் போன்றவை அதிகமாக உள்ளது.
பொதுவாக மன அழுத்தத்தை குறைக்க டுனா மீன் பயன்படுகிறது. குறிப்பாக, மகப்பேறு காலத்தில் உண்டாகும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
குறைந்த ரத்த அழுத்த பிரச்னையை போக்குகிறது, சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் நமது சருமத்தை மினுமினுக்கும் அழகுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. சருமநோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்கிறது. மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கிறது.
டுனா மீன் பார்ப்பதற்கு சிவப்பு இறைச்சியைப் போல் இருக்கும். ஆனால், சிவப்பு இறைச்சியைவிட மிருதுவாக இருக்கும். இதில் மற்ற மீன்களை போல் முட்கள் இருப்பதில்லை, இது சமைப்பதற்கு எளிதானதாகும்.
நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள் இந்த மீனை எந்த வித அச்சமுமின்றி எடுத்துக்கொள்ளலாம். இதில் நீரிழிவை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் தங்களுடைய அசைவ உணவு பட்டியலில் டுனா மீனை முதல் இடத்தில் வைக்க வேண்டும். ஏனெனில், இது புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவுகிறது.
டுனா மீன் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. அதனால் இந்த மீனை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். டுனா மீனை பயன்படுத்தும்போது அதிக மசாலா பொருட்கள் இல்லாமல் எடுத்துக்கொள்வது நல்லது. வெறுமனே நீரில் வேகவைத்தோ அல்லது நீராவியில் அவித்தோ சாப்பிடலாம். இது இன்னும் நல்லது.
இது பக்கவாத நோய்களுக்கு சிறந்ததாகவும் நரம்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. டுனா மீனை ஒருவர் ஒரு நாளைக்கு 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ரத்தசோகை இருப்பவர்கள், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், மூளை சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள், கண் பார்வை பாதிப்புகள், நரம்பு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் இந்த மீனை தொடர்ந்து பயன்படுத்துவது அவர்களுக்கு நல்ல பயனை தரும். டுனா மீன் நல்ல உணவாகவும், சிறந்த மருந்தாகவும் இருக்கிறது.
சூரை மீன்களில் இருக்கும் நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய வகை மீன் நாம் உடலுக்கு தீமை விளைவிக்கின்றன. வாளை மீனுக்கு அடுத்து அதிகளவு பாதரசம் உள்ள மீன் இதுவாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2