Tomato paste recipe- தக்காளி தொக்கு இனிமே இப்படி செய்யுங்க... 3 நாள் ஆனாலும் பிரஷ்ஷா இருக்கும்!
Tomato paste recipe- இந்த மாதிரி தக்காளி தொக்கு செய்தால், 3 நாட்களுக்கு மேல் ஆனாலும் பிரஷ்ஷா அப்போது செய்தது போலவே இருக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்;
Tomato paste recipe- தக்காளி தொக்கு செய்வது குறித்து தெரிந்துக்கொள்வோம்! (கோப்பு படம்)
Tomato paste recipe- உங்க வீட்டுல தக்காளி நிறைய இருக்கா? அதுவும் நல்ல பழுத்து இருக்குதா? அப்ப அது கெட்டு போகுறதுக்குள்ள, அந்த தக்காளிகளைக் கொண்டு தொக்கு செய்யுங்கள். இந்த தக்காளி தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கு ஊறுகாய் போன்றும் தொட்டுக் கொள்ளலாம்.
முக்கியமாக இந்த தொக்கை செய்தால் 3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் இந்த தொக்கை செய்து வைத்துக் கொண்டால், காலையில் அவசரத்திற்கு அதை சைடு டிஷ்ஷாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்கு தக்காளி தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* கனிந்த தக்காளி - 1/2 கிலோ
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி - 3/4 இன்ச் (தோலுரித்து நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2-3 டேபிள் ஸ்பூன்
* கடுகு தூள் - 1/2 டீஸ்பூன்
* வெந்தய தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1-2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/4 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி உயர் தீயில் வைத்து 2-3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அதன் பின் மூடி வைத்து தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், வெல்லம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு தூள், வெந்தய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். (ஒருவேளை உங்களுக்கு கடுகு தூள், வெந்தயத் தூள் ப்ளேவர் பிடிக்காவிட்டால், அதைத் தவிர்த்திடுங்கள்.)
* பிறகு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி பச்சை வாசனை போக 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, தொக்குடன் சேர்த்து கிளறி குளிர வைத்து, ஒரு கண்ணாடி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் தேவையான போது தக்காளி தொக்கை பயன்படுத்திக் கொள்ளவும்.
* இந்த தக்காளி தொக்கை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும். வெளியே வைப்பதாக இருந்தால், 2 -3 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
முக்கிய குறிப்பு:
* தக்காளி தொக்கு நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமானால் நிறைய எண்ணெய் பயன்படுத்த வேண்டும் மற்றும் சற்று நீண்ட நேரம் குறைவான தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.