முகம் நிலா போன்று ஜொலிக்க வேண்டுமா? தக்காளி இருக்க பயமேன்!

Radiant Skin Meaning in Tamil - தக்காளியில் உள்ள வைட்டமின், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச் சத்துக்கள், நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, சரும பராமரிப்பிற்கும் உறுதுணையாக உள்ளது.

Update: 2022-07-21 11:37 GMT

Tomato for face glow and radiant skin -  முகம் நிலா போன்று ஜொலிக்க வேண்டுமா? தக்காளி இருக்க பயமேன்!

Radiant Skin Meaning in Tamil - அழகான முகத்தில் கூடுதலாய் சில பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முகத்தை அழகாக்குபவர்கள் உண்டு. முகத்தில் இருக்கும் பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் போன்ற குறைகள் தெரியாமல் இருக்க ஒப்பனைகள் மூலம் அதை மறைப்பவர்கள் உண்டு. பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் நாள் முழுவதும் அழகாய் வலம் வர நினைப்பவர்கள் சிறிய பராமரிப்பை கூடுதலாக செய்வதன் மூலம் அன்று முழு வதும் முகம் பளிச்சென்று பிரகாசமாய் இருக்க வலம் வரலாம்.

முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவும் வழிமுறைகளில், தக்காளிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. தக்காளி, நம் அனைவரின் வீட்டின் சமையல் அறைகளிலும் நீக்கமற இடம்பெற்று இருக்கும் காய்கறி ஆகும்.

தக்காளியில் உள்ள வைட்டமின், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச் சத்துக்கள், நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, சரும பராமரிப்பிற்கும் உறுதுணையாக உள்ளது.

தக்காளியில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள், முகம், தோல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அழுக்குகளை அகற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

 கோடைக்காலத்தில் கடுமையான வெயில், குறைந்த ஈரப்பதம் நிலவுவதால், நமது முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றி முகப்பொலிவு இன்றி காணப்படும்.

இந்த தருணத்தில், தக்காளி உடன் கற்றாழை ஜெல்லை கலந்து அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவ நல்ல பலன்களை பெறலாம்.

Tomato for face glow and radiant skin - முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகள், நமது உடலின் இயற்கையான pH அளவில் ஏற்படும் மாற்றங்களினாலேயே ஏற்படுகின்றது.  இந்த குறைபாடுகளைத் தவிர்க்க, தக்காளி உடன் தேன் சேர்த்து பயன்படுத்தி வந்தால், நல்ல பலனை உடனடியாக காணலாம். தக்காளியில் உள்ள வைட்டமின், நமது உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, சேதம் அடைந்த சரும செல்களை சரி செய்கின்றது.

இனிமே, தக்காளியை அசால்ட்டா நினைச்சுற மாட்டீங்கல்ல!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News