Love lines in tamil: காதல் எண்ணங்களை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப.. படிங்க
Love lines in tamil: காதல் எண்ணங்களை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப சில மேற்கோள்களை பார்ப்போம்.;
Love lines in tamil: மக்கள் தங்கள் காதல் எண்ணங்களை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் அத்தகைய என்ஜின்களில் தமிழில் காதல் மேற்கோள்களைத் தேட வேண்டும். காதல் மேற்கோள்களை வழங்கும் அற்புதமான வலைப்பதிவுகள் நிறைய உள்ளன.
நீ விரும்பினால்
உன் வாழ்வின் இறுதிவரை
உனக்கு துணையாக
வர எனக்கு சம்மதம்
தேவைப்பட்டால் என் உயிரையும்
உனக்கு கொடுப்பேன்.
உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு
முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்
துடிப்பது என் இதயம்
துடிக்க வைப்பது உன் நினைவுகள்
என்னுள் கலந்த உன்னை
என் உயிர் பிரிந்தாலும்
பிரிக்க முடியாது அன்பே!
உலகமே நினைத்தாலும்
உண்மையான அன்பை தர இயலாது
ஆனால் ஒரு உண்மையான
அன்பு நினைத்தால்
ஒரு உலகத்தையே தரலாம்.
என்னை பார்க்கும் போதெல்லாம்
பொய் கோபம் கொள்கிறாய்
எனக்கு தெரியும்
அது கோபம் இல்லை
வெட்கம் என்று!
எப்போதாவது நினைத்து பார்ப்பாயா
என்று தெரியவில்லை
என்னை!
அழகானவர்களை
பிடிக்கிறது என்பதை விட
பிடித்தவர்கள் தான்
அழகாய் தெரிகிறார்கள்
என்பதே உண்மை.
காதலை தேடி நீ ஓடாதே!
தோற்று போவாய் வாழ்க்கையில்
அதுவே வாழ்க்கையை தேடி ஓடிப்பார்
வென்றுவிடுவாய் உன் காதலை.
என் மொத்த அன்பையும் உன்மீது கொட்டிவிட்டேன்
மீதம் இருப்பது உயிர் மட்டுமே
நீ கேட்டால் அதுவும் உனக்கே
பிரிக்க முடியாத சொந்தம்
மறக்க முடியுதா பந்தம்
தவிர்க்க முடியாத உயிர்
எல்லாமே நீ மட்டுமே.
சுவாசிக்க
சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க
உன் நினைவுகள் போதுமடி!
தொலைவேன் என்று
தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை.
கன்னத்திலும் நெற்றிலும்
இல்லாத முத்த சுவை
நம் இதழ்கள்
கூடும் போதுதான்
தித்திக்கிறது!
நிஜமாய் மாறிய கனவு நீ
கனவிலும் இழக்க முடியாத உறவு நீ
நிஜத்திலும் கனவிலும்
நான் தேடும் அன்பு நீ.
விழிகளுக்குள்
நீயிருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்...
யாரிடமும்
நான் உணர்ந்தது இல்லை
உன்னிடம் மட்டுமே உணர்தேன்
சொர்கம் உன்மடி என்று.
அன்பு கொள்வதில்
ஜெயிப்பது நீயென்றால்
உன்னிடம் தோற்பது
எனக்கு வெற்றியே!
இவள் மறைய அவன் வர அவன்மறைய
இவள் வரவென்று வானிலும் ஓர்
கண்ணாமூச்சி.
ஒருவரின் அதிகப்படியான அன்பினால் நீங்கள் அதிகாரம் பெறுகிறீர்கள்,
ஒருவரின் தீவிர அன்பு உங்களுக்கு தைரியத்தைத் தருகிறது.
சண்டை போட்டுவிட்டு
மறுநாள் எதுவும் நடக்காதது போல்
பேசும் உறவு கிடைத்தால்
வாழ்க்கை சொர்கமே.
எனக்குள்
ஊஞ்சல் கட்டி
ஆடிக்கொண்டே இருக்கிறது
நீங்காத உன் நினைவுகள்.
சிறகுகள் இல்லை
உன்னை தேடி வர
இதயம் இருக்கிறது
என்றும் உன்னை நினைத்திட.
உன்னை பிடித்துவிட்டதால்
இனி உனக்கு பிடிக்காதது
எனக்கும் பிடிக்காது...
காலம் எல்லாம்
உன்னை பார்த்தே வாழ வேண்டும்
உயிர் போகும் நேரம்
உந்தன் மடியில் சாய்ந்து
சாக வேண்டும்.
உன் மூச்சு தொடும் தூரத்தில்
நான் இருக்க வேண்டும்
அந்த மூச்சை சுவாசித்து
நான் உயிர் வாழ வேண்டும்
கண்மணியே.
உன்னை இன்னும் அதிகமாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறதோ நமக்குள் இத்தனை சண்டைகள்…
வாடிய மல்லிகையும் வாசனையோடு தான் இருக்கும் என்னவள் கூந்தல் தொட்ட காரணத்தால்….
இதழ்களின் கூட்டு சங்கமத்தின் குவியல்களே “முத்தம்” உச்சரிப்பிலும்! உபசரிப்பிலும்!!
நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்குமே தெரியும்
ஆனால் என் உயிர்
உன்னோடு இருப்பது
யாருக்குமே தெரியாது
உன்னை தவிர!
உன் கைவிரல் உரசிய நாட்களை நினைத்தே நாளும் இமைகள் மூடுதே
என் வலக்கையை, உன் இடக்கையுடன் ஜோடி சேர்த்து, சாலையின் நீளத்தை, நம் காலடிகளால் அளக்கலாம் வா
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம்; ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!
வாழ வேண்டும் என்பதில் ஆசை இல்லை! உன்னுடன் வாழ வேண்டும் என்பதில் தான் பேராசை!
காயங்களும் மாயமாகும்.
என்னருகில் நீயிருந்தால்
உன்னை சந்தித்த போது சிந்திக்கவில்லை,
இப்போது சிந்திக்கிறேன் எப்போது
உன்னை சந்திப்பேன் என்று
என்னைவிட நம் காதலை பாதுகாத்தது
நீ நான் தவறவிட்டபோதெல்லாம்
தாங்கி பிடித்தாய்…
தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய்
வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது…
உன் கண் சிமிட்டலில்
காணாமல் போன
என் இதயம்
உன் புன்னகையால்
துடித்து கொண்டிருக்கிறது
உன்னில் என்னை கண்டதால்
என்னவள் நீதானோ என்று
என் கண்கள் உன்னையே தேடியது
உயிர்மெய் எழுத்துக்களால்
எழுதி இருக்கும் என் கவிதைகள்
உனக்கானது மட்டும் இல்லை
அதில் கலந்து இருக்கும்
என் உயிரும் உனக்கானது தான்.
என்னையும் மீறி
உன்னை திரும்பி
பார்க்க வைக்கிறது…..
என்னை
கண்டுக்கொள்ளாமல் போகும்
உன் பார்வை
தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை…
உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது…
நிசப்தமான இரவில்
உன் நினைவுமோர்
அழகிய கவிதை…
“என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து”
“மணலில் கிறுக்கியதை
அலைவந்து அழித்தாலும்
நாம் மனதில் கிறுக்கியது
மரணம்வரை அழியாது…”
நீரில் இருந்தாலும்
நெருப்பில் இருந்தாலும்
தங்கத்தின் மதிப்பு மாறாது
அது போலத்தான்
நீ அருகில் இருந்தாலும்
தொலைவில் இருந்தாலும்
என் மனம் என்றும் மாறாது.
நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே
உன் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
களைத்து போனது என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து
விடைபெறும் போதெல்லாம்
பரிசாக்கி செல்கின்றாய்
அழகிய தருணங்களை