வழுக்கை தலையில் கூட முடி மளமளவென வளர வேண்டுமா? - இதை பயன்படுத்துங்க!
Tips to grow hair on bald head- காஃபியை இப்படி பயன்படுத்தினால் வழுக்கை தலையில் கூட முடி மளமளவென வளரும் என்று தெரிய வந்துள்ளது. அதுபற்றி காண்போம்.
Tips to grow hair on bald head- காலத்திற்கு ஏற்றாற் போல உடல் நல பிரச்சினைகள் மாறினாலும், காலம் காலமாக நாம் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சினை முடி உதிர்வு. பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களும் முடி உதிர்வு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். முடி உதிர்வு காரணமாக பல ஆண்கள் வழுக்கைக்கு பலியாகி வருகின்றனர்.
முடி உதிர்வு பிரச்சனையை தடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. என்னதான் முடி உதிர்வுக்கு சந்தைகளில் பல பொருட்கள் கிடைத்தாலும். அவை நமக்கு சாதகமான பலனையும் தருவதில்லை. ஆனால், இயற்கை பொருட்கள் உங்கள் பிரச்சினைக்கு நல்ல பலன் கொடுக்கும். காபி ஹேர் மாஸ்க் போன்ற சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கும்.
காபியில் உள்ள ஃபிளாவனாய்டுகள் முடி வறட்சியைத் தடுக்கவும், உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க காபியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.
முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்க காபியை எப்படி பயன்படுத்துவது?
தேவையான பொருட்கள்:
காபி தூள் - 2 டீஸ்பூன்.
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.
ஹேர் மாஸ்க் செய்முறை:
ஒரு சிறிய கிண்ணத்தில் காபி பொடியை போட்டு அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
இந்தக் கலவையை நன்றாகக் கலந்த பிறகு, உங்கள் உச்சந்தலையில் தடவவும்.
10 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் தலையை விரல்களால் மெதுவாக மசாஜ் செய்யவும்.
ஹேர் மாஸ்கை உச்சந்தலையில் தடவி சுமார் 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும்.
அரை மணி நேரம் கழித்து தலைமுடியை வெறும் தண்ணீரில் கழுவவும். ஷாம்பூ உபயோகிக்க வேண்டாம்.
முடி உதிர்வுக்கு காபி எப்படி உதவும்?
இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும்
காஃபியில் உள்ள காஃபின் உச்சந்தலையில் பயன்படுத்தும் போது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை சிறப்பாக வழங்க உதவுகிறது.
DHT விளைவை குறைக்கும்
டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT), ஒரு ஆண் பாலின ஹார்மோன், மயிர்க்கால்களில் உள்ள ஏற்பிகளுடன் பிணைப்பதன் மூலம் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. காஃபின் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனின் விளைவுகளைத் தடுக்க உதவுகிறது, இதன் மூலம் ஆண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனையைக் குறைக்கிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
காஃபியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன, இது முடியை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
உச்சந்தலை ஆரோக்கியம்
கிரவுண்ட் காஃபி உங்கள் உச்சந்தலையில் லேசான எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படும். இது உச்சந்தலையில் இருந்து இறந்த சரும செல்களை அகற்றுவதன் மூலம் ஆரோக்கியமான உச்சந்தலையை ஊக்குவிக்கும்.
உச்சந்தலை ஈரப்பதம்
தேங்காய் எண்ணெயை காபியில் கலந்து தலையில் தடவினால், உச்சந்தலையின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால், ஸ்கால்ப் பிரச்சனை வராமல் தடுக்கிறது.