இரவில் வீட்டில் கொசுத்தொல்லை ஜாஸ்தியா இருக்கா?
Tips to get rid of mosquitoes- வீட்டில் இரவு நேரங்களில் அதிக கொசுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கொசுக்களை ஒழிப்பதற்கான இந்த விஷயங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.;
Tips to get rid of mosquitoes- மழைக்காலம் வந்துவிட்டாலே ஆங்காங்கே சாலையில் மற்றும் தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். காலை நேரத்தில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாத கொசுக்கள் இரவில் சிறிது நேரம் அசந்து தூங்கவிடாமல் பாடாய்ப்படுத்துகிறது. நிச்சயம் இந்த சூழலை நம்மில் பலரும் தற்போது சந்தித்து வருகிறோம்.
நம்மைப் பாடாய்ப்படுத்தும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதற்கான மாலை 6 மணிக்கே கதவு, இன்னல்களை மூடிக்கொள்வதும், புகை மூட்டம் போடுவது ஒரு பழக்கம். இது மட்டுமின்றி தற்போது அகர்பத்திகள் போன்று கூட கொசு விரட்டிகள் சந்தைகளில் விற்பனையாகிறது. கெமிக்கல் நிறைந்த கொசு விரட்டிகள் பல நேரங்களில் மூச்சுத்திணறல், அலர்ஜி போன்ற பல உடல் நல பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தி விடும். எனவே எவ்வித பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான முறையில், பருவகாலத்தில் அதிகமாக உற்பத்தியாகும் கொசுக்களை விரட்ட என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
கொசுக்களை ஒழிப்பதற்கான டிப்ஸ்கள்:
பூண்டு: கொசுக்களை விரட்டுவதற்கு பூண்டு பயன்படுத்தலாம். ஆம் இதில் உள்ள கந்தகச் சத்துகளுக்கு கொசுக்களை விரட்டும் குணங்கள் அதிகளவில் உள்ளது. பூண்டு முதலில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பூண்டு சேர்ந்து நன்கு கொதிக்கவிடவும். தற்போது பூண்டு கரைசல் ரெடி. சூடு ஆறியதும் ஒரு ஸ்ப்ரோ பாட்டிலில் ஊற்றி இந்த திரவத்தை கொசுக்கள் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் வீடு முழுவதும் ஸ்பேரே செய்யவும். இந்த வாசனையையே கொசுக்கள் வீட்டிற்குள் வருவதைக் கட்டுப்படுத்தும்.
செடிகளை நட்டுதல்: கொசுக்களை விரட்ட வேண்டும் என்றால் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வீட்டைச் சுற்றி வாசம் வரக்கூடிய சாமந்தி, துளசி, லாவண்டர், எலுமிச்சை போன்ற செடிகளை வீடுகளைச் சுற்றி வைக்கவும்.
மழைக்காலத்தில் அதிகம் உற்பத்தியாக்கும் கொசுக்களை விரட்டுவதற்கு எலுமிச்சையை நீங்கள் உபயோகிக்கலாம். கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களில், எலுமிச்சை பழங்களைப் பாதியாக நறுக்கி அதில் கிராம்பை நட்டு வைக்கவும். இதன் வாசனை கொசுக்கள் நமக்கு அருகில் நெருங்கவிடாமல் பாதுகாக்கும்.
அடுத்ததாக கொசுக்களை விரட்டுவதற்கு புதினாவைப் பயன்படுத்தவும். புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து ஸ்பேரே போன்று வீடுகளில் தெளிக்கவும். இந்த வாசனையும் கொசுக்களை விரட்டுவதற்கு உதவியாக இருக்கும்.
கொசுக்கள் அதிகம் கடிக்கும் கை, கால்களில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கலந்து உடலில் தேய்த்துக் கொள்ளவும். இதன் வாசனை கொசுக்களை விரட்ட உதவியாக இருக்கும்.
கொசு வலை, கொசு விரட்டிகள் மூலம் கொசுக்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த முடியும். இது போன்ற முறைகளைப் பின்பற்றி மழைக்காலத்தில் அதிகம் உற்பத்தியாகும் கொசுக்களை விரட்ட முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.