நீங்க பயன்படுத்தும் குளியல் சோப்பு தரமானதா?

Tips on Quality Soaps- நீங்கள் பயன்படுத்தும் குளியல் சோப்பு தரம் கொண்டது என்பதை தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் சருமத்தின் ஆரோக்கியம், பாதுகாப்புக்காக இதை நாம் தெரிந்துக்கொள்வது மிக கட்டாயமாகிறது.

Update: 2024-07-04 12:14 GMT

Tips on Quality Soaps- தரமான குளியல் சோப்புகள் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம் ( கோப்பு படம்)

Tips on Quality Soaps- TFM அளவு ஒரு சோப்பின் தரத்தை விவரிக்கிறது. இது தயாரிப்புக்கு ஈரப்பதமூட்டும் பண்புகளை சேர்க்கிறது. ஒரு சோப்பில் TFM அதிக அளவு இருந்தால், அது அதிக நீரேற்றம் மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது என்பதைக் குறிக்கிறது.

சோப்பு பயன்பாடு என்பது நமது தினசரி சுகாதாரத்தின் முக்கிய பகுதியாகும். பொதுவாகவே ஒவ்வொரு மாதமும் வாங்கும் வீட்டு சாமான்களின் பட்டியலில், குளியல் சோப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. எண்ணற்ற சோப்பு வகைகள் சந்தையில் பெருகி வருவதால், சரியான சோப்பைத் தேர்ந்தெடுப்பது ஒரு குழப்பமான பணியாக மாறியுள்ளது. IMARC குரூப் ஆய்வின்படி, இந்தியாவில் எண்ணற்ற சோப்பு வகைகள் அதிகரித்து வருவதால், 2024 முதல் 2032 வரை இதன் வளர்ச்சி 3.36% என்ற விகிதத்தில் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது, குறிப்பாக சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவுவதால் தொற்று நோய்களின் அதிகரிப்பை குறைப்பது போன்ற பல காரணங்கள் இந்த வளர்ச்சியைத் தூண்டுகின்றன. TFM அளவு ஒரு சோப்பின் தரத்தை விவரிக்கிறது. இது தயாரிப்புக்கு ஈரப்பதமூட்டும் பண்புகளை சேர்க்கிறது. ஒரு சோப்பில் TFM அதிக அளவு இருந்தால், அது அதிக நீரேற்றம் மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது என்பதைக் குறிக்கிறது.

இத்தகைய சோப்புகள் அதிக வறட்சியை ஏற்படுத்தாது. மாறாக, குறைவான TFM என்றால் சோப்பு தோலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இது சருமத்தில் உள்ள அனைத்து ஈரப்பதத்தையும் அகற்றி, உலர வைக்கிறது. TFM அளவு அடிப்படையில் கிரேடு 1, கிரேடு 2 மற்றும் கிரேடு 3 ஆகிய மூன்று மூன்று சோப்பு வகைகள் உள்ளன.

டிஎஃப்எம் சதவிகிதம் 75 முதல் 80 வரை இருந்தால், அது முதல் கிரேடு சோப். இந்த வகையான சோப்பை அனைத்து வயதினரும் பயன்படுத்த முடியும். டிஎஃப்எம் சதவிகிதம் 70 முதல் 75 வரை இருந்தால் அது கிரேடு 2 என வைகைப்படுத்தப்படுகின்றது. இதுவே கழிப்பறை சோப்பு என குறிப்பிடப்படுகின்றது. அதனை குளியலுக்கு பயன்படுத்துவது சிறந்தது. இதில் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும்.


அதே சமயம் மென்மையான சருமம் உடையவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். 65 முதல் 70 வரை இருந்தால் கிரேடு 3 எனவும் குறிக்கப்படுகிறது.அதுவே bathing bar இந்த வகையான சோப்கள் எல்லா வயதினருக்கும் பொருந்தாது.

அதனால், சோப் வாங்கும்போது கட்டாயம் டிஎஃப்எம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். அதிக நுரை, தரும் சோப்புகள் சருமத்தை வறட்சி அடையச் செய்யும். அதிக சோப்பு பயன்பாடு தோலின் ஈரப்பதத்தை நீக்கி டிரைனெஸ், தடிப்பு, அரிப்பு என பல உபாதைகளை தந்து விடும். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் சாதாரண குளியல் சோப் பயன்படுத்தலாம். அதில் அலர்ஜி என ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனை படி மெடிகேட்டட் சோப்பை உபயோகிக்கலாம். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கிளிசரின் சோப்பை தவிர்க்க வேண்டும். வியர்வை வாடை அதிகம் உள்ளவர்கள் ஆன்டி பாக்டீரியல் சோப்பை உபயோகிக்கலாம். எனவே, அடுத்த முறை உங்களுக்கான சோப்பை வாங்க வெளியே செல்லும் போது, ​​அதன் TFM மதிப்புகள் குறித்து சரிபார்க்கவும்.

Tags:    

Similar News