திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்..

Thiripala Suranam Tablet Benefits in Tamil-நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று கைகளையும் முறையாக பக்குவம் செய்து தயாரிக்கப்படுவது தான் திரிபலா சூரணம்.;

Update: 2022-06-28 14:37 GMT

Thiripala Suranam Uses in Tamil

Thiripala Suranam Tablet Benefits in Tamil

நமது நாட்டில் தோன்றிய மிகப்பழமையான பாரம்பரிய மருத்துவ முறை தான் ஆயுர்வேத மருத்துவம். இதில் மனிதர்கள் பயன்படுத்த தக்க மருத்துவ முறைகள் பல கூறுபட்டுள்ளன.

அதில் ஒன்று தான் திரிபலா சூரணம் மருந்து. திரி என்றால் வடமொழியில் மூன்று என்று பொருள். அதாவது மருத்துவ குணங்கள் மிகுந்த நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று காய்களையும் முறையாக பக்குவம் செய்து சூரணம் எனப்படும் பொடியாக தயாரிக்கப்படுவது தான் "திரிபலா சூரணம்" எனப்படும்.

திரிபலா சூரணம் பயன்படுத்துவத்தால் கிடைக்கும் நன்மைகள்

திரிபலா சூரணம் நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நோய் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.

ரத்த சோகை

ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். திரிபலா சூரணம்அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.

சர்க்கரை நோய்

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்க ஒரு மருந்தாக செயல்படுகிறது. உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிக்கும் இன்சுலினை தூண்டி, சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. மேலும்கசப்புச் சுவையுடன் இருப்பதனால், அதீத சர்க்கரை நிலை உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும்.

செரிமானமின்மை

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திரிபலா சிறப்பாக செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும்

சருமப் பிரச்சனைகள்

திரிபலா சூரணம் இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் சிறப்பான பங்காற்றுகிறது. மேலும்உடலின் சருமத்தில் ஏற்பட கூடிய தொற்று நோய்கள், சொறி, சிரங்கு போன்றவற்றை சீக்கிரம் குணப்படுத்துவதில் திரிபலா சூரணம் சிறந்த மருந்தாகும்.

சுவாச நோய்கள்

நமது ஈரல்களில் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகளை நீக்கும் ஒரு அற்புத மருந்தாக திரிபலா சூரணம் இருக்கிறது. இது சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சளி,சைனஸ் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது.

வயிற்று பூச்சிகள்

Thiripala Suranam benefits in Tamil குழந்தைகள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால், வயிற்றில் பூச்சி, புழு தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு திரிபலா சூரணத்தை அவ்வப்போது கொடுத்து வருவதால் வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது.

உடல்பருமன்

திரிபலாவில் கொழுப்புகளை கரைக்கும் அதீத மருத்துவக் குணம் நிறைந்துள்ளதால் உடலிலுள்ள கொழுப்பின் அளவு வெகு சீக்கிரத்தில் குறையும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களை இந்த மருந்து கட்டுப்படுத்துவதால், கொழுப்பின் அளவு குறைந்து, உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

தலைவலி

சிலருக்கு உடலில் இருக்கும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளாலும், வேறு பல காரணங்களாலும் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. பல விதமான தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திரிபலா சூரணம் பயன்படுகிறது.

புற்று நோய்

திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க திரிபலா பேருதவி செய்கிறது. அதன்மூலம், புற்று செல்கள் வளரும் அபாயத்தையும் குறைத்து, உடல்நலனை காக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News