ஒரே ஒரு வரி உணர்த்தும், வாழ்க்கையின் வலிகளை...
Vazhkai Thathuvangal in Tamil-இலையுதிர்க்காலம் நிரந்தரமல்ல, கடந்த காலம் திரும்ப வராது, உன் வாழ்க்கை உன் கையில், இதுவும் கடந்து போகும் - இந்த சில வார்த்தைகள் அடங்கிய ஒரே ஒரு வரிகள்தான், வாழ்க்கை அனுபவ தத்துவங்களாக வெளிப்படுகின்றன.
Vazhkai Thathuvangal in Tamil-வாழ்க்கை என்பதே அனுபவம்தான். இந்த மண்ணில் பிறந்தது முதல் வாழும் இறுதி காலம் வரை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும் வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதோ ஏதாவது ஒரு அனுபவம் கிடைத்துக்கொண்டே தான் இருக்கிறது. அது மகிழ்ச்சியானதாக, துன்பம் நிறைந்ததாக, ஏமாற்றமாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அத்தகைய நேரங்களில், மனிதனின் மனதில் தோன்றும் அனுபவ பாடங்களே, வாழ்க்கை பற்றிய தத்துவங்களாக வெளிப்படுகின்றன, தனி நபர்களின் இந்த தத்துவங்கள், பெரும்பாலும் மற்ற மனிதர்களின் வாழ்க்கைக்கும் பொருத்தமாகவே இருந்து விடுகிறது. இது எப்படி சாத்தியம் என்றால், வாழும் விதங்களும், வாழும் இடங்களும் வெவ்வேறாக இருந்தாலும் மனிதனின் எண்ணங்கள் எல்லாமே ஒன்றுதான். அன்பு, பாசம், கருணை, காதல், பற்று என்பது மனிதர்களுக்குள் பொதுவான விஷயங்களாக அடங்கி இருக்கிறது. எனவே, எங்கு சுற்றி சுற்றி வந்தாலும் மனித வாழ்க்கை ஒரு வளையத்துக்குள் சிக்கி கொண்டிருப்பதை உணர முடியும். எனவே, வாழ்க்கை குறித்த தத்துவங்கள், எல்லோருக்கும் பொதுவானவையாக, இயல்பாகவே அமைந்து விடுகின்றன.
அந்த ஒரு வரி தத்துவங்களை இங்கு பார்க்கலாம்.
போலியான புன்னகையை விட திமிரான கோபமே மேலானது
வானில் நீ உயர உயர பறந்தாலும், வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்.
வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.
தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை.
ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை, ஒரு அவமானம் பெற்றுத் தரும்.
நோயும், கடனும், எதிர்பார்ப்பும் இல்லாதவனின் தூக்கம் மிகவும் சுகமானது.
அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்.
இழப்புகள்தான் பல வலியையும், சில வலிமையையும் தருகின்றன.
தெளிவாக செய்யாத காரியங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதில்லை.
அன்பு செய்யும் ஒருவனால் தான் பிறருடைய அன்பை உணர முடியும்.
அளவில்லா அன்பு இருந்தாலும் அளவோடு கொடுத்தால்தான், மதிப்பு இருக்கும்.
நடக்காத, கிடைக்காத ஒன்றின் மீது தான் ஆசை அதிகமாக வருகிறது.
துணியாத வரை வாழ்க்கை பயம் காட்டும்; துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.
யாரையும் நம்பாதே.. இந்த உலகில் தேவை இல்லாமல் யாரும் பழகமாட்டார்கள்.
கண்டும் காணாமல் சென்று விடுங்கள், பார்த்தும் பார்க்காமல் செல்பவர்களை...
ஏமாற்றம் ஏற்படும்போது நிதானமாக யோசித்தால், நம் எதிர்பார்ப்பே தவறு என்று புரியும்.
முடிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் முயன்று பார்க்க மட்டும் தயங்காதீர்கள்.
யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு. அது தெரியாத வரை அனைவரும் நல்லவர்களே.
தவறவிட்டதை திரும்ப பெற முடியாது; வாய்ப்பாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும்...
இல்லாத போது தேடல் அதிகம், இருக்கிற போது அலட்சியம் அதிகம்- இதுதான் வாழ்க்கை
எண்ணமும், பேச்சும், செயலும் ஒரே மாதிரி இருந்தால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
அழகாய் பேசும் பல வரிகளை விட, அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்.
தாமரை இலையை போல இரு. தேவையில்லாத சிந்தனைகளை மனதில் ஒட்டிக்கொள்ளாதே.
ஆண்களின் கண்ணீருக்கு வலி அதிகம், பெண்களின் கண்ணீருக்கு வலிமை அதிகம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2