Tamil Pei Kathaigal பகீர் என பயமுறுத்தும் இரண்டு நிமிட பேய்க்கதைகள்,

துரித உணவு யுகத்தில், உடனடியாக இரண்டே நிமிடத்தில் பயந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தான்இரண்டு நிமிட பேய் கதைகள்.;

Update: 2024-01-11 11:28 GMT

அனைவருக்கும் பிடிக்கும் கதைகளில் ஒன்று பேய் கதை. சிலர் தங்களுக்கு பயமே இல்லை என்றுக் கூறிக் கொண்டு பேய் கதைகள் பார்ப்பார்கள். சிலர் பயப்படுவதற்காகவே பேய் கதை பார்ப்பார்கள். சிலர் நண்பர்களின் தொந்தரவால் பேய் கதை பார்ப்பார்கள்.

சிறு வயதில் சோறூட்ட அம்மாவிடம் இருந்து அறிமுகமான பேய் கதை, நாம் வளர, வளர நம்முடன் சேர்ந்து வளர்ந்துக் கொண்டே இருக்கிறது. வேதாள உலகத்தில் இருந்து தமிழ் சினிமாவில் ஆள் டைம் டிரெண்ட் லிஸ்ட்டில் இருப்பதும் பேய் கதைகள் தான்.

இப்போது எல்லாமே உடனக்குடன் வேண்டும் என்ற சூழல் தான் நிகழ்கிறது. இந்த துரித உணவு யுகத்தில், உடனடியாக இரண்டே நிமிடத்தில் பயந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தான் இந்த 2 நிமிட பேய் கதைகள்.

இந்த கதைகளில் இறுதி வரிகள் தான் சட்டென திகிலை ஏற்படுத்தும், படித்துப் பாருங்கள், திகிலுடன் ரசித்துப் பாருங்கள்


மகளை சமாதானப்படுத்தும் அம்மா

என் மகள் விடாமல் அழுதுக் கொண்டே இருந்தால். இராத்திரி முழுக்க அவள் என்னை உறங்க விடாமல் சத்தமாக கத்திக் கொண்டே இருந்தாள்.

இனியும், பொறுக்கமுடியாது என கருதி, நேராக எழுந்து அவளது கல்லறைக்கு சென்று, போதும் நிறுத்து என்று கூறினேன்.

ஆனால், என் பேச்சை அவள் கேட்கவே இல்லை.

அச்சம் என்பது மடமையடா!

என் மெத்தை தான் என் வீட்டில் மிகவும் பாதுகாப்பான இடம். அன்று, என் வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். நான் மட்டுமே தனியாக இருந்தேன். இரண்டு தலையணைகளை இருபுறமும் வைத்துக் கொண்டு படுத்திருந்தேன். எந்த கெட்ட எண்ணங்களும் வரக் கூடாது என என்னுள்ளே கூறிக் கொண்டிருந்தேன். அப்போது மனதுக்குள், "அட! நீ பயப்படுற அளவுக்கு முட்டாளா?" என யோசித்துக் கொண்டிருந்தேன்.

"பயப்படாதே..., அவை உன்னை ஒன்றும் செய்யாது" என என்னருகே யாரோ முணுமுணுக்கும் சப்தம் கேட்டது.

பேயா?

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேய்கள் இருக்கிறதா? என்ற அச்சம் உங்களுக்கு ஏற்பட்டால்... பயப்பட வேண்டாம். உங்கள் இடது பக்கம் பாருங்கள், வலது பக்கம் பாருங்கள், படுக்கைக்கு கீழே பாருங்கள். உங்கள் உடை அலமாரியில் பாருங்கள்.

ஆனால், மேலே மட்டும் பார்க்க வேண்டாம். அவளுக்கு தன்னை யாரேனும் கண்டால் பிடிக்காது.


மெத்தை மேல் யார்?

நான் என் மகனை மெத்தையில் படுக்க வைத்து, உறங்க சொல்லி கொண்டிருந்தேன். அவன்,"அப்பா கட்டிலுக்கு கீழே பேய் இருக்கிறதா? என்று பாருங்கள்" என்றான். அவனது அச்சத்தை போக்க வேண்டும் என்பதற்காக படுக்கைக்கு கீழே குனிந்து பார்த்தேன்.

படுக்கைக்கு கீழே அவன் குறுகி உட்கார்ந்தபடி, "அப்பா, என் மெத்தையில் யாரோ இருக்கிறர்கள்... பார்த்தீர்களா?" என்றான்.

முதுகில் தொங்கும் மனைவி

மனைவி மீது சந்தேகம் கொண்டு, அவளை ஒரு நாள் வெளியூர் அழைத்து சென்று கொன்று புதைத்துவிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்தவுடன், மகன் அம்மா எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வதென குழப்பமாக இருந்தது.

ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் என் மகன் அம்மா எங்கே என எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஒரு வாரம் ஆகிவிட்டது. அவனிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. நானாக சென்று... "உனக்கு வீட்டில் எந்த மாற்றமும் தெரியவில்லையா? என கேட்டேன்.

"இல்லை, ஆனால், அம்மா ஏன் ஒரு வாரமாக உங்கள் முதுகிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறார்? என்று தான் புரியவில்லை" என்றான்.

Tags:    

Similar News