பிரச்னைகள் தாங்க வாழ்க்கை.... அதை எதிர்த்து போராடணும்....
Tamil One Word Quotes-ஒத்தை வரியில வாழ்க்கையையே சொல்லிவிடலாங்க....எண்ணம் போல்தாங்க வாழ்க்கை... பிரச்னை இல்லாமல் வாழ்க்கை உண்டா? படிச்சு பாருங்களேன்...
Tamil One Word Quotes-வாழ்க்கை என்பது பள்ளம் மேடு போன்றதுதாங்க. அதாவது இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவது தாங்க வாழ்க்கை. ஒரேயடியாய் இன்பமாகவே இருந்தால் வாழ்க்கையானது போரடித்துவிடும். அதேபோல் ஒரேயடியாக துன்பமாக இருந்தாலும் வெறுத்துவிடும்.இதனால்தான் இயற்கை எப்படி பகல்இரவு என மாறி வருகிறதோ அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கைங்க. பிரச்னைகளே இல்லாதவர்கள் யாராவது உண்டா? ...எல்லோருக்கும் பிரச்னைகள் உண்டுங்க.. ஆனால் வேறு விதமாக இருக்கும் அவ்வளவுதாங்க...
வாழ்க்கை - இதனை அனைவரும் வாழ்ந்து பார்க்க வேண்டும். வாழ்ந்து ரசிக்க வேண்டும்.நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு புது புது அனுபவங்களை கற்றுணர்த்துகிறது வாழ்க்கை. வருடத்திற்கு 365 நாட்கள் என்றால் நமக்கு 365 அனுபவங்கள் கிடைக்கிறது. ஒரே நாளில் எத்தனை எத்தனை அனுபவங்களை பார்ப்பவர்களும்இருக்கிறார்கள்.
குடிசையில் வாழ்பவர்கள் முதல் பிரச்னைகள் உண்டு. அவரவர்களின் வாழ்க்கைக்கு தகுந்தாற்போல் பிரச்னைகளின் அளவு மாறுபடும், தன்மை மாறுபடும். வாழ்க்கையின் எல்லா நாட்களும் எல்லா தருணங்களிலும் நாம் சந்தோஷமாக வே இருக்க முடியாது. துக்கங்களும் அவ்வப்போது பனித்துளிகள் போல வந்து செல்லும்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? தினந்தோறும் பிரச்னைகளையே வாழ்க்கையாக நடத்தி வருபவர்கள் எத்தனையோ பேர் இந்த உலகில் உள்ளனர். எனவே நாம் வாழ்க்கையில் மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி வாழ்வதை முதலில் கைவிட வேண்டும். நமக்கு என்னவோ அதன்படி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அகலக்கால் வைத்தாலும் ஆபத்துதான்.
வரவறியாமல் செலவினமென்றால் நிலவரமெல்லாம் கலவரமாகிவிடும் அந்த சொற்றொடருக்கு ஏற்ப உங்கள் வருமானத்திற்கேற்ற செலவுகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தினம் தினம் கலவரந்தான். கடன் தருகிறார்கள் என ஆசைப்பட்டு வாங்கிவிட்டு பின்னர் கட்ட முடியாமல் அவதிப்படுவது தேவையில்லாததுங்க.. இருப்பதை வைத்து வாழ பழகிக்கொள்ளுங்க... எளிமையே என்றும் ஏற்றம் தரும்.
ஒரேவரியில் வாழ்க்கையின் அனுபவங்கள் ,,, அழகு தமிழில் ..... இதோ உங்களுக்காக....
போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்.
வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்.
வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.
தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை.
ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்!
நோயும் கடனும் எதிர்பார்ப்பும் இல்லாதவனின் தூக்கம் மிகவும் சுகமானது.
அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்
இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகின்றன.
தெளிவாக செய்யாத காரியங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதில்லை.
அன்பு செய்யும் ஒருவனால் தான் பிறருடைய அன்பை உணர முடியும்.
அளவில்லா அன்பு இருந்தாலும் அளவோடு கொடுத்தால் தான்.. மதிப்பு இருக்கும்.!
நடக்காத.. கிடைக்காத.. ஒன்றின் மீது தான் ஆசை அதிகமாக வருகிறது..!
துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.
யாரையும் நம்பாதே.. இந்த உலகில் தேவை இல்லாமல் யாரும் பழகமாட்டார்கள்…!
கண்டும் காணாமல் சென்று விடுங்கள் பார்த்தும் பார்க்காமல் செல்பவர்களை.
ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாக யோசித்தால் நம் எதிர்பார்ப்பே தவறு என்று புரியும்..!
முடிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் முயன்று பார்க்க மட்டும் தயங்காதீர்கள்…
யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு. அது தெரியாதவரை அனைவரும் நல்லவர்களே!
தவறவிட்டதை திரும்ப பெற முடியாது.. வாய்ப்பாக இருந்தாலும் வாழ்க்கையாக இருந்தாலும்!
இல்லாத போது தேடல் அதிகம்… இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்.. இதுதான் வாழ்க்கை…எண்ணமும், பேச்சும், செயலும் ஒரே மாதிரி இருந்தால்… வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..!!
அழகாய் பேசும் பல வரிகளை விட.. அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்…!
தாமரை இலையை போல இரு. தேவையில்லாத சிந்தனைகளை மனதில் ஒட்டிக்கொள்ளாதே!
ஆண்களின் கண்ணீருக்கு வலி அதிகம், பெண்களின் கண்ணீருக்கு வலிமை அதிகம்…
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2