ஆஹா கல்யாணம்...ஆஹாகல்யாணம்... நட்சத்திரம் பொருத்தம் பார்ப்பது எப்படிங்க?
Natchathira Porutham Table in Tamil-தமிழகத்தில் திருமணம் என்றாலே முதன் முதலாக மாப்பிள்ளை மற்றும்பெண்ணின் ஜாதகம் பொருந்துகிறதா? நட்சத்திரம் பொருந்துகிறதா? என பார்ப்பார்கள்.
Natchathira Porutham Table in Tamil-கணவன் -மனைவி என்ற பிணைப்பை வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் புனிதமான முறையில் அக்னிதேவனின் அருளோடு பெரியோர்கள், வேதியர், பந்துமித்ர உறவினர்கள் பலரும் சேர்ந்து மங்கள வாத்தியங்களுடன் அவரவர் ஆசார, அனுஷ்டான சம்பிரதாய முறைப்படி சந்தோஷமாக செய்து வைக்கும் சுபகாரியமே கல்யாணம் ஆகும்.
இந்த சந்தோஷ நாளை எப்போதும் மறக்கமுடியாது.பெண்ணைக் கன்னியாதானம் செய்து கொடுக்கும்பெற்றோர்களும், மருமகளாக அடையும் பாக்யம் செய்த பிள்ளை வீட்டாரும் இந்த விவாஹ நாளை ஒற்றுமையையும் சகல க்ஷேமங்களையும் சந்தோஷங்களையும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் ஓர் நல்ல எதிர்காலமென்று வரவேற்பார்கள். இல்வாழ்க்கை என்ற இன்ப வாழ்க்கைக்கு மணப்பெண்ணின் வருகையை அதிர்ஷ்டமாக எண்ணி மகிழ்வான் மணப்பிள்ளை.
இப்படிப்பட்ட சுபச்சடங்கான விவாஹம் அவரவர் மரபுக்கு ஏற்ற வழக்கங்களின் வழியாக இன்றும் நடைபெறுகின்றது. விவாஹ நாள் முதல் கணவன் -மனைவி என்று இருவரும் வாழ்க்கையில் பிணைக்கப்பட்டு விடுகிறார்கள்.
கல்யாணம் நடத்துவதற்கு முன் எவ்வளவோ விஷயங்களை நாம் அனுசரித்துப் பார்க்க வேண்டும். கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்றும், வாழையடி வாழையாக வாழ வேண்டுமென்றும்,பெருவாழ்வு வாழவேண்டுமென்றும் பேசியவர்கள் ஆசிர்வதிப்பார்கள். வளம் பெற்ற வாழ்க்கையாக அமையவேண்டுமானால் முதலில் ''மனப்பொருத்தம்'' மிகவும் அவசியம்.
திருமணத்திற்கான பெண்ணின் நட்சத்திரத்தோடு ஆண் நட்சத்திரங்கள் எத்தனை உத்தமம் என்றும் எத்தனை மத்திமம் என்றும் நட்சத்திர பொருத்தத்தினை பார்ப்போமோ?
நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?
பொதுவாக தமிழகத்தினைப்பொறுத்தவரை திருமணம் என்றாலோ பெண்ணின் ஜாதகத்தோடு மாப்பிள்ளையின் ஜாதகம் பொருந்துகிறதா, எத்தனை பொருத்தம் பொருந்துகிறது, என்றும் முதன் முதலில் நட்சத்திர பொருத்தம் உள்ளதா? என பார்ப்பார்கள்.ஒரு சிலர் நட்சத்திர பொருத்தம் இருந்தால்தான் ஜாதகத்தினையே கையில் வாங்குவார்கள்.ஒவ்வொருவருக்கும்ஒரு கொள்கை உண்டு. அந்த வகையில் பெண் நட்சத்திரத்தோடு ஆண் நட்சத்திரம் பொருத்தம் பார்ப்பது எப்படி? என்று பார்க்கலாம் வாங்க.
பெண் நட்சத்திரம் அஸ்வினிக்கு பொருந்தக்கூடிய ஆண் நட்சத்திரங்களாவன. பரணி, திருவாதிரை, பூசம், அனுஷம், பூராடம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி,
அஸ்வினிக்கு மத்திம பொருத்தமுடைய ஆண் நட்சத்திரங்களாவன கார்த்திகை 1, ரோகிணி, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், பூரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி
பெண் நட்சத்திரம் பரணிக்கு உடைய உத்தம ஆண் நட்சத்திரங்களாவன.அசுவனி, கார்த்திகை 1, மிருகசீரிடம் 3 & 4, புனர்பூசம், ஆயிலியம், சித்திரை 3 & 4, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், ரேவதி
பரணிக்கு மத்திமம்:கார்த்திகை 2 & 3 & 4 , திருவாதிரை, மகம் சுவாதி, விசாகம் 4, திருவோணம், சதயம்
பெண் நட்சத்திரம் கார்த்திகை 1 பாதம் உத்தம ஆண்நட்சத்திரங்களாவன.அசுவனி, பரணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், சதயம், உத்திரட்டாதி.
கார்த்திகை 1ம் பாதம் மத்திமம்:மிருகசீரிடம் 3 & 4, மகம், சித்திரை, கேட்டை, அவிட்டம், ரேவதி
பெண் நட்சத்திரம் கார்த்திகை 2 3 4 பாதத்திற்கான உத்தம ஆண் நட்சத்திரங்களாவன:அசுவனி, பரணி, பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், சதயம், உத்திரட்டாதி.
கார்த்திகை 234 பாதத்திற்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்:
ரோகிணி பூரம் அஸ்தம் கேட்டை, அவிட்டம், ரேவதி
பெண் நட்சத்திரம் ரோகிணிக்கான உத்தம ஆண்நட்சத்திரங்களாவன:பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம், உத்திரம் 1, சித்திரை 3 & 4, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி
ரோகிணிக்கான மத்திம ஆண்நட்சத்திரங்களாவன:அசுவனி புனர்பூசம் 1 2 3, பூசம், அனுஷம், உத்திரட்டாதி
மிருகசீரிடம் 1 & 2 பாதத்திற்கான உத்தம ஆண் நட்சத்திரம் :
அசுவனி, கார்த்திகை, ரோகிணி, பூசம், உத்திரம் 1, அனுஷம், மூலம், உத்திராடம் 2 3 4, திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.
மிருகசீரிடம் 1 2 பாதத்திற்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:
பரணி, புனர்பூசம் 4, ஆயில்யம் சுவாதி, விசாகம், கேட்டை,பூராடம், பூரட்டாதி, ரேவதி
பெண் நட்சத்திரம் மிருகசீரிடம் 3 & 4 பாதத்திற்கான உத்தம ஆண்நட்சத்திரங்களாவன:அசுவனி, கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, உத்திரம், அஸ்தம், அனுஷம், மூலம், உத்திராடம் 1, திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.
மிருகசீரிடம் 3 4 பாதத்திற்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்:
பரணி, புனர்பூசம் 1 2 3, பூராடம் பூசம் சுவாதி, விசாகம், கேட்டை, பூரட்டாதி, ரேவதி
திருவாதிரை நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்:பரணி, மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, பூரம், சித்திரை 1 2, விசாகம் 4, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி
திருவாதிரை பெண் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:அசுவனி, கார்த்திகை, புனர்பூசம் 4, மகம், உத்திரம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி.
புனர்பூசம் 1 2 3 க்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்:அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம் , உத்திரட்டாதி.
புனர்பூசம் 123 க்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்:ரோகிணி, பூசம், ஆயில்யம், அஸ்தம், சித்திரை 3 4, சுவாதி, கேட்டை, திருவோணம், ரேவதி
புனர்பூசம் 4 க்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்:அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை, சுவாதி அனுஷம், மூலம், அவிட்டம், சதயம் , உத்திரட்டாதி.
புனர்பூசம் 4க்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:பரணி, பூசம், ஆயில்யம், ஹஸ்தம் , கேட்டை, திருவோணம், ரேவதி.
பூசம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்களாவன:ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம், சதயம் , பூரட்டாதி, ரேவதி
பூசம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திங்களாவன:அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், உத்திரம், சித்திரை, மூலம், மகம், உத்திராடம் 2 3 4, அவிட்டம்.
ஆயில்யம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரம்:கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், சித்திரை, விசாகம் 1 2 3, அனுஷம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி.
ஆயில்யம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:பரணி, ரோகிணி, திருவாதிரை, உத்திரம் 2 3 4, அஸ்தம், உத்திராடம், திருவோணம், சதயம்.
மகம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்களாவன:பரணி, திருவாதிரை, பூசம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.
மகம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:கார்த்திகை, பூரம், சித்திரை 3 4, அஸ்தம் அவிட்டம், பூரட்டாதி
பூரம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்களாவன:அசுவனி, கார்த்திகை, திருவாதிரை, மகம், உத்திரம் 1, சித்திரை 3 4, விசாகம், கேட்டை, உத்திராடம் 2 3 4, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி.
பூரம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்:திருவாதிரை,சுவாதி, மூலம், திருவோணம், சதயம்
உத்திரம் 1 பாதம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்களாவன:
அசுவனி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், பூரம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம் , உத்திரட்டாதி.
உத்திரம் 1 பாதம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:மிருகசீரிடம், ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம், அவிட்டம், ரேவதி
உத்திரம் 2 3 4 பாதத்திற்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்:அசுவனி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், பூரம், அஸ்தம், அனுஷம், மூலம் பூராடம், சதயம் , உத்திரட்டாதி.
உத்திரம் 2 3 4 பாதத்திற்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:
மிருகசீரிடம், ஆயில்யம், சுவாதி, கேட்டை, அவிட்டம் 3 4, ரேவதி
அஸ்தம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்:பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம்,ஆயிலியம், பூரம், உத்திரம், சித்திரை 1 2, விசாகம் 4, கேட்டை, பூராடம், உத்திராடம் 1, அவிட்டம் 3 4, பூரட்டாதி, ரேவதி.
அஸ்தம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:
பூசம், மகம், அனுஷம் உத்திரட்டாதி.
சித்திரை 1 & 2 பாதம் உத்தம ஆண் நட்சத்திரங்களாவன:அசுவனி, கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், அனுஷம், மூலம், சதயம்.
சித்திரை 1 2 பாதம் மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், ரேவதி
சித்திரை 3 & 4 பாதத்திற்கான உத்தம ஆண் நட்சத்திரங்களாவன:
அசுவனி, கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, மூலம், திருவோணம்.
சித்திரை 3 4 பாதத்திற்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன
பரணி, புனர்பூசம், ஆயிலியம், பூரம், விசாகம், கேட்டை, ரேவதி
சுவாதி நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்:பரணி, மிருகசீரிடம் 3 4, புனர்பூசம், ஆயில்யம், பூரம், கேட்டை, பூராடம், சித்திரை விசாகம் ரேவதி
சுவாதி நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:கார்த்திகை, பூசம், மகம், உத்திரம், மூலம், உத்திராடம், அவிட்டம் 1 2, பூரட்டாதி, உத்திரட்டாதி.
விசாகம் 1 2 3 நட்சத்திரத்துக்கான உத்தம ஆண்நட்சத்திரங்களாவன:அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம் 1 2.
விசாகம் 12 3 நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்:
பரணி ரோகிணி, ஆயிலியம், பூரம், அஸ்தம், அனுஷம், கேட்டை, அவிட்டம் 3 4, சதயம், ரேவதி
விசாகம் 4 நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்
அசுவனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், சித்திரை, சுவாதி, அனுஷம் மூலம், அவிட்டம், சதயம்.
விசாகம் 4 நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்
பரணி ரோகிணி, ஆயிலியம், பூரம், அஸ்தம், கேட்டை, ரேவதி.
அனுஷம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்
ரோகிணி, புனர்பூசம்,ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம், திருவோணம், சதயம் , பூரட்டாதி 1 2 3.
அனுஷம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்
அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், மகம், உத்திரம், சித்திரை, கேட்டை, உத்திராடம் 2 3 4, பூரட்டாதி, ரேவதி
கேட்டை நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்
கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், அவிட்டம்.
கேட்டை நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்
பரணி, ரோகிணி, பூரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி.
மூலம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்:திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, சதயம்.
மூலம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்:மிருகசீரிடம் 3 4, புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், பூராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி.
பூராடம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்:மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, மகம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம் 1, பூரட்டாதி, ரேவதி.
பூராடம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்:திருவாதிரை, புனர்பூசம் 4, ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம், உத்திராடம் 2 3 4, திருவோணம், அவிட்டம்.
உத்திராடம் 1 பாதத்திற்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்:திருவாதிரை, பூசம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், பூராடம், சதயம், உத்திரட்டாதி.
உத்திரடாடம் 1 பாதத்திற்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்
அசுவனி, பரணி, மிருகசீரிடம், ஆயிலியம், கேட்டை, திருவோணம், அவிட்டம், ரேவதி
உத்திராடம் 2 3 4 பாதத்திற்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்
அசுவனி, பரணி, பூசம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி.
உத்திரடாடம் 2 3 4 பாதத்திற்கான மத்திம ஆண் நட்சத்திரம்
ரோகிணி, ஆயில்யம், கேட்டை, அவிட்டம், ரேவதி
திருவோணம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்
பரணி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயிலியம், உத்திரம் 2 3 4, சித்திரை, பூரம், விசாகம், கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி
திருவோணம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்
மகம், பூரம், உத்திரம் 1, அனுஷம், மூலம், உத்திரட்டாதி
அவிட்டம் 1 & 2 பாதத்திற்கான உத்தம நட்சத்திரங்களாவன:அசுவினி, கார்த்திகை பூசம் உத்திரம் 2 3 4, அஸ்தம், சுவாதி அனுஷம், மூலம், உத்ராடம், திருவோணம், சதயம்.
அவிட்டம் 1 2 பாதத்திற்கான மத்திம நட்சத்திரங்களாவன:உத்திரட்டாதி, பூராடம், விசாகம், ஆயில்யம், புனர்பூசம், கார்த்திகை 2 3 4, கேட்டை, உத்திரம், மகம்.
அவிட்டம் 3 & 4 நட்சத்திரத்துக்கான உத்தம நட்சத்திரங்கள்:கார்த்திகை பூசம் மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி அனுஷம், மூலம், உத்ராடம், திருவோணம், சதயம்.
அவிட்டம் 3 4 நட்சத்திரத்துக்கான மத்திம நட்சத்திரங்கள்:
அஸ்வினி, ரோகினி, பூராடம், விசாகம், பூரம், ஆயில்யம், திருவாதிரை, புனர்பூசம் 4, கேட்டை, உத்திரம், மகம். உத்திரட்டாதி.
சதயம் நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்
மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம்.
சதயம் நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்:அசுவினி புனர்பூசம், பூசம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், பூரட்டாதி, ரேவதி.
பூரட்டாதி 1& 2 & 3 பாதத்திற்கான உத்தம ஆண்நட்சத்திரங்கள்:
அசுவனி, மிருகசீரிடம் 1 & 2, பூசம், மகம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம்.
பூரட்டாதி 1 2 3 பாதத்திற்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள்:
ஆயில்யம், அஸ்தம், அனுஷம், கேட்டை, பூராடம், திருவோணம், உத்திரட்டாதி.
பூரட்டாதி 4 பாதத்திற்கான உத்தம ஆண் நட்சத்திரங்கள்
மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை 1 & 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி.
பூரட்டாதி 4 பாதத்திற்கான மத்திம ஆண் நட்சத்திரங்கள் :சுவாதி, பூசம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்களாவன:ரோகினி, திருவாதிரை, புனர்பூசம் 2 3, அஸ்தம், கேட்டை, திருவோணம், பூரட்டாதி, சதயம், ரேவதி.
உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கான மத்திமஆண் நட்சத்திரங்களாவன:அவிட்டம், உத்திராடம், மூலம், சுவாதி, ஆயில்யம், உத்திரம் 3 & 4, புனர்பூசம் 4, கார்த்திகை 2 3 4.
ரேவதி நட்சத்திரத்துக்கான உத்தம ஆண் நட்சத்திரங்களாவன:
கார்த்திகை 2 3 4, மிருகசீரிடம், புனர்பூசம் 1 2 3, உத்திரம் 2 3 4, சித்திரை 1 2, விசாகம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி.
ரேவதி நட்சத்திரத்துக்கான மத்திம ஆண் நட்சத்திரங்களாவன:கார்த்திகை 1, ரோகினி, புனர்பூசம் 4, பூராடம், பூசம், அஸ்தம், விசாகம், திருவோணம், சதயம்.
குறைந்தது 6 பொருத்தங்கள் இருந்தால் போதுமானது அதிலும் ரஜ்ஜு, யோனி முக்கியமானது. மற்றபடி ஜாதக கட்டங்களையும் பார்த்து தான் திருமணம் நிச்சயிக்க வேண்டும்.
சேரக்கூடாத நட்சத்திரங்கள்
மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்து பெண் நட்சத்திரத்திற்கு ஏற்ப பொருந்தும் ஆண் நட்சத்திரங்களாகும். இதில் உத்தமம், மத்திம நட்சத்திரத்தில் இடம்பெறாத நட்சத்திரங்கள் அனைத்தும் பொருந்தாத நட்சத்திரங்களாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2