தினமும் காலையில் முளைகட்டிய பயறு சாப்பிடுங்க, அவ்வளவு நன்மைகள் இருக்குங்க..

Sprouts Benefits in Tamil-தானியங்களில் புரதங்கள் அதிகமாக இருக்கின்றன. அவை முளைகட்ட வைக்கும்போது இன்னும் கூடுதலான பலன்களைக் கொடுக்கின்றன.

Update: 2023-02-12 11:17 GMT

Sprouts Benefits in Tamil

Sprouts Benefits in Tamil-பாரம்பரிய ஆரோக்கிய உணவு வகைகளில் முக்கியமானவை முளைகட்டிய பயறுகள். இன்றைய நவீன உலகிலும் ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் முளைக்கட்டிய பயறுகளை தேடிச் சென்று வாங்குகிறார்கள். `சாதாரண பயறுகளைவிட முளைக்கட்டிய பயறுகளில் அப்படி என்ன சிறப்பு? வாங்க பாக்கலாம்

புரதச்சத்து நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களும் ஒன்று. அடிப்படையானதும் கூட. நம்முடைய உடலின் இயக்கங்களுக்கே புரதச்சத்து தான் அடிப்படை. இந்த புரதங்கள் அதிகமாக தானியங்களில் இருக்கின்றன. அவை முளைகட்ட வைக்கும்போது இன்னும் கூடுதலான பலன்களைக் கொடுக்கின்றன.

தானியங்களை முளைகட்ட வைத்து, அதை அப்படியே பச்சையாக காலை உணவில் அல்லது காலை நேர சிற்றுண்டி நேரங்களில் சாப்பிடுவது மிகச் சிறந்தது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். கலோரியும் மிகக் குறைவு. நார்ச்சத்துக்கள் மிகுதி.

காலை நேர உணவாகவோ அல்லது காலை மற்றும் மாலை நேரங்களில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தால் அதற்கு சிறந்த தேர்வு முளைகட்டிய பயறு வகைகள் தான். குறிப்பாக முளைகட்டிய கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

சிலருக்கு அடிக்கடி பசி எடுக்கும். குறிப்பாக எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது மிகக் குறைவாக சாப்பிடுவார்கள். அதனால் சீக்கிரமே பசி எடுத்து விடும். அதேபோல நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கும் அடிக்கடி பசி எடுப்பதுண்டு. இவர்கள் இந்த முளைகட்டிய தானியங்களை தேர்வு செய்வது நல்லது.

பலன்கள்:

முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான சக்தியை தருபவை. மேலும் உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

இதில் வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால், கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; பார்வைத் திறன் மேம்படும்.

இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.

அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன..

முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பி, சருமத்தைத் மென்மையாக்கும். தோல் புற்றுநோயைத் தடுக்கும்..

இவற்றில் இருக்கும் சிலிக்கா நியூட்ரியன்கள், சருமத்தில் ஏற்படும் செல் இழப்பைத் தடுத்து, செல் மறுசீரமைப்புக்குத் துணைபுரிகிறது.

அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் இவற்றில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலைத் தடுக்கிறது.

இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தடுக்கிறது. ரத்தசோகை நோயைத் தடுக்கிறது.

பொதுவாக முளைக்கட்டிய பயறுகளுடன் பொடியாக நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய் சேர்த்து சிறிது உப்பு, மிளகுப் பொடி மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு சாலட் போல எடுத்துக் கொள்ளலாம்.

இது அடுத்த வேளை உணவு நேரம் வரையிலும் பசி எடுக்காமல் கட்டுப்படுத்தும். வயிறு நிரம்பிய திருப்தியைக் கொடுக்கும். உடலுக்குத் தேவையான எல்லா வகை ஊட்டச்சத்தும் இதில் கிடைக்கும். அதனால் தான் முளைகட்டிய பயறுகளை சிறந்தது என்று சொல்கிறோம்.

இதில் கலோரிகளும் மிகக் குறைவு. 100 கிராம் அளவுககு முளைகட்டிய பயறில் வெறும் 100 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. இதை எடுத்துக் கொண்டால் குறைந்தது 3-4 மணிநேரங்களுக்கு வயிறு முழுமையாக இருக்கும். அதோடு 0.38 கிராம் அளவுக்கு கொழுப்பைக் குறைக்கும். அதனால் கொலஸ்டிரால் குறைந்து எடையும் குறைய ஆரம்பிக்கும்.

நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் நீரிழிவு மற்றும் உடல் பருமன் இரண்டுக்குமே நல்லது. 50 கிராம் அளவு முளைகட்டிய பயறுகளில் இருந்து கிட்டதட்ட 7.8 கிராம் அளவுக்கு நார்ச்சத்து பெற முடியும்.

நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் அடிக்கடி பசி எடுப்பது போன்ற பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஒரு சிறிய கப் முளைகட்டிய பயறில் இருந்து 14 கிராம் வரைக்கும் புரதத்தைப் பெற முடியும்.

நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி உடலை உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்ய இந்த முளைகட்டிய பயறுகள் உதவுகின்றன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News