Mokka jokes: உங்களை சிரிக்க வைக்க சில மொக்க ஜோக்ஸ்

Mokka jokes: உங்களை சிரிக்க வைக்க சில மொக்க ஜோக்ஸ்களை பார்ப்போம்.

Update: 2023-09-16 06:37 GMT

Mokka Jokes : நாள்தோறும் வேலைக்கு செல்பவர்கள் சிலர் பணி நிமித்தமாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு சற்று நிம்மதியை ஏற்படுத்தும். அவ்வாறு சில ஜோக்குகளை படித்து தெரிந்துகொள்வோம்.

சார் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?

பதில்: நோயோட தான்



காதலிக்கிறங்கவுங்க ஏன் எப்ப பார்த்தாலும் பொய்யே பேசுறாங்க?

பதில்:ஏன்னா அவங்க தான் மெய் மறந்து காதலிக்கிறாங்களே.

எங்க அம்மா சர்க்கரை டப்பால உப்பு னு எழுதி வெச்சாங்க ஏன்?

பதில்: எல்லா எறும்பையும் ஏமாத்துறதுக்கு

ஒரு போலீஸ் தேங்காயை ஒடச்சி ஸ்டேஷன் க்கு எடுத்துகுடு பொன்ராம் ஏன் ?

பதில்: பொய் கைதியை துருவி துருவி கேள்வி கேக்க

எந்த ஆத்துல மீன் பிடிக்க முடியாது.?

பதில்: ஐயர் ஆத்துல

எந்த எழுத்தை எழுத முடியாது.?

பதில்: தலையெழுத்து



எந்த கடிகாரம் correct time காட்டும்.?

பதில்: எந்த கடிகாரமும் காட்டாது நம்ம தான் பார்க்கணும்.

கடற்கரையில வீடு கட்டுனா என்ன ஆகும்.?

பதில்: காசு செலவாகிடும்.

கதவு மூடிட்டு தான் மருந்து குடிக்கணுமாம் ஏன்.?

பதில்: டாக்டர் மருந்து அறை மூடி குடிக்கணும்னு சொன்னாராம்.

ஒருத்தன் speed அபைக் ஓட்டிட்டு போனான் தீடிர்னு பைக் நிறுத்திட்டினாம் ஏன்.?

பதில்: ஏன்னா அவன் வீடு வந்துருச்சா.

தலைவலிக்கு முக்கிய காரணம் என்ன.?

பதில்: தலை தான் தாங்க

எலுமிச்சைப்பழம் ஏன் மஞ்சள் நிறமாக இருக்கு.?

பதில்: ஏன்னா அது பல் வழக்கல

எந்த காட்டிலும் கிடைக்காத பூச்சி என்ன பூச்சி.?

பதில்: கண்ணாமூச்சி

டாக்டர் ஊசி போட வரும் போது ஒருத்தன் தடுத்தான் ஏன்.?

பதில்: அது தடுப்பூசி

ஒருவர் 15 மணி நேரம் chair – லே இருந்தாராம் ஏன்.?

பதில்: ஏன்னா அவர் Chairman

ஒரு பச்சை கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்.?

பதில்: ஈரமாகும்

மரம், செடி இல்லாத காடு எது.?

பதில்: சிம்கார்டு

கல்யாண வீட்டில் ஏன் வாழை மரம் கட்றாங்க.?

பதில்: கட்டலானா கீழே விழுந்துடும்


கோலம் போடுவதற்கு முன்னடி எதுக்கு தண்ணீர் தெளிக்கணும்.?

பதில்: கோலம் போட்டதுக்கு அப்புறம் தெளிச்ச கோலம் அழிஞ்சுடும்.

ஒருத்தன் தினமும் இரவில் தலைக்கு அடில dictionary book வெச்சு தூங்குறானாம் ஏன் ?

பதில்: ஏன்னா அவனுக்கு தினமும் நைட் அர்த்தமில்லாத கனவு வருதாம்

Tags:    

Similar News