மௌனம் என்னும் பேராயுதம்! பயன்படுத்திப் பாருங்க..

Mounam Kavithai in Tamil-இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை மௌனம் போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.;

Update: 2022-09-15 13:03 GMT

Mounam Kavithai in Tamil

Mounam Kavithai in Tamil

மௌனம், ஓர் அழகான மொழி. மனிதரைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம், அவருக்கு விருப்பமானவரின் மௌனம்தான். மௌனம், சொற்கள் இல்லாத நூல். மௌனத்தின் மதிப்பை பெரும்பாலும் அறிந்தவர்கள் சித்தர்களே என்று சொல்லப்படுகிறது.

மௌனமாக இருப்பதுதென்பது, பலருக்குச் சிரமமாகவே உள்ளது. அதிலும் வாட்சப் போன்ற சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில், எந்நேரமும் காதுகளுக்குள் ஒலிஅலைகள் சென்றுகொண்டே இருக்கின்றன. கண்களுக்கும் ஓய்வு கொடுக்கப்படுவதில்லை.

மௌனம் என்பதை, வெளிப்புற மௌனம், உட்புற மௌனம் என இரு வகையாகப் பிரிக்கின்றனர், உளவியலாளர்கள். வெளிப்புற மௌனமென்பது, யாருடனும் பேசாமல் நமக்குள்ளே ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு வாழ்வது. அந்த சிறிய வட்டத்துக்குள் நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்வதாகும். அப்போது, அந்த மௌனம், உட்புற மௌனத்தை, அதாவது, அக மௌனத்தைப் பற்றி அறிய வைக்கிறது.

இந்த அக மௌனம், நம்மை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. அது மனஅமைதியைக் கொடுக்கிறது, அது நமக்குள்ளே துணிவு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, ஒற்றுமை, பிறரன்பு போன்ற நல்லுணர்வுகளை ஊற்றெடுக்கச் செய்கின்றது.

மௌனம் பற்றிய அருமையான பொன்மொழிகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே.

தீர்க்க முடியாத சில பிரச்சனைகளுக்கு அமைதியாக இருந்துவிடுங்கள் காலம் அதனை தீர்த்துவிடும்

பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து!

சில காயங்களுக்கு பிரிவு மருந்து!

எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி!

எப்போதும் அமைதியாக இருங்கள், எல்லாம் இருந்தும் அமைதியாய் இருக்கும் நூலகத்தைப்போல.

உலகத்தில் மனிதன் அதிகமாக நேசிக்க கூடியது, அமைதியும் நிம்மதியுமே…

அமைதியாக விலகுவது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்.

எந்தவொரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த விடை "மௌனம்"

எனது மௌனம் என்பது திமிரல்ல எனக்குள் இருக்கும் வலி.

அமைதியை தேடாதே. அமைதியாய் மாறி விடு.

அமைதி என்ற நண்பன் எப்போதும் துரோகம் செய்வதில்லை

புன்னகையும் மௌனமும் பலம் வாய்ந்த ஆயுதங்கள்

புன்னகை, பிரச்னைகளை தீர்க்கும்

மௌனம் பிரச்னை வரவிடாமல் தடுக்கும்

நம்மிடையே சொல்வதற்கு பதில்கள் நிறைய இருந்தும், புரிதல் இல்லாதவர்கள் முன் மெளனத்தை தேர்ந்தெடுப்பது சிறந்த பக்குவம் ஆகும்.

நம்மை நேசிப்பவருக்கு நம் வார்த்தை மட்டுமல்ல... மெளனம் கூட புரியும்

சில சூழல்களில் மெளனமாக இருப்பது, பேசத் தெரியாமல் அல்ல! எதையும் பேசி விடக்கூடாது என்பதற்காகவே!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News