வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும், தொப்பையை குறைக்கும் கடுக்காய் பற்றித் தெரிந்து கொள்வோமா?
வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும் கடுக்காய் பயன்கள் குறித்து, சில மருத்துவ தகவல்களை அறிந்து கொள்வோம்.;
கடுக்காய். (மாதிரி படம்).
நமது இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை 15 நாட்களில் 2 முதல் 3 அங்குலம் வரை குறைக்க முடியும் என்று கூறுகின்றனர் சித்தர்கள். அதற்கு நீங்கள் கடுக்காயை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது சித்தர்களின் கூற்று ஆகும்.
உடல் பருமன் என்பது ஒரு தீவிர நோயாகும். ஏனென்றால், இது பல ஆபத்தான நோய்களை ஏற்படுத்துகிறது. இதில், அசாதாரணமான மற்றும் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேரத் தொடங்குகிறது, இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உலகெங்கிலும் உள்ள மக்கள், இன்றைய வாழ்க்கை முறையினாலும், உணவு பழக்கத்தினாலும் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதிலும், தொப்பையும், இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பும் உடல் தோற்றத்தையும் கெடுக்கிறது.
உடல் எடையை குறைக்க உடல் பருமன் தொப்பையை கரைக்க கடுக்காய் பெரிதும் பலன் தரும். எல்லா நோய்களும் வயிறு தொடர்பான பிரச்னைகளில் இருந்துதான் தொடங்குகிறது. அதனால் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம்.
15 நாட்களில் இடுப்பு 2-3 அங்குலம் குறையும்:
ஆயுர்வேதத்தில் கடுக்காய் பொடியின் பயன்பாடு ஏராளம். திரிபலாவில் பயன் படுத்தும் மூன்று பொருட்களில் கடுக்காயும் மிகவும் முக்கியமானது. கடுக்காய் என்பது ஒரு உலர்ந்த பழமாகும். இந்த பழம் சீன, நேபாளம் மற்றும் இலங்கையில் பரவலாக காணப்படுகிறது. மருந்துகளின் அரசன் என்று அழைக்கப்படும் இந்த அதிசய பழம் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
கடுக்காய் செரிமானத்தை அதிகரித்து, வளர்ச்சி சிதை மாற்றத்தை ஊக்குவித்து, உடல் பருமனை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. கடுக்காய் பசியை கட்டுப் படுத்துவதால், நீங்கள் சாப்பிடும் கலோரிகள் எண்ணிக்கையும் வெகுவாக முறையும்.
15 நாட்களில் தொப்பையை குறைக்க..:
முதலில் கடுக்காயை வாங்கி பொடி செய்து கொள்ளலாம். அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய் பொடியை வாங்கிக் கொள்ளலாம். இப்போது இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும். மலச்சிக்கல் குணமாகும். இந்த பொடியை வெந்நீரில் கலக்கி நீங்கள் காலையிலும் அருந்தலாம். அப்படிச் செய்வதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும்.
அதாவது மலச்சிக்கல் நீங்கும். கபம் சமநிலைப்படும். இந்த மருந்தின் மூலம், வயிற்றில் உள்ள வாயு எளிதில் வெளியேறுகிறது மற்றும் வாய்வு பிரச்சனை இருக்காது. எனினும் கடுக்காயின் விதைகள் விஷம் என கூறப்படுகிறது. எனவே அதனை நீக்கி விட்டே பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள்.
கடுக்காய் பொடியின் நன்மைகள்:
கடுக்காய் பொடியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள், ப்ளவனாய்டுகள் போன்ற மூளைக்கு ஆற்றலை தரக் கூடிய பண்புகள் உள்ளன. இதனால் நினை வாற்றல் திறன், அறிவாற்றல் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. கடுக்காய் மல சிக்கலை போக்கி, வயிறு கோளாறுகளை நீக்குவதால், மூல நோய் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கிறது.
கடுக்காய் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து, உடலில் இன்சுலின் உணர் திறனை குறைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை வேக மாக குறைக்க உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
கடுக்காயை பொடியை பயன்படுத்துவது குறித்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. என்னெனில் உங்கள் உடல் நிலைக்கும் ஏற்ற அளவினை அவர் பரிந்துரைப்பார். இந்த மூலிகையை அதிகப்படியாக எடுத்துக் கொள்வது நீரிழப்பு, வயிற்றுப்போக்கு, சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.