Self Confidence Quotes In Tamilதளராதீர்! தன்னம்பிக்கையை கைவிடாதீர்!! Self Confidence quotes in Tamil

Self Confidence Quotes In Tamil-வாழ்வில் வெற்றி பெற்ற பல மனிதர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது அவர்களின் தன்னம்பிக்கை தான்;

Update: 2022-09-13 15:44 GMT

தன்னம்பிக்கை

Self Confidence quotes in Tamil தன்னம்பிக்கை என்பது வாழ்வில் வெற்றி பெற மிக அவசியமான ஒன்றாகும். நம் வாழ்வில் வெற்றி பெற விடா முயற்சி, பணிவு, ஊக்கம், சிந்தனை மற்றும் அர்ப்பணிப்பு என பல காரணிகள் முக்கியமாக இருந்தாலும், தன்னம்பிக்கை மிக தேவையான ஒன்றாகும்.

நம் வாழ்வில் என்னதான் பல ஏமாற்றங்கள், தோல்விகள், சோகங்களை எதிர்கொண்டாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்க கூடாது. வாழ்வில் வெற்றி பெற்ற பல மனிதர்களின் வெற்றிக்கு காரணமாக அமைவது அவர்களின் தன்னம்பிக்கை தான்.

நாம் சோர்ந்து போய் இருக்கும் போது மனதிற்கு தன்னம்பிக்கை தரும் வரிகள் சிலவற்றை பார்ப்போம்.


பேராசைக்கும் லட்சியத்திற்கு

கொஞ்சம் தான் வித்தியாசம்.

முயற்சி இல்லாத கனவு பேராசை...

முயற்சியுடன் கூடிய கனவு லட்சியம்

முடியும் வரை முயற்சி

செய்யுங்கள்,

உங்களால் முடியும் வரை அல்ல

நினைத்த காரியம் முடியும் வரை

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது

தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது.

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்!

ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.


நல்லவன் படகில் போகும் போது

துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கிவிட்டால்

நதியே திசை மாறி அவன் சேர வேண்டிய இடத்தில்

கொண்டு போய்ச் சேர்த்துவிடும்

கஷ்டத்திலும் நேர்மையாக இரு நீ ஏமாற்றப் பட்டாலும் பிறரை ஏமாற்றாதே உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்

இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கி கொள்ளுங்கள் இருட்டையே வெளிச்சமாக்கி கொள்ளுங்கள் நஷ்டத்தையே இலாபம் ஆக்கிக்கொள்ளுங்கள் எது நேர்ந்தாலும் கவலைப்படாதீர்கள்

போவதை கண்டு கலங்காமல்

வருவதை கண்டு மயங்காமல்

பயந்து பயந்து நடுங்காமல்

கோபத்தினாலே குதிக்காமல்

எவன் இருக்கிறானோ

அவன் தான் உறுதியான அறிவு வாய்ந்தவன்


ஆறு கிழக்கு நோக்கித்தான் போகும் என்றால் மேற்கே நோக்கி போகிறவன் எதிர்நீச்சல் போட்டு தான் ஆக வேண்டும்

நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான்

சந்தர்ப்பம் கிடைப்பதால் திறமையற்றவன் உயர்ந்து விடுவதும் உண்டு

அது கிடைக்காததால் திறமை உள்ளவன் இடம் தெரியாமல் போவதும் உண்டு

உனக்கென்று சில சுய தர்மங்களை வகுத்துக் கொள். பத்து பேருக்கு உதவுகிறது என்று வைத்துக் கொண்டால், எந்த பத்து பேரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாதோ அவர்களுக்கு உதவு


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News