சுவையும் மிகுதி, சத்தும் அதிகம் அட நம்ம வஞ்சிரம் மீன் தாங்க

Vanjaram Fish Benefits in Tamil - ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் வஞ்சிரம் மீன் எப்போதும் முதன்மையாக இருக்கிறது;

Update: 2022-09-02 07:52 GMT

வஞ்சிரம் மீன்

Vanjaram Fish Benefits in Tamil -வஞ்சிரம் மீன்கள், கடலில் வாழும் இவை வேகமாக நீந்தும் திறன் பெற்றவை. மேலும் எதிரிகளிடம் மாட்டிக்கொண்டால் கடுமையாகப் போராடும் குணம் கொண்டவை.

இவற்றின் பற்கள் கூர்மையாக இருக்கும் என்பதால், இவற்றை மீனவர்கள் கவனமாகக் கையாளுவார்கள். இதன் உடல் நீண்டு காணப்படும். 4 முதல் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது. தாடைகளின் பற்கள் கடினமானது. போலிச் செவுள்கள் உண்டு. இரு முதுகுத் துடுப்பு இருந்தாலும், முதலாவது துடுப்பு வலிமை அற்றதாகவும், இரண்டாவது துடுப்பிற்குப் பின் 7 அல்லது அதற்கு மேற்பட்ட துணைத் துடுப்புகள் உள்ளன.

இவை விரைவாக நீந்தும் ஆற்றல் உடையவை. மேலும் நீரின் மட்டத்திலிருந்து மிக உயரத்திற்கு தாவி துள்ளி விளையாடும் ஆற்றல் உடையவை. மத்தி, காரப்பொடி போன்ற மீன் கூட்டத்தையும் இரால்களையும் பிடித்து உண்பதற்கு துரத்திச் செல்லும் இயல்புடையது. இந்தியப் பெருங்கடலில் வஞ்சிரம் மிகுந்து காணப்படும். கடலின் திறந்த பரப்பைவிட கரையோரப் பகுதிகளில் அதிகம் காணப்படும்

சுவை மிகுந்த வஞ்சிரம் மீன்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பல பகுதி மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றன. இவை கேரளாவில் நெய்மீன் என்றும் இலங்கையில் தோரா என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் இந்த மீன் எப்போதும் முதன்மையாக இருக்கிறது. இந்த மீனில் அதிக அளவில் புரதம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

வஞ்சிரம் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைச் சீராக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மீன் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். ஏனெனில், இதில் இருக்கும் டி.ஹெச்.ஏ எனும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News