உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை: Relationship quotes in Tamil
Relationship Quotes in Tamil -ஒருவருக்கு அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் சில மேம்போக்கானவையாகவும் இருக்கும்;
Relationship Quotes in Tamil -அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
என்று ஔவையார் பாடியுள்ளார்
கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
இது திருவள்ளுவர் கூறியது. அதாவது, இடர் வந்த காலத்தில்தான் நண்பர்கள் , உறவினர்கள் ஆகியோரின்அன்பைத் திட்டமாக அளந்தறியலாம். நமக்கு வரும் இடர்தான், அதனை அளக்கும் அளவுகோல். ஆதலால் அக்கேட்டிலும் ஒரு பலன் உளது என்று கூறுகிறார்
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் என்கிறார் ராமலிங்க அடிகளார்
எனவே உறவு என்பது நம் வேலை, குடும்பம், சுற்றம், உற்றார் உறவினர் என்று பலநிலைகளில் பலவிதமான உறவுகள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட இன்றைய சமுதாயச் சூழ்நிலையில், அந்த உறவுகள் சிறக்க நம்மால் என்ன செய்யமுடியும்?
தேவையற்ற கோபத்தினால்
பல உறவுகளைத் தொலைக்கிறோம்
உங்களுக்காகவே வாழும்
உறவுகளின் மனதை
ஒரு போதும் நோகடிக்காதீர்கள்
சில உறவுகள்
வாழ்க்கையின்
பாதியில் வந்தாலும்
இறுதி வரை நிலைக்கின்றது
வறுமையில் இருக்கும் போது நம்மை நமது நண்பர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் வறுமையில் இருக்கும் போது நாம் நமது நண்பர்களை குறித்து தெரிந்து கொள்கிறோம்
ஒவ்வொருவரும் உறவுகளை பேணுவோம் உண்மையானவர்களை வாழ்வோம்.
சில குற்றங்களை மன்னிப்பதாலும்
சில குறைகளை மறப்பதாலும் தான்
இன்னும் உறவுகள் நீடிக்கின்றன.
அவசியம் இருந்தால் மட்டும்
பேசும் உறவுகளுக்கு மத்தியில்
அன்புக்காக பேசும் "சிலர்"
கிடைப்பது மிகப்பெரிய வரம்.
உறவு
உணர்வுகளை புரிந்துகொள்ளும்
உன்னதமான மொழி.
உறவுகள் விற்பனைக்கு அல்ல,
வாழ்வதற்கே, அன்பை ஆள்வதற்கே
இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர்ஆத்மா தாக்கப்படும்போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.
கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்கும் கட்டுப்போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம், சோதனையில் கூடவே வரும் நட்பு - உறவு பூர்த்தியாகிவிடுகிறது.
ஏங்கும் போது கிடைக்காத உறவு
அதன் ஏக்கம் முடிந்த பின்
கிடைத்து எந்த பயனுமில்லை.
உலகில் உறவு என்பது
புத்தகம். தவறு என்பது
ஒரு பக்கம்.ஒரு பக்கத்திற்காக
ஒரு புத்தகத்தை
இழந்து விடாதீர்கள்!
பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2