Ragi pakoda recipe -குளிருக்கு சூடாக சத்தான ராகி பக்கோடா; டேஸ்ட் பண்ணிப்பாருங்க!

Ragi pakoda recipe - ராகி பக்கோடா ருசிப்பதற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் சிறந்தது. அதனால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி ருசித்து சாப்பிடலாம்.;

Update: 2024-02-05 09:23 GMT

Ragi pakoda recipe- ராகி பகோடா சாப்பிடுங்க! (கோப்பு படம்)

Ragi pakoda recipe: ராகி மாவு இருந்தால் போதும் நாவிற்கு சுவையோடு மழைக்காலத்திற்கு ஏற்ற வகையில் பக்கோடா செய்து சாப்பிடலாம்..

மழைக்காலம் வந்தாலே சூடான டீ அல்லது காபியுடன் என்ன ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்ற எண்ணம் தான் தோணும்.. இவ்வாறு குளிருக்கு இதமாக என்ன ஸ்நாக்ஸ் செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு சிம்பிள் ரெசிபி இதுதான். 

மழைக்காலங்களில் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நாவிற்கு சுவையைக் கொடுக்கும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபிகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று தான் ராகி பக்கோடா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் ராகி பக்கோடாவை இந்த மழைக்கால நேரங்களில் எப்படி எளிமையாக செய்வது என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்.


தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்

வெங்காயம்( நறுக்கியது) - 1 கப்

மிளகாய் - 5

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு- சுவைக்கு ஏற்ப

எண்ணெய் - தேவையான அளவு

ராகி பக்கோடா செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் ராகி மாவு ( கேழ்வரகு மாவு), பொடியாக நறுக்கிய வைத்துள்ள வெங்காயம், மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

இதனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பக்கோடா பொரித்து எடுக்கும் பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள கலவையை எண்ணெய் உதிர்த்து விட்டு, பொரித்தால் போதும் சுவையான ராகி பக்கோடா ரெடி.


தற்போது பெய்துவரும் இந்த மழைக்கு கரண்ட் இல்லையென்றாலும் பரவாயில்லை. ராகி மாவு இருந்தால் போதும் நாவிற்கு சுவையோடு மழைக்காலத்திற்கு ஏற்ற வகையில் இந்த ராகி பக்கோடாவை செய்து சாப்பிடலாம்..

கேழ்வரகில்(ராகி)உள்ள மருத்துவ குணங்கள்:

கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த உதவியாக உள்ளது.

இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்த சோகையைக் குணப்படுத்த இது உதவியாக உள்ளது.

கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது.

கேழ்வரகில் உள்ள கலோரிகள் உடலை எப்போதும் ஆற்றலோடு வைத்திருக்க உதவுகிறது.

மெத்தியோனைன் மற்றும் லைசில் இருப்பதால் சரும செல்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைப்பதோடு மட்டுமின்றி விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

கேழ்வரகு,கேப்பை என அறியப்படும் ராகி சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். இது இன்றைக்கும் பல கிராமங்களில் பிரதான உணவாக உள்ளது. இதில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டத்துக்கள் உள்ளதால் ஆரோக்கியமான உணவுப்பொருள்களின் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் ராகி பக்கோடா இனிமேல் அடிக்கடி சாப்பிடுங்க! 

Tags:    

Similar News