ருசியான புதினா புலாவ், ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?

Putina Pulao, Jawarisi Upluma Recipe- புதினா உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. புதினா புலாவ், ருசியான ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்வோம்.

Update: 2024-07-05 15:47 GMT

Putina Pulao, Jawarisi Upluma Recipe- புதினா புலாவ், ஜவ்வரிசி உப்புமா ரெசிப்பி ( கோப்பு படங்கள்)

Putina Pulao, Jawarisi Upluma Recipe- புதினா புலாவ்

தேவையான பொருட்கள்:

எண்ணெய் இரண்டு ஸ்பூன்

வெட்டிய பூண்டு

பட்டை இரண்டு

கிராம்பு நான்கு

புதினா ஒரு கிண்ணம் கொத்தமல்லி ஒரு கிண்ணம்

இஞ்சி ஒரு துண்டு

இரண்டு பச்சை மிளகாய்

செய்முறை;

எண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றி வெட்டிய பூண்டினை வதக்கி அதில் பட்டை கிராம்பு வெட்டிய இஞ்சி இரண்டு பச்சை மிளகாய் ஒரு கிண்ணம் புதினா ஒரு கிண்ணம் கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு வதக்கி ஆரியபின் மிக்ஸியில் போட்டு உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும் .

பின் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு உள்ளி போட்டு வதக்கி இரண்டு பச்சை மிளகாய் கருவேப்பிலை வேகவைத்த பட்டாணி அதனுடன், அரைத்த விழுது போட்டு வதக்கி அடுப்பை அணைக்கவும். பின்னர் சாதத்தை போட்டு விரவி லேசாக நெய் விட்டு கிளறி இறக்கவும்.

இந்த புதினா புலாவிற்கு உருளைக்கிழங்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.


ஜவ்வரிசி உப்புமா

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி 100 கிராம்

பாசி பருப்பு 100 கிராம்

கடுகு

நெய்    2 ஸ்பூன்

கொஞ்சம் கருவேப்பிலை

முந்திரி 50 கிராம்

கொத்தமல்லி தேவைக்கேற்ப


செய்முறை;

ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை  தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேகவைக்கவும்.

சட்டியில் நெய் ஊற்றி முந்திரியை சிவக்க வறுத்து எடுக்கவும். பெண்ணை ஊற்றி காயத்தூள் ஒழுந்து மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு கருவேப்பிலை சேர்த்து இதனுடன் வேக வைத்த பயத்தம் பருப்பை தண்ணீர் வடிகட்டி போட்டு, வதக்கி லேசான தீயில் வைத்துக்கொண்டு அதனுடன் தேங்காய் துருவல், உப்பு ஊறவைத்த ஜவ்வரிசி போட்டு கிளறி இரண்டு ஸ்பூன் நெய் விட்டுக் கிளறி மூடிவிடவும். அடுப்பை அணைத்ததும் முந்திரி கொத்தமல்லி, கருவேப்பிலை போடவும்.

Tags:    

Similar News