வாழ்க்கையிலே போட்டி இருக்கலாம் ஆனா பொறாமை இருக்க கூடாதுங்க...
Poramai Quotes in Tamil-வாழ்க்கையில ஜெயிக்கணுமுன்னா ஒரே குறிக்கோளோடு இருக்கணும்.மற்றவர்களைப் பார்த்துபொறாமைப்படுவது வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றத்தையும் தராது.... பின்தங்கிவிடும்.;
Poramai Quotes in Tamil
Poramai Quotes in Tamil-மனிதர்களுக்கு உரிய குண வகைகளில் ஒன்று தான் பொறாமைக்குணம். அதாவது மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவது என்பது தேவையில்லாத ஒன்று. உன்னுடைய வசதிக்கு தகுந்தவாறு நீ வாழக்கற்றுக்கொள்ளவேண்டும். விரலுக்கு தகுந்த வீக்கம் போல்.ஆனால் மற்றவர்களின் வாழ்க்கையினைக் கண்டு பொறாமைப்படுவது அவரவர்களே அவர்களுடைய முன்னேற்றத்திற்கான தடைக்கல்லாகி விடுகிறார்கள்.
ஒன்று மட்டும் உண்மைங்க... யார் பொறாமைப்பட்டாலும் வாழ்க்கையில வளர்கிறவன் வளர்ந்துகிட்டுதானிருப்பாங்க..
இந்த உலக வாழ்க்கையானது சக்கரம்போன்றது. அது எப்படி எங்க நிற்கும் என்பது யாருக்கும் தெரியாது. வாழ்க்கையிலே போட்டி இருக்கலாமுங்க... அது நல்லது..ஏற்றுக்கொள்ளவேண்டியது. போட்டி இருக்கும்போது சாதிக்கும் நாள்தொலைவில் இல்லை என உணர்ந்துகொள்ளலாம். காரணம் உங்களுடைய போட்டியானது ஆரோக்யமானதாக இருக்க வேண்டும்.அதிலும் கள்ளத்தனம் இருந்தால் ஒன்றுமே செய்யமுடியாது.
நண்பர்களில்கூட வளர்ச்சியைக் கண்டு போட்டிஇருக்கலாம். பொறாமை இருக்க கூடாது.பொறாமை என்பது தீயசக்தி. அதனை நாமே அழித்துவிட வேண்டும். இல்லாவிட்டால்அது நம்மை அழிக்க பார்க்கும். யார் யாரைப்பார்த்துபொறாமைப்பட்டு உங்களிடம் சொன்னால் கூட அவர்களுக்குஅந்த குணத்தினை அடியோடு விட்டுவிட புத்திமதி சொல்லுங்க...
பொறாமைக்கான வாசகங்களைப் பார்ப்போமா
கடைசி சொட்டு தண்ணீரும் அரிசியும்தீரும் போது தான் மனிதனுக்கு இதைஉணர்ந்து கொள்ளும் பக்குவம் வரும்.
அன்பு பாசம் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை ஏன்னென்று.
மனிதம் மறித்து விட்டால் மனித இனம் மறித்து விடும்.
பிறர் காயங்களை எளிதில் கடக்கும் நாம்நம் காயங்களை கடப்பது கடினம்.
வெளி காயங்களை தாங்கும் மனதால்மன காயங்களை தாங்க முடிவதில்லை.
கஷ்டங்களை நினைத்துகஷ்டப்படுவதை விட்டுவிட்டு.கஷ்டங்களை காதலித்து பார்.
உன் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை அது காட்டும்.
சலனம் இல்லாத நீரில்தான்பிம்பம் தெளிவாக தெரியும்மனம் அமைதியாக இருந்தால் தான்புத்தி தெளிவாக இருக்கும்...
சில சந்தர்ப்பங்கள் உன்னைமுட்டாள் ஆக்கலாம் அது பரவாயில்லை..!
ஆனால் அது உன்னைமுடவனாக்கி விடாமல் பார்த்துக்கொள்...!!
நீ உத்தமனாக வாழ வேண்டாம்.ஆனால், எதற்கும் உதவாதவனாகமட்டும் வாழ்ந்து விடாதே...!
பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும்பண முதலைகளுக்கு தெரியாது.பாசம் என்பது பணத்தை விடஉயர்ந்தது என்று.
எவ்வளவு தான் மேகம் மூடினாலும்வெளிவரும் நேரம் வரும்போது
நிச்சயம் வெளிவரும் சூரியன்...அது போல் தான்...!எவ்வளவு தான் மூடி மறைத்தாலும்.ஒரு நாள் உண்மை ஆதாரத்துடன் வெளிவரும்...!
சிறிய காரியமாக இருந்தால் சிதறாமல் செய்.அதுவே பெரிய காரியமாக இருந்தால்யாரிடமும் சொல்லாமல் செய்.
அந்த காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை.ஆனால் எல்லோரிடமும் நேரம் இருந்தது.
இந்த காலத்தில் யாரிடமும் நேரம் இல்லை.ஆனால் எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது.
வாழ்க்கையில் விதியின் சதியால்பாதிக்கப்பட்டவனும் சோதிக்கப்பட்டவனும்
பாவப்பட்டவன் அல்ல பக்குவப்பட்டவன்.
"அன்பு" விற்கும்"அம்பு" விற்கும்"பண்பு" ஒன்றே
கடனாக இருந்தாலும் சரி.அன்பாக இருந்தாலும் சரி.
திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு..!
உண்மைகளுக்கு கனம் அதிகம்காற்றில் பரவாது....!பொய்களுக்கு கனம் குறைவுகாற்றில் பரவிவிடும்....!
பொறுமை ஒருபொழுதும்தோற்பதில்லை.பொறாமை ஒருபொழுதும் ஜெயிப்பதில்லை.
பக்குவம் என்பது யாதெனில்.நீ குணத்தில் சுத்த தங்கமாக இருந்தாலும்.செம்பு கலக்காத வரை நீ பயன்பாட்டுக்குஉகந்தவன் இல்லை என்பதை உணர்வதே.
கற்களை சேர்ப்பதில் மும்முரமாக இருந்துவைரத்தை இழந்து விடாதீர்கள்...
நம்முடன் பலர் இருக்கின்றனர் என்றுஉண்மையான ஒருவரை இழந்து விடாதீர்கள்...
வாழ்க்கையில் எதுவுமே நமக்கு மட்டுமல்லஎன்பதை உணர்ந்து கொண்டால்,
சந்தோஷங்கள் மட்டுமல்லதுக்கங்களும் கொண்டாட்டத்திற்குரியதே.
உங்கள் கவலை, துன்பம், ரகசியம் அனைத்தையும் கடவுளிடம் மட்டும் பகிருங்கள். உறவுகளிடம் பகிர்ந்தால், உங்கள் கவலை, துன்பம், ஏமாற்றம் இரட்டிப்பு ஆகக்கூடும்.
உணர்வுகளை மதிக்கத் தெரியாத இடத்தில்கோபுரமாய் இருப்பதை விட....உணர்வுகளை மதிக்கத் தெரிந்த இடத்தில்குப்பையாய் இருப்பதே மேல்....
பாம்பு எத்தனை முறை தோலை உரித்தாலும்அது எப்போதுமே பாம்பு தான்.
பச்சோந்தி எத்தனை முறை நிறம் மாறினாலும்அது எப்போதுமே பச்சோந்தி தான்.
துரோகம் துரோகம் தான் ஏமாற்றம் ஏமாற்றம் தான்.
போராடி கிடைத்தது கருவறை..!தேடலால் கிடைத்தது வகுப்பறை..!
தேடிக் கிடைத்தது மணவறை..!தேடாமல் கிடைக்கும் கல்லறை..!!
காலம் எதையும் மாற்ற வல்லது அது நன்மையானாலும் சரி தீமை ஆனாலும் சரிஇருக்கும் போது கிடைக்காத நீதியும்.இறந்த பின் கொடுக்கும் திதியும்.இறந்த பின் கிடைக்கும் நிதியும்.இறந்தவருக்கு யாதொரு பயனும் இல்லை.
நாம் கண்மூடித்தனமாய்நம்பிய உறவுகள்காயம் தராமல்கடந்ததில்லைநம் வாழ்க்கையில்...!
கொடிய மிருகங்கள்நம்முள்ளேதான் இருக்கின்றதுஅதை கட்டுபடுத்த தெரிந்தவர் ஞானி
அதை கட்டவிழ்த்து விடுபவன் மகா பாவி...!
நீ விரும்புவதை செய்வதில்உன் சுதந்திரம் அடங்கியுள்ளது.நீ செய்வதை விரும்புவதில்உன் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.
நாம் செய்த தவறுக்கு கிடைக்காத தண்டனை.செய்யாத தவறுக்கு கிடைக்கும் போது தான்.
வாழ்க்கையே புரிய ஆரம்பிக்கிறது.
கஷ்டங்களை தாங்கும் இதயம்காயங்களை தாங்குவது இல்லை.வலிகளை தாங்கும் இதயம்கடுமையான வார்த்தைகளை தாங்குவது இல்லை.ஏமாற்றத்தை தாங்கும் இதயம்
முட்டாள் பழி வாங்க துடிப்பான்.புத்திசாலி மன்னித்து விடுவான்.அதி புத்திசாலிஅந்த இடத்திலிருந்தே விழகி விடுவான்.
விழுவதற்கு உன் கால்கள் முடிவு செய்தால்.எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார் செய்.
விழுவது உங்கள் கால்களாக இருந்தால்.எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்.
ஒருவரின் தேவை அறிந்துஅவர் கேட்காமலேநீ உதவி செய்வாய் என்றால்.நீயும் கடவுள் தான்.
சூழ்நிலையால் மாறுகிறவர்கண்ணீரோடு மன்னிப்புக் கேட்பார்...
சுயநலத்தால் மாறுகிறவர்கோபத்தோடு தர்க்கம் புரிவார்கள்...!
கஷ்டப்பட்டு வாழணும் என்று வாழாமல்நாலு பேருக்கு நல்லது பண்ணி இஷ்டப்பட்டு வாழுங்கள்.கவலையின் முடிச்சுகள் ஒருபோதும்மகிழ்ச்சியை கொடுப்பது இல்லை...!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2