பிளே ஸ்கூல் கலாச்சாரம்: குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்கள்

பிளே ஸ்கூல் கலாச்சாரத்தில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

Update: 2024-07-04 16:24 GMT

சிறிது காலம் முன்பு வரை பிளே ஸ்கூல் என்பதெல்லாம் இல்லை. எல்கேஜி தான் பள்ளி படிப்பின் தொடக்கமாக இருந்தது. அதற்கும் அன்பு நேரடியாக ஒன்றாம் வகுப்பு தான். ஆனால் இப்போது பிளே ஸ்கூல்கள் பிரபலமாகி வருகின்றன. பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் பிளே ஸ்கூலுக்கு அனுப்புவது வழக்கமாகி உள்ளது.

இதன் மூலம் பள்ளி செல்வதற்கு முன் அடிப்படையான பல விஷயங்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படும் என்று பெற்றோர் கருதுகின்றனர். அப்படி உங்கள் பிள்ளையை பிளே ஸ்கூலுக்கு அனுப்புகிறீர்கள் என்றால் நீங்களும் சில முக்கிய விஷயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அப்படி என்றால் என்ன விஷயங்கள் அதான் பிளே ஸ்கூலில் சொல்லிக் கொடுப்பார்கள் என்று கூறாமல் கவனத்தில் கொள்ளுங்கள்.

சுத்தம் ,சுகாதாரம் என்பது போன்ற வார்த்தைகளுக்கு குழந்தைகளுக்கு அர்த்தம் கூட தெரியாது. எனவே இது போன்ற சூழ்நிலையில் அவர்களை பிளேஸ்கூலில் சேர்க்கும் முன் கழிவறைக்கு செல்வது என்றால் அது குறித்து ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை கூற வேண்டும். மேலும் கழிவறையில் எப்படி இயற்கை பாதையை கழிப்பது, உள்ளாடையை எப்படி கழட்டி மீண்டும் அணிவது என்றெல்லாம் பொறுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும். பிளே ஸ்கூலில் ஆடையை எப்படி அணிந்திருக்க வேண்டும் .அழுக்காக்கிக் கொள்ளக் கூடாது என்பதை எடுத்து சொல்லுங்கள்.

பிளே ஸ்கூலுக்கு மதிய உணவு கொடுத்து விடுவதில்லை.ஆனால் ஸ்னாக்ஸ் சாப்பிடுவார்கள் என்றால் அதற்கு முன் கை கழுவ வேண்டும் அது மிகவும் முக்கியம் என்று அன்போடு அறிவுறுத்துங்கள். குழந்தைகள் தங்களின் பெயரையும் பெற்றோரின் பெயர்களையும் தெளிவாக சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும். காரணம் குழந்தைகள் எங்காவது காணாமல் போக நேர்ந்தால் அவர்கள் தமது பெயர் மற்றும் பெற்றோர்களின் பெயர்களை அறிந்து இருந்தால் போலீசாருக்கும் பிறருக்கும் பெற்றோரை கண்டுபிடிப்பது எளிதாகிவிடும். முடிந்தால் பெற்றோரின் ஒரு செல்போன் இணையும் குழந்தை மனப்பாடம் செய்ய வைக்கலாம். இது போன்ற விஷயங்கள் குழந்தைகளுக்கு மிக சிறு வயதில் இருந்து கற்றுக் கொடுப்பது நல்லது தான் சிறு குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் புரிய வைக்க முடியாது என்றாலும் சக குழந்தைகளுடன் எப்படி இருக்க வேண்டும் புதியவர்களை அணுகினால் எப்படி நடக்க வேண்டும் என்பதை இயன்றவரை விளக்கிக் கொள்ளலாம்.

அதேபோல ஆசிரியர்களுக்கும் பெரியவர்களுக்கும் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்பதை உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுத்து விடுங்கள். அது மட்டும் இன்றி நன்றி சாரி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவும் சொல்லிக் கொடுங்கள். உங்கள் குழந்தையை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பும் முன் இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து செயல்படுங்கள். சில குழந்தைகள் பிளே ஸ்கூலுக்கு செல்ல மறுத்து அழுது அடம் பிடிக்கும். அப்போது குழந்தையிடம் கடுமை காட்டாமல் மென்மையாக எடுத்துச் சொல்லி அனுப்பி வைக்க வேண்டும்.

சில நாட்கள் பிளே ஸ்கூலுக்கு சென்று அங்கு ஆசிரியர்கள், சக குழந்தைகள், பொம்மைகள், படங்கள், எழுத்துக்கள் என்று அந்த சூழல் பிடித்து போனால் குழந்தைகள் உற்சாகமாக பழக  தொடங்கி விடுவார்கள் .எனவே பெற்றோருக்கும் பொறுமை மிகவும் அவசியம்.

Tags:    

Similar News