பல்லி நம் உடம்பின் மீது விழுந்தால் என்ன பலன்கள்: உங்களுக்கு தெரியுமா?......
Palli Vilum Palan-வீடுகளில் சுற்றித்திரியும் பல்லிகள் திடீரென பிடிமானம் இல்லாமல் கீழே விழும். ஒரு சில நேரத்தில் கீழே விழும்போது நாம் அந்த இடத்தில் இருந்தால் நம் உடம்பின் மீது விழுந்து கீழே ஓடிவிடும். அப்ப பலன்கள் என்ன? என பார்ப்பார்கள் ஒரு சிலர்... சரி படிச்சு பாருங்க...
Palli Vilum Palan-மனித வாழ்க்கையானது மகத்தானது. நம்பிக்கைதாங்க வாழ்க்கை. நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் சரிவர வாழ்க்கையை நடத்த முடியும். அவரவர்கள் அவரவர்களை முதலில் நம்ப வேண்டும். அதாவது தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தன்னம்பிக்கையில் சற்றும்குறைந்தால் கூட ஆபத்துதாங்க வாழ்க்கை.
ஆனால் நம்மில் ஒரு சிலர் இருக்கிறார்கள். ஜாதகம், ஜோசியம், பலன்கள் என பார்த்துக்கொண்டுதான் எந்த காரியத்தையும் செய்து கொண்டிருப்பார்கள். இதனை பார்க்க வேண்டியதுதான். எல்லா நேரத்திற்கும்இது ஒத்து போகுங்களா.... உதாரணத்திற்கு ஒரு நபருக்கு கவர்மென்ட் வேலைக்கு ஜாயின்ட் பண்ணச் சொல்லி லெட்டர் வருதுங்க. அன்று அஷ்டமியா இருந்தா என்ன செய்வீங்க...அஷ்டமி. நவமி எல்லாம் நம் வீட்ல பார்க்கலாம். வெளியில பார்த்தீங்கன்னா எந்த வேலையும் நடக்காது. மறைந்த சின்னக்கலைவாணர் விவேக் சொன்னது வருஷம் 365 நாளும் நல்ல நாள்தாங்க... நாமதான் அதனை பிரிச்சு பாடாய் படுத்தறோம். அந்த வகையில் நம் முன்னோர்கள் பல்லி நம் உடம்பில் மீது விழுந்தா என்ன பலன்கள் என சொல்லி வச்சிருக்காங்க போல... அதனை என்னதான்னு பார்த்துடுவோம் வாங்களேன்....
சாதாரணமா பல்லி,கரப்பான்பூச்சி, கொசு இவையனைத்தும் மனிதர்கள் வாழக்கூடிய வீடுகள் மற்றும் பல இடங்களில் அவைகளும் வாழ்ந்து கிடக்கின்றன. பகலில் பதுங்கும் பல்லிகள் இரவில் மின் விளக்கை போட்டவுடன் அட்டென்டன்ஸ் போட ஆரம்பித்துவிடும். அது எப்படி எங்க இருந்தது நமக்கு தெரியாது. நம்கூடவே தான் இ ருக்குது . ஆனால் எங்க இருந்தது. தெரியாது. ஆனால் இருட்டிய பின்னர் நாம் லைட்டைப் போட்டவுடனேயே சற்று நேரத்தில் லைட் அருகே ஆஜர். காரணம் என்ன தெரியுமா? அந்த லைட்டைச் சுற்றி பூச்சிகள் வர ஆரம்பிக்கும். அந்த பூச்சிகளைப் பிடித்து சாப்பிட பல்லிகள் தயாராக இருக்கும். இந்த பல்லிகள் இதுபோல் சுவரில் நடமாடமுடியாத நேரத்தில் சொத்தென்று மேலே இருந்து கீழே விழுமுங்க... அப்போது நாம் அந்த இடத்தில் இருந்தால் நம் உடல் மீது விழுந்து கீழே விழுந்து ஓடிப்போயிடும்... அப்போ நம் உடலின் எந்த பாகத்தில் அது விழுந்தது அதனை வைத்து பலன்கள் நாம் கண்டு பிடிச்சு வைச்சிருக்கோம் தெரியுமா-..பார்த்துடுவோம் வாங்க...
நம்தலைமுடியில் விழுந்தால் நமக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை கிடைக்கும் என்பது பொருள்.
சரிங்க முகத்தின் மேலே விழுது... அப்ப முகப்பகுதியில் பல்லி விழுந்துச்சுன்னு வைச்சுக்கோங்க .... உங்க வீட்டிற்கு விருந்தினர்கள் யாராவது வரப்போறாங்கன்னு அர்த்தம்...
சரி புருவத்தின் மேலே விழுந்தால் உங்களுக்குராஜபதவியில் இருப்பவர்களிடமிருந்து உதவி கிடைக்குங்களாம். கன்னம் அல்லது கண்கள் மீது விழுந்து விட்டால் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் தண்டனை கிடைக்குமாம்.
இடது கை அல்லது இடது கால் பகுதியில் பல்லி விழும் பட்சத்தில் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைத்துவிடுமாம். வலது கை, வலது கால் மீது விழும் பட்சத்தில் உங்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டாம்.
சரிங்க பாதத்தின் மீது பல்லி விழுந்துச்சு என்னா ஆகும். அட்ரா சக்கை வரும் காலங்களில் நீங்க பாரினுக்கு அதாவது வெளிநாடுகளுக்கு பயணம் போவீங்களாக்கும்.
சரிங்க நீங்க மல்லாந்து படுத்திருக்கும்போது உங்க தொப்புள் மேலே பல்லி சொத்தென்று விழுது என்ன ஆகும். விலைமதிப்பு மிகுந்த வைரக்கற்கள், ரத்தினங்கள் உங்களுக்கு கிடைக்குமாங்க..
சரிங்க தொடை மீது பல்லி விழுந்துச்சு ...தங்களுடைய பெற்றோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவாங்களாம்...
நல்லா மார்பு மேலே விழுதுன்னு வைச்சுக்கோங்க... இடது பக்க மார்பு பகுதியில் விழுந்தால் சுகமுங்களாம். அதுவே வலது பக்க மார்பு பகுதியில் விழுந்தால் லாபமுங்களாம்.
சரிங்க மேலே இருந்து உங்க கழுத்து பகுதியில் விழுந்துடுச்சு என்ன ஆகும். இடது கழுத்தின் பக்கத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றிதாங்க .... அதுவே வலது பக்க கழுத்தில் விழுந்தால் மற்றொருவருடன் பகை உண்டாகுமுங்களாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2