வலிகள் இல்லாத வாழ்க்கையா? புத்தரின் போதனையை கேளுங்க Pain Buddha quotes in Tamil
நம் உள்ளத்திற்கும், நம் வாழ்க்கைக்கும் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய புத்தரின் பொன்மொழிகள் உங்களுக்காக;
புத்தரின் பொன்மொழிகள்
நேபாள நாட்டில் உள்ள லும்பினி என்ற ஊரில் பிறந்த புத்தர் கி.மு 563 ஆம் ஆண்டிலிருந்து கி.மு 483 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவர் பௌத்த சமயத்தை தோற்றுவித்தவர். மனித வாழ்க்கைக்கான பல உயரிய தத்துவங்களை மனிதகுலத்திற்கு பரிசளித்த மகான் புத்தர்.
உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் கௌதம புத்தரின் சில உயரிய பொன்மொழிகளை இந்த பதிவில் பாருங்கள். புத்தரின் வரிகள் எல்லாம், நம் உள்ளத்திற்கும், நம் வாழ்க்கைக்கும், மிகவும் நம்பிக்கை தரக்கடியதாகவும், நம் சிந்தனைகளிலும், நம் வாழ்க்கையிலும், புதிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்
சக மனிதருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாகவே நம் எண்ணங்கள் யாவும் இருக்கவேண்டும். எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது
எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அந்த பண்பே உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும்
அமைதியாக இருப்பவன் முட்டாள் என்று எண்ணி வடாதே. பேசுபவனை விட, கேட்பவனே புத்திசாலி.
தவறான பாதையில் வேகமாக செல்வதை விட, சரியான பாதையில் மெதுவாக செல். எதற்கும் அவசரப்பட வேண்டாம். நேரம் வரும்போது அது நடக்கும்.
நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது. நாளை நடப்பதை, தடுக்க முடியாது. இன்றைய பொழுதில், இக்கணம் வாழுங்கள், அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு
வாழ்க்கை எப்போதுமே தவறான மனிதர்கள் மூலம், சரியான பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
போரில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வதைவிட, உன் மனதை வெற்றி கொள்வதே, சிறந்த வீரம்
துன்பங்கள் உங்களை பிடிக்கவில்லை. நீங்கள்தான் துன்பத்தை பிடித்திருக்கிறீர்கள்.
மற்றவர்களின் தவறுகளை பார்ப்பது எளிது. உங்கள் தவறுகளை பார்ப்பது தான் கடினம்.
நீங்கள் உங்களை உண்மையாக நேசித்தால், மற்றவரை ஒருபோதும் காயப்படுத்த முடியாது.
நீங்கள் பாதையாக மாறும் வரை, நீங்கள் பாதையில் பயணிக்க முடியாது.
வலி தவிர்க்கப்பட முடியாதது ஆனால், வேதனை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற ஒன்று
நிரந்தரமானது என்ற தோற்றத்தை அளிப்பது எல்லாம் தற்காலிகமானதே. அவை அனைத்தும் மறைந்துவிடும்…
ஆசைக்கும் அன்புக்கும் அடிமையாகாதீர்கள். ஏனெனில் இரண்டுமே உங்களை அடிமையாக்கி விடும்
எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். துக்கத்தை எதிரியாக கருதிப் போரிடுங்கள்