மனத்திற்கு இதமளிக்கும் ஒரு வரி கவிதைகள் தமிழில்..
Two Word Quotes in Tamil-ஏதோ ஒரு கவிதையில் ஏதாவது ஒரு வரி நமக்கு பிடித்துப் போகும். தமிழில் அது போன்ற ஒரு வரி கவிதைகள் உங்களுக்காக
Two Word Quotes in Tamil
நாம் எத்தனை கவிதை படித்தாலும், எத்தனை கவிதை எழுதினாலும், ஏதோ ஒரு கவிதையில் ஏதாவது ஒரு வரி நமக்கு பிடித்துப் போகும். அதில் உள்ள அர்த்தம் நம் வாழ்வோடு தொடர்புடையதாக மனம் எண்ணும்.
ஒரு வரியில் கவிதையா? என ஆச்சர்யப்பட வேண்டாம். சங்க காலத்து புறநானூற்று பாடலை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா; இது கணியன் பூங்குன்றனார் பாடல். இதில் ஒரே வரியில் தத்துவத்தை கூறியிருக்கிறார்.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி பாரதியும் இரு வார்த்தைகளில் புதிய ஆத்திசூடி படைத்தார். இரு வார்த்தைதான் என்றாலும் ஆழ்ந்த கருத்துகள் கொண்டவை அவை.
உதாரணத்திற்கு, அச்சம் தவிர். இரண்டு வார்த்தை தான், ஆனால் பொருள் என்று பார்த்தால், எந்த நிலையிலும் பயம் கொள்ளக்கூடாது என்ற அறிவுறுத்தல் இருக்கும்.
தற்காலத்திலும் பலர் இது போன்ற ஒரு வரி கவிதைகளை படைத்துள்ளனர். தத்துவங்களை மிக எளிதாக தந்துள்ளனர். அவற்றில் சில உங்களுக்காக:
அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல...!
தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...
பொம்மையும் உயிர் பெற்றதே! குழந்தைகளிடம் மட்டும்
அழுகை கூட அழகு தான்! குழந்தைகளிடம் மட்டும்
வாய்ப்புகளை தேடி அலையாதே! வாய்ப்புகளை உருவாக்கு...!
கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே
ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்
இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா பறவை (நினைவு)
தலைக்கனம் இருப்பதால் தான் என்னவோ தட்டி இருக்கப் படுகின்றன ஆணிகள்
கற்றுத்தெளிவது கல்வி! அறிந்து தெளிவது அறிவு
தேடலில் தொடங்கி, எதையோ தேடித் தேடியே முடிகின்றது வாழ்க்கை
நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்
வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை - தனிமை
ஏழ்மையிலும் நேர்மை- இறைவனுக்கு பிடித்தமான செயல்
போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்.
வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்.
தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்ப்பதில் தவறில்லை.
ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்!
அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.
துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.
யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு. அது தெரியாதவரை அனைவரும் நல்லவர்களே!
தவறவிட்டதை திரும்ப பெற முடியாது.. வாய்ப்பாக இருந்தாலும் வாழ்க்கையாக இருந்தாலும்!
இல்லாத போது தேடல் அதிகம்… இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்.. இதுதான் வாழ்க்கை…
அழகாய் பேசும் பல வரிகளை விட.. அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்…!
விடியல் என்பது கிழக்கிலல்ல! நம் உழைப்பில்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2