உங்களுக்கு மூட்டுவலியா? - இயற்கை பானங்களே மூட்டுவலிக்கு தீர்வு!
Natural Drinks for Arthritis- மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு தீர்வு தரும் இயற்கை பானங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.;
Natural Drinks for Arthritis- மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? (கோப்பு படங்கள்)
Natural Drinks for Arthritis- இயற்கை பானங்களே மூட்டுவலிக்கு தீர்வு!
அன்றுவரை சுறுசுறுப்பாய் இயங்கிய அழகம்மா, இன்று மூட்டுவலி காரணமாக ஒவ்வொரு அசைவுக்கும் தடுமாறுகிறார். கடைக்குப் போகவே கூட மகளின் துணை தேவைப்படுகிறது. மூட்டுவலியால் அவதிப்படுபவர்களை நம் வீதிகளிலும், வீடுகளிலும் காணலாம். சில தசாப்தங்களுக்கு முன்னர், இது வயதானவர்களின் பிரச்சனையாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று நிலைமை நேர்மாறு. இளம் வயதினரும் இந்த வலியினால் அவதிப்படுகின்றனர்.
எலும்புகளை இணைக்கும் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் ஆகியனவே 'மூட்டுவலி' எனப்படுகிறது. மூட்டு தேய்வு, கீல்வாதம், நீர்ச்சத்து குறைதல் போன்றவை மூட்டு வலியை ஏற்படுத்துகின்றன. வலியை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிந்தாலும், இயல்பான வாழ்க்கை தடைபடும் போது பிரச்சனை அதிகமாகிறது. ஆனால் கவலை வேண்டாம். வலி நிவாரண மாத்திரைகளை விடவும், இயற்கையான பானங்களிலேயே மூட்டு வலியை விரட்டும் சக்தி உள்ளது.
மஞ்சள் பால்:
இயற்கையின் மருத்துவப்பெட்டகம் என்று அழைக்கப்படும் மஞ்சளில், குர்குமின் எனும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இந்த குர்குமின் மூட்டுவலியில் இருந்து விரைவான நிவாரணம் அளிக்கிறது. மேலும், வீக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இரவில் பருகிவாருங்கள்.
இஞ்சி டீ:
அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி குணங்கள் நிறைந்த இஞ்சி, மூட்டு வலியைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது. சிறிய இஞ்சித் துண்டை நசுக்கி, ஒரு கப் கொதிக்கும் நீரில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம். தினமும் இருவேளை இஞ்சி டீ பருகுவது விரைவில் குணமளிக்கும்.
வெந்தயம்:
தாத்தா, பாட்டிகளின் மூட்டுவலி மருந்துப் பெட்டகத்தில் வெந்தயம் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். வீக்கத்தை எதிர்த்துப் போராடும் தன்மையும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும் வெந்தயத்திற்கு உண்டு. இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அந்த வெந்தயத்தையும், தண்ணீரையும் பருகி வர மூட்டுவலி படிப்படியாக குறைவதைக் காணலாம்.
எலுமிச்சை சாறு:
உடலில் யூரிக் அமிலம் அதிகமாவது மூட்டுவலியைத் தூண்டும். ஆனால், எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் யூரிக் அமிலத்தைக் கரைத்து வெளியேற்றும். இதனால், வலி மற்றும் வீக்கம் குறைகிறது. வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள்.
பப்பாளி இலை சாறு:
பப்பாளியின் நன்மைகள் பழத்தில் மட்டும் அல்ல, அதன் இலையிலும் உள்ளன. பப்பாளி இலையில் உள்ள என்சைம்கள் வீக்க எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. பப்பாளி இலைகளை அரைத்து சாறெடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து பருகி வந்தால் விரைவில் மூட்டுவலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
தேங்காய் எண்ணெய்:
வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தேங்காய் எண்ணெய் உடல் மசாஜ் மிகவும் நல்லது. மூட்டு வலி இருப்பவர்கள், தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து மூட்டுகளில் தடவி வந்தால் வீக்கமும், வலியும் குறையும்.
இந்த எளிய, வீட்டு வைத்திய பானங்களைப் பருகுவதுடன், உடற்பயிற்சி, எடை மேலாண்மை, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆகியவற்றையும் மேற்கொள்ளுங்கள். மூட்டுவலி தொடர்பான மருத்துவ ஆலோசனைகளைப் பெற மறக்காதீர்கள்!