நம்மால் முடியும் தம்பி! நம்பு..
Nambikkai Quotes in Tamil-எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்திட நம்பிக்கை தான் மிக அவசியம்;
Nambikkai Quotes in Tamil
வாழ்க்கையில் ஏதாவது பெரிதாக சாதிக்க வேண்டும், என பெரும்பாலும் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும். ஆனால் இந்த கனவை நினைவாக்கி வெற்றி பெறுவது ஒரு சிலரே. "நம்பிக்கை" என்ற ஒன்றே ஒன்று தான் வெற்றிக்கான மிகப்பெரிய ரகசியம் ஆகும். இந்த நம்பிக்கையை எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் கைவிடாமல் இருப்பவர்கள் வெற்றியடைகிறார்கள்,
வெற்றிக்கான முதல் படியே தன்னம்பிக்கை தான். தன்னம்பிக்கை இல்லாத ஒருவரிடம் வெற்றி ஒருபோதும் சாத்தியமாகாது. வெற்றி பெற்றவர்களிடம் நிச்சயம் நம்பிக்கை இருக்கும். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினால் நிச்சயம் அதற்கு அடிப்படையான நம்பிக்கையை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
இதோ உங்களுக்காக சில நம்பிக்கை பொன்மொழிகள்
உன் நேற்றைய தோல்விகான காரணங்களை கண்டறிந்தால் மட்டுமே வெற்றியை நோக்கி பயணம் செல்லும் போது வரும் தடைகளை உடைத்தெறிய முடியும்.
நமக்கு வரும் பிரச்சினைகள் நம்மை செதுக்க வருவதாக நினைத்து எதிர்த்து நில்லுங்கள், சிதைந்து போகாதீர்கள்.
நாம் கடக்கும் பாதைகளில் தடைகள் இருந்தால் அதனை தகர்த்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று இல்லை. தவிர்த்து விட்டும் சென்று விடலாம், எறும்புகளை போல.
உன்னை யாருடனும் ஒப்பிடாதே! உன் அருமை எது என்பதை நீயே உணராத பட்சத்தில் அடுத்தவர்கள் அறிவது என்பது எப்படி சாத்தியம்?
எனக்கு பிரச்சினை என்று ஒரு நாளும் சொல்லாதீர்கள்!
பிரச்சனை என்றால் கவலையும், பயமும் வந்து விடும்.
எனக்கு ஒரு சவால் என்று கூறி பாருங்கள்
தன்னம்பிக்கையும், தைரியமும் தானாக வந்து விடும்.
உழைக்கவும், உழைப்பின் பலனுக்காக உழைத்துக் கொண்டே காத்திருக்கவும் கற்றுக் கொண்டால், காலம் உழைப்பின் பலனை கைகளில் கொடுக்கும்.
வீழ்ச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகள் அல்ல. அவை நாளைய எழுச்சியின் அடித்தளங்கள்.
சாதனைகள் சுலபமாக நடைபெற்று விட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமலேயே போய் விடும்.
எதை கண்டும் அச்சம் கொள்ள தேவை இல்லை உன் மனசாட்சியை தவிர. உன்னை முற்றிலுமாக புரிந்து கொண்ட சிறந்த நண்பனும் அதுவே உன்னை பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருக்கும் ரகசிய உளவாளியும் அதுவே.
நீ உன் கருத்தில் ஒன்றுபட்டு இருந்தால் இந்த உலகமே எதிர்த்தாலும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அதுபோலவே உன் கருத்தில் நீயே முரண்பட்டு இருந்தால் உலகமே உன்னை ஆதரித்தாலும் உன் வாழ்வில் நீ வெற்றி அடைய முடியாது.
கடந்து போன காலங்கள் என்றுமே காலாவதி ஆன மருந்தை போலவே.
உன் வாழ்க்கையின் வலிக்கு அது சிறிதும் ஆறுதல் அளிப்பது இல்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2