காளான் கொத்துக்கறி செய்வது எப்படி?

Mushroom kothukkari recipe- சிக்கன் கொத்துக்கறி, மட்டன் கொத்துக்கறி சாப்பிட்டு இருப்பீர்கள். காளான் கொத்துக்கறி ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள். சுவையான அதை தயார் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.

Update: 2024-06-28 10:39 GMT

Mushroom kothukkari recipe- காளான் கொத்துக்கறி ரெசிப்பி ( கோப்பு படம்)

Mushroom kothukkari recipe- காளானை ஒருமுறை இப்படி கொத்துக்கறி செஞ்சு சாப்பிட்டால் அந்த ருசி ரொம்பவும் பிடித்துப் போய் அப்புறம் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள். அடுத்தமுறை காளான் வாங்கினால் அதைக் கொண்டு கொத்துக்கறி செய்யுங்கள்.

இந்த காளான் கொத்துக்கறி சாதத்திற்கு நல்ல சைடு டிஷ்ஷாக இருப்பது மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த கொத்துக்கறி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

 காளான் கொத்துக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள  காளான் கொத்துக்கறி  எளிய செய்முறை 


தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

* பட்டை - 1 துண்டு

* கிராம்பு -   2

* ஏலக்காய் - 2

* அன்னாசிப்பூ -  1

* வரமிளகாய் -  4

* முந்திரி - 10

* கறிவேப்பிலை - 1 கொத்து

* கசகசா - 1 டீஸ்பூன்

* மிளகு - 1 டீஸ்பூன்

* சோம்பு - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

கொத்துக்கறிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு - 1 டீஸ்பூன்

* வெங்காயம் - 2

* கறிவேப்பிலை - 1கொத்து

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

* தக்காளி - 2

* உப்பு - சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* காளான் - 200 கிராம் * தண்ணீர் - தேவையான அளவு

* கொத்தமல்லி - சிறிது


செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து நன்கு வறுத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

* பின்பு அதில் கசகசாவை சேர்த்து அந்த சூட்டிலேயே வறுக்க வேண்டும்.

* வறுத்த பொருட்கள் நன்கு ஆறியதும், மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் காளானை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மூடியைத் திறந்து, அதில் பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து கிளறி, மூடி வைத்து 4 -5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* காளான் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காளான் கொத்துக்கறி தயார்.

Tags:    

Similar News