தலைமுடி வேகமா வளரணுமா? இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க!

Mudi Valara Tips-முடி வளர்ச்சிக்கு பின்வரும் பராமரிப்பு முறையை தொடர்ந்து கடைப்பிடித்தால் 6 மாத காலத்தில் தலைமுடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.;

Update: 2022-08-29 08:57 GMT

Mudi Valara Tips

Mudi Valara Tips-ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவிகின்றனர்.

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், இயற்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. வெப்பம் அதிகரித்து விட்டதாலும், நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைந்து விட்டதாலும், நாம் பயன்படுத்தும் தண்ணீரின் தன்மை மாறி விட்டதாலும், உடல் சூடு காரணமாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து விட்டதனாலும், நம்முடைய தலை முடியானது சீக்கிரமே உதிர்ந்து விடுகிறது.

சில பேருக்கு முடி வளர்ச்சி இல்லாமலும் இருக்கின்றது. சிலபேருக்கு தலைமுடி சீக்கிரமே நரைத்து விடுகிறது. வாழ்நாள் முழுவதும் உங்களுடைய முடி நரைக்காமலிருக்கவும், முடி உதிர்ந்து தலையில் வழுக்கை விழாமல் இருக்கவும், முடி அடர்த்தியாக வளரவும் இயற்கையான பொருட்களை வைத்து, இப்படி வாரம் ஒரு முறை செய்தாலே போதும். முடி வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே போகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதோடு இந்தப் பொருட்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து பயன்படுத்தும் போது எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

தாமரை இலையை சூடாக்கி சாற்றை பிரித்தெடுக்கவும். இந்த சாற்றில் நல்லெண்ணெய் அல்லது இஞ்சி எண்ணெய் கலந்து அடுப்பை மிதமான தீயில் சூடாக்கவும். இந்த கலவையை வெப்பத்தில் மிதமாக வைத்து 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இப்போது சாறு எண்ணெயுடன் கலந்து மேலே ஓர் அடுக்காக மிதக்கும். இந்த எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.

கற்றாழை தைலம்

கற்றாழை சாறுடன் வெந்தய விதைகள் கலந்து இதை தேங்காயெண்ணெயில் கலந்து நன்றாக 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி விடவும். இதை பயன்படுத்திய சில வாரங்களில் முடி வளர்ச்சி அடைவதை பார்க்கலாம்.

செம்பருத்தி பூந்திக்காய் பொடி

பூந்திக்காய் - 100 கிராம் (இல்லையெனில் சீயக்காய் பயன்படுத்தலாம்)

செம்பருத்தி இலைகள் - 10 கிராம்

வெந்தயம் - 100 கிராம்

அனைத்தையும் வெயிலில் உலர்த்தி நன்றாக காய்ந்தபின் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதை கொண்டு வாரத்தில் இரண்டு முறை முடி கழுவ பயன்படுத்தவும். முடி உதிர்தலுக்கு இது சிறந்த சித்த மருந்தும் கூட. கூந்தல் பட்டு போல் பளபளக்கும்.. வறட்சி இல்லாமல் மென்மையாக சுத்தமாக இருக்கும்.

கறிவேப்பிலை தைலம்

தேங்காய் எண்ணேய் - 1 லிட்டர்

கறிவேப்பிலை ஈரமில்லாமல் காய வைத்தது - 50 கிராம்

தேங்காயெண்ணெயை 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு பின்னர் அதில் கறிவேப்பிலையை போட்டு வைக்கவும், சூடு ஆறியவுடன் இதை கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்தி வைக்கவும். வாரத்தில் ஒரு முறையாவது இந்த எண்ணெயை சூடாக்கி உச்சந்தலையில் நேரடியாக மசாஜ் செய்து கூந்தலில் ஊறவிடவும்.

பிறகு கூந்தலை அலசி எடுக்கவும். முடி வளர்ச்சிக்கு மிகச்சிறந்த எண்ணெய் இது. இது கூந்தலை நரையில்லாமல் வைக்கவும் செய்யும். முடியை கருமையாக வைத்திருக்கும்.

மூலிகை தைலம்

வெந்தயம், நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், ரோஜா மற்றும் பல அரிய மூலிகை பொருள்களை பயன்படுத்தி சித்த மூலிகை கூந்தல் தைலம் தயாரிக்கப்படுகிறது.

சித்த மூலிகை கூந்தல் தைலம் பயன்படுத்தும் போது அது கூந்தல் வளர்ச்சிக்கு நன்மை செய்வதோடு கூந்தல் ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது. இத் மயிர்க்கால்களை ஊடுருவி அவற்றை புத்துணர்ச்சி பெற செய்கிறது. முடி வளர்ச்சியை வேகமாக தூண்டுகிறது.

சித்த மூலிகை முடி எண்ணெய் உச்சந்தலையில் அரிப்பு, வறட்சி, பொடுகு போன்றவற்றை நீக்க உதவுகிறது. இந்த எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயது வித்தியாசமின்றி பயன்படுத்தலாம்.

செம்பருத்திப் பூ, செம்பருத்தி இலை, வெந்தயம் சிறிதளவு, கருவேப்பிலை இவை நான்குமே தலைமுடிக்கு ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடிய சிறந்த பொருட்கள். 4 செம்பருத்திப் பூ, வெந்தயம் 2 ஸ்பூன், கருவேப்பிலை 5 கொத்து, செம்பருத்தி இலை 4, இந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். அளவு என்பது அவரவர் இஷ்டம்தான். எப்படி சேர்த்துக் கொண்டாலும் பிரச்சனை இல்லை. வெந்தயத்தை மட்டும் முந்தைய நாள் இரவே ஊற வைத்துவிடுங்கள். இந்த இலைகளையும், பூவையும் காயவைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பச்சையாக இருக்கும்போதே பயன்படுத்தலாம்.

இந்த நான்கு பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மைய விழுது போல் அரைத்து கொள்ள வேண்டும். நீங்கள் தயார் செய்த விழுதை உங்களது தலை முடியிலும், மண்டை ஓட்டிலும் படும்படி நன்றாகத் தடவ வேண்டும்.

முடிகளை பிரித்து விட்டு, முடிகளின் வேர் பகுதியில் இந்த விழுதுபட வேண்டும். முடிக்கும் மேலேயே தடவிவிட்டால், எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தலை பகுதியில் முழுவதும் இந்த கலவையை தடவி விட்டு, அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும்.

அதன் பின்பு நீங்கள் வழக்கம்போல் எப்படி தலைக்கு குளிப்பீர்களோ, அப்படி குளித்து விட்டால் போதும். அவ்வளவுதான். இதை நீங்கள் ஒருமுறை பயன்படுத்திய உடனேயே உங்களது தலைமுடியானது எப்படி பளபளப்பாக மாறுகின்றது என்பதை உங்களாலேயே காணமுடியும்.

வாரம் ஒரு முறை இப்படி செய்தால் போதுமானது. இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வரும் பட்சத்தில் உங்களது முடி, நரை முடியாக மாறாது. சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் முடி கொட்ட ஆரம்பித்து விடும். சிறு வயதிலிருந்தே இந்த விழுதை பயன்படுத்தி வந்தால், பிரசவத்திற்கு பின் கூட பெண்களுக்கு முடி கொட்டாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

முடிக்கும் பாதுகாப்பு தேவை

முடியின் மீது சூரியக்கதிர்களானது நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், சூரியக்கதிர்களானது மயிர்கால்களைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அணிந்தோ அல்லது துப்பட்டா கொண்டு சுற்றிக் கொண்டோ செல்லுங்கள்.

ஈரமான முடியில் சீப்பு வேண்டாம் முடி ஈரமாக இருக்கும் போதோ, தலைக்கு சீப்பு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் முடி ஈரமாக இருக்கும் போது வலிமையிழந்து இருக்கும். அப்போது சீப்பு பயன்படுத்தினால், முடியானது வேரோடு வந்துவிடும். ஆகவே முடி உலரும் வரை சீப்பு பயன்படுத்தாதீர்கள்.

மன அழுத்தத்தைத் தவிருங்கள் தற்போது மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அதிகம். அப்படி மன அழுத்தமானது அதிகம் இருந்தால், முடியானது ஆரோக்கியத்தை இழந்து கொட்ட ஆரம்பிக்கும். ஆகவே மன அழுத்தத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய ஆரம்பியுங்கள்.

சரியாக சாப்பிடவும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News