அம்மா என்றழைக்காத உயிரில்லையே! Mother quotes in Tamil

மனிதருக்கு மட்டுமல்ல ஐந்தறிவு உயிரினங்களும் பாசம் காட்டுவது தாயிடம் மட்டும் தான்

Update: 2022-09-14 10:38 GMT

தாய் பற்றிய பொன்மொழிகள் 

Mother quotes in Tamil உலகின் உறவுகளில் முதன்மையானது தாய் உறவு மட்டுமே. உலகின் தாய் என்பவள் இல்லை என்றால் மனிதப் பிறப்பே இல்லை எனலாம். கடவுள் மனித உருவில் இருக்கின்றான் என்றால் அது தாயாக மட்டுமே இருக்க முடியும்.

"தாயிற் சிறந்த கோவிலும் இல்லை…" என்ற வரிகள் தாயின் சிறப்பு, புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்ற அனைத்தையும் கூறிவிடுகிறது,

ஐந்தறிவு படைத்த மிருகங்களிடம் கூட தாயன்பு கொட்டிக் கிடக்கின்றது.


அந்த தாய்மையை போற்றி மாணிக்க வாசகர் தனது திருவாசகத்தில், 'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து' என தாயின் பெருமையை கூறுகிறார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு என்பது நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன பொன்மொழி.

அந்த தாய் பற்றிய கவிதை மற்றும் பொன்மொழிகளை உங்களுக்காக தருகிறோம்

ஆயிரம் விடுமுறை

வந்தாலும் அவள்

அலுவலகத்திற்கு மட்டும்

விடுமுறையில்லை

அம்மா சமையலறை.

வயது வித்தியாசம்

பார்ப்பதில்லை

அம்மாவின் கொஞ்சலில்

மட்டும் இன்னும்

குழந்தையாக.

வலி நிறைந்தது

என்பதற்காக

யாரும் விட்டு

விடுவதில்லை

தாய்மை.


தாய் மடியை காட்டிலும்

ஒரு சிறந்த தலையணை

இந்த உலகில் வேறு

எதுவும் இல்லை.

ஒரு உயிர்

மற்றொரு உயிரை சுமப்பது

பார்ப்பவர்க்கு பாரமாக இருந்தாலும்

சுமப்பவளுக்கோ அது வரம் தான்!

உன் அருகில் இருக்கும் போதே

அள்ளிக்கொள்!

தொலைந்து போன பின்

தேடினாலும் கிடைக்காத

அன்பின் பொக்கிஷம்.

"அம்மா"

ஒவ்வொரு சிறிய விஷயமும் ஏன் சிறப்பு என்று தெரியவில்லை. தாயுடன் வாழ்வதில் வித்தியாசமான இனிமை இருக்கிறது

அம்மா எல்லா வலிகளையும் தாங்கிக் கொள்கிறார், ஆனால் அனைவருக்கும் வேலை செய்கிறார்.

கருவில் சுமந்த உன்னை என் வாழ்நாள் வரை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன் ஏனெனில் உன் கடமைக்கு அல்ல உன் பாசத்திற்கு அம்மா.

Tags:    

Similar News