mokka jokes in tamil with answers: தமிழ் மொக்க ஜோக்ஸ், ஜாலியா சிரிச்சுட்டு போங்க
Mokka Jokes in Tamil With Answers -டென்சனான நேரத்துல சீரியசான கேள்விக்கு ஜாலியா பதில் சொன்னா எப்படி இருக்கும்? படிச்சு பாருங்க;
Mokka Jokes in Tamil With Answers -நாம் பல நல்ல புத்தகங்கள் படித்திருப்போம் ஆனால் ஜோக்ஸ் படிக்கும்போது அதன் இன்பமே தனிதான். அதற்கு எதுவும் ஈடாகாது அதனால் இந்தத் தொகுப்பில் தமிழில் சிறந்த மொக்க ஜோக்ஸ்களை தந்துள்ளோம்.
தபால்காரர்: இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் உங்க ஊருக்கு.
வீட்டுக்காரர்: ஏன், தபால்ல அனுப்பி இருக்கலாம்ல.?
காதலி: ஏன்டா சுடுகாட்டுக்கு கூட்டிட்டு வந்த? காதலிய கூட்டிட்டு போறே இடமா இது?
காதலன்: போடி அறிவுகெட்டவளே! அவனவன் இங்க வரணும்னு சாகுறான்?
திருடன் : தம்பி ! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..
சிறுவன் : அடகுக் கடையிலே !
திருடன் : ????
காதலன் : உன் காதலுக்காக என் உயிரையே கொடுப்பேன் டியர்!
காதலி : அதற்கு அவசியமில்ல!… நம்ம லவ், என் அப்பாக்கு தெரிஞ்சா, அவரே எடுத்துடுவாரு!
பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக் ஆகிட்டாரே.. அப்படி என்ன சொன்னாங்க?
பொண்ணுக்கு சமைக்கத் தெரியும்னு சொன்னாங்களாம்…
நல்ல குணமான பொண்ணா சொல்லுங்க தரகரே!
இந்தப் பொண்ணை பாருங்க, கேன்சர்ல இருந்து குணமாகியிருக்கு, இந்த பொண்ணு கொரோனால இருந்து குணமாகியிருக்கு, எந்த பொண்ணு வேணும்னு சொல்லுங்க.
யோவ் தரகரே! கல்யாணத்துக்கு பொண்ணு வேணும்னு கேட்டா, சுடுகாட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க?
நீங்க தானே அடக்கமான பொண்ணா கேட்டீங்க! இங்க தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பொண்ண அடக்கம் பண்ணுனாங்க
அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்.
மன்னர் : அரண்மனைக்கு நாம் ஏற்கனவே கான்கீரிட் போட்டாச்சு ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!
வேலைக்காரன் 1 : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே.
வேலைக்காரன் 2 : அதுக்கு நீ ஏன் பதர்ற?
வேலைக்காரன் 1 : இல்லாத விஷயத்துல எப்படி ஸ்கேன் செய்வாங்க!
கண்டக்டர்: யோவ் டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீவேற.
முதலாளி: இங்க நிறையா திருட்டு போகும். அதனால நீ ராத்திரி கண் முழுச்சி கவனிச்சுக்கணும்.
வேலைக்காரன்: துங்கவே மாட்டேன். ஒரு சின்ன சத்தம் கேட்டா கூட நான் முழிச்சிக்குவேன் ஐயா, நீங்க கவலையேப் படாதீங்க.
தரகர்: மாப்பிள்ளை மெகா சீரியல்ல நடிக்கறாரு..
பெண்: அப்ப மாப்பிள்ளை நிரந்திர வேலைல இருக்கார்னு சொல்லுங்க !
வந்தவர்: அரிசி கிலோ எவ்வளவு?
கடைக்காரர்: ஐம்பது ரூபாய்!
வந்தவர்: கொஞ்சம் குறைச்சுப் போடக்கூடாதா?
கடைக்காரர்: இப்பவே ஒரு கிலோ அரிசிக்கு தொள்ளாயிரம் கிராம் தான் போடுறம்னு எல்லாரும் சொல்றாங்க. இன்னும் எப்படி குறைச்சுப் போடுறது ?
தரகர்: கறுப்பா இருக்கிற பொண்ணுக்குப் பத்து பவுன் போடறாங்களாம். ஒரு கால் நொண்டிப் பொண்ணுக்குப் பதினைஞ்சி பவுன் போடறாங்களாம். எது வேணும் ?
மாப்பிள்ளை: வீட்டுகாரர்:கறுப்புக் கலர்ல நொண்டிப் பொண்ணு பாருங்களேன்.
வாடிக்கையாளர்:உங்க கடையில வாங்கிப்போன பூரிக்கட்டை சீக்கிரம் உடைஞ்சிடுச்சே?
கடைக்காரர் : அடேயப்பா ! உங்க கணவர் தலை அவ்வளவு ஸ்ட்ராங்கா!? அப்போ இரும்புலத்தான் செய்யச் சொல்லணும்.
பெண்: ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?
கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்
பெண்: என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..
கஸ்டமர் கேர்: அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்
பெண்: இல்லை சார் அதுல 95 ரூபா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்?
பெண்ணின் அப்பா: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்…
உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா…?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2