அப்பா.... அப்பா.... அப்பா..... அழகு வாசகங்கள்... அப்பா....
Miss You Appa Quotes in Tamil-அப்பா.... இந்த சொல் நம் அறிவின் களஞ்சியம்.நாம் பலவற்றை அப்பாவினிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்பா ஒரு அனுபவ அகராதி.
Miss You Appa Quotes in Tamil
உலகத்தினையே நமக்கு காட்டியவர் அப்பா என்றால் மிகையாகாது. அம்மா என்றால் அன்பு.... அப்பா என்றால் அறிவு.... என்று ஒரு பாடல் கூட உள்ளது. இருந்த போதிலும் அனுபவ பூர்வமான அறிவுகள் அனைத்தும் நமக்கு அப்பாவிடம் இருந்து தான் கிடைக்கிறது. அன்பு வேண்டுமானாலும் அம்மாவிடம் கிடைக்கலாம்.
மற்றவை அனைத்தும் உங்கள் சிறிய வயது முதல் பெரியவர்கள் ஆ கும் வரை அப்பாவிடம் இருந்துதான் நாம் பலவற்றை கற்றுக்கொண்டுள்ளோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அப்பா...ஒரு அனுபவ பெட்டகம். அது வாயைத்திறந்தால் அனுபவ வார்த்தைகளாகவே வரும்.. அது ஒரு சில ருக்கு பிடிப்பதில்லை. அதுவும் வயதான காலத்தில் நல்ல கருத்தை சொன்னாலும் ஏற்காத பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றனர். பின்னர் இழந்து நிற்கும்போதுதான் அவருடைய அருமை நமக்கு தெரியவருகிறது. அப்பா.... என்றும் நமக்கு அப்பாதான்...
நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதனை ஆத்மார்த்தமாக உணர்பவர்கள் பெற்றோர்கள்தாம். ஒன்று தெரியுமா? எத்தனையோ பெற்றோர்கள் தம் குழந்தைகள் திருமணமாகி வெளிநாடுகளில் இருந்தாலும் இன்றும் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து தின்பண்டங்களை பாரினுக்கு பார்சல் செய்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா? இதனை உறவுகள் செய்யுமா? நினைத்து பாருங்கள்... எனவே பெற்றோர்கள் இருந்தால் அவர்கள் நம்முடைய பொக்கிஷங்கள்... பாதுகாக்க வேண்டியவை.... பார்த்து பார்த்து நம்மை வளர்த்தது போல் அவர்களுடைய வயதான காலத்தில் ஆள்போட்டாவது பார்த்து கொள்ளுங்கள்... தயவு செய்து முதியோர் இல்லத்துக்கு அனுப்பிடாதீங்க.... அந்த மன உளைச்சலே அவர்களின் ஆயுளை குறைத்துவிடும்....
அப்பாவின் இழப்பு....சாதாரண இழப்பில்லை.... பேரிழப்பு நம் ஒவ்வொருவருக்கும் தான்... அதன் அர்த்தமுள்ள வாசகங்கள்..
*வாழ்க்கையில் கஷ்டப்படும் போதெல்லாம் நினைக்கிறேன் கஷ்டப்படாமல் வளர்த்த என் அப்பாவை
*பெண்களுக்கு ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும் வாழ்நாள் முழுவதும் தன் அப்பாவின் உறவைப் போல் ஒரு உறவை பெறமுடியாது.
*இளம் வயதில் இழந்து விடக்கூடாத சொத்து அப்பா
*அப்பா நான் திரும்ப பெற நினைப்பது உன்னுடன் வாழ்ந்த நாட்களைஅல்ல உன்னை...
*நான் கஷ்டப்படும் போதெல்லாம் நினைக்கிறேன் ... என் அப்பா ஏன்.. என்னை விட்டுச்சென்றார்
*வாழ்க்கையில நம்ம கூட எவ்ளோ பேரு இருந்தாலும் ஒரு சூழ்நிலையில் அப்பா இல்லங்குறதை நினைச்சா அழுகை வந்துடுது
*என் வாழ்க்கையில் அதிகம் அழைக்க ஆசைப்பட்ட வார்த்தை அப்பா... அதிகம் அழைக்க முடியாமல் போன வார்த்தையும் அப்பா..
*இருக்கும்போது கற்றுக்கொடுத்ததை விட இறந்த பிறகு அதிகமாக கற்றுக்கொடுக்கும் ஜீவன் அப்பா...
*தந்தையை இழந்தவர்களுக்குத்தான் தெரியும் .. தந்தையர் தினம் வேதனையின் உச்சம் என்று...
*மறு பிறவி என்று இருந்தால் மீண்டும் உனக்கே மகளாக பிறக்க வேண்டும் அப்பா....
*ஒரு தந்தை சிறிது காலம் மட்டுமே தந்தையாக இருக்க முடியும். ஆனால் அவர் தனது குழந்தைகளுக்கு என்றென்றும் ஹீரோ..
*தந்தையின் அன்பு நித்தியமானது முடிவற்றது
*ஒருஅப்பா என்பது அவரது பகுதிகளின் கூட்டுத்தொகையைவிட அதிகம். அவர் குடும்பத்தின் ஆன்மா
*அப்பா ஏழையாக இருந்தாலும் நம்மை எப்போதும் ஏழையாக வளர்க்க நினைத்ததில்லை
*கஷ்டப்படும்போதெல்லாம் உணர்கிறோம் கஷ்டங்கள் தெரியாமல் வளர்த்த அப்பாவை
*தான் பெற்ற மகளை தாயின் மறுபிறவியாகவும், தன்வீட்டு தெய்வமாகவும் நினைக்கும்அப்பாக்கள் இங்கு அதிகம்.
கண்ணில் கோபத்தையும்இதயத்தில் பாசத்தையும்
வைத்திருக்கும் ஒரே உறவு அப்பா!
கடவுள் கொடுத்த வரம் கிடைக்க வில்லைகடவுளே கிடைத்தார் வரமாக அப்பா!
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையைதாய்க்கும் பிள்ளைக்குமாய்ஆயுள் வரை தங்கிடும் ஒரே உயிர்!
எத்தனை பேர் நான் இருக்கிறேன்என்று சொன்னாலும்அப்பாவை போல் யாராலும்இருக்கவே முடியாது.
ஆராய்ந்து பார்க்கும் வரையாருக்கும் தெரியாதுஒவ்வொரு தந்தையின்கஷ்டத்தை!
கண்ணில் கோபத்தைஇதயத்தில் பாசத்தைவைத்திருக்கும் ஒரே உறவு அப்பா
இறைவனுக்கும் அப்பாவுக்கும்சிறு வித்தியாசம்தான்இறைவன் நாம் காணாத கடவுள்அப்பா நாம் தினம் காணும் கடவுள்.
அழகிய உறவாய் அன்பான துணையாய்உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும்ஒரே உறவு அப்பா!
அப்பாவின் தோழில் ஏறிசாமியை பார்க்கும் போது தெரியவில்லை
சாமியின் தோ ள் மீது தான் ஏறி இருக்கிறேன் என்று!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2