சுவையான பால் பணியாரம் செய்வது எப்படி?

Milk Paniyaram Recipe- குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான பால் பணியாரம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.

Update: 2024-07-25 15:16 GMT

Milk Paniyaram Recipe- சுவையான பால் பணியாரம் ( கோப்பு படம்)

Milk Paniyaram Recipe- மழைக்காலத்தில் மாலை வேளைகளில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது பல தாய்மார்களுக்கும் மகிழ்ச்சி தருகிறது. ஆனால் அப்படி வீட்டில் செய்து கொடுக்கும் ஸ்னாக்ஸ் ஆரோக்கியமானதாகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் கோதுமை இருந்தால் போதும் சட்டுனு இந்த சுவையான பால் பணியாரம் செய்து அசத்தலாம். அந்த வரிசையில் சுவையான ஆரோக்கியமான பால் பணியாரம் செய்வது எப்படி என்று  பார்க்கலாம்.

சுவையான பால் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

ஒரு கப் கோதுமை மாவு

கால் கப் ரவை

கால் கப் பொடித்த சர்க்கரை

கால் டேபிள் ஸ்பூன் உப்பு

கால் டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள்

ஒரு கிளாஸ் தண்ணீர்

ஒரு சிட்டிகை சோடா உப்பு

தேவையான அளவு எண்ணெய்

ஐந்து முந்திரி

ஐந்து பாதாம்

இரண்டு ஏலக்காய்

சிறிதளவு தண்ணீர்

அரை லிட்டர் காய்ச்சிய பால்

கால் கப் சர்க்கரை


சுவையான பால் பணியாரம் செய்வது எப்படி ?

ஒரு சிறிய பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்த ரவை, பொடித்த சர்க்கரை, கோதுமை மாவு, ஏலக்காய் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். பிறகு அந்த பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். இப்போது நாம் பிசைந்து வைத்த இந்த மாவை சுமார் 15 நிமிடம் துணி போட்டு மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். இதனை அடுத்து பணியாரத்திற்கு தேவையான பாலை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி பாதாம் ஏலக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய பாத்திரத்தில் அரை லிட்டர் பால் ஊற்றி பிறகு அதில் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த முந்திரி பாதாம் விழுதை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.


இந்த பால் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இப்போது பால் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மூடி வைத்து விடுங்கள். பிறகு நாம் ஊறவைத்த மாவை எடுத்து அதில் ஒரு சிட்டிகை அளவு சோடா உப்பு சேர்த்து மீண்டும் நன்கு பிசைய வேண்டும். இதற்குப் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடாக வேண்டும். இந்த எண்ணெய் நன்கு சூடான பிறகு நாம் பிசைந்து வைத்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இதற்கு பிறகு பொரித்த சிறிய உருண்டைகளை நாம் தயார் செய்த பாலில் சேர்த்து குறைந்தது பத்து நிமிடம் ஊற வைத்தால் போதும் சுவையான ஆரோக்கியமான பால் பணியாரம் தயார்.

Tags:    

Similar News