மாட்டுப்பொங்கல்... மாடுகளுக்கு கொண்டாட்டம்... ஒரு நாள் மட்டும்....

Mattu Pongal Wishes in Tamil-தமிழகத்தில் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படும் கால்நடைத்திருவிழாதான் மாட்டுப்பொங்கல்...இன்று ஒரு நாள் மட்டும் மாடுகளுக்கு கொண்டாட்டமே...

Update: 2022-10-16 07:04 GMT

Mattu Pongal Wishes in Tamil

Mattu Pongal Wishes in Tamil

Mattu Pongal Wishes in Tamil

அப்பா...இன்னிக்காவது ரெஸ்ட் கிடைச்சிச்சே.... வாழ்க தமிழர்கள்...  (பைல்படம்)

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வருடந்தோறும் தை மாத பிறப்பன்று கொண்டாடப்படும். இப்பண்டிகையானது உழவர் பெருமக்களுக்கு உற்சாகத்தினைத்தரும் பண்டிகை என்பதால் தொடர்ந்து 4 நாட்களுக்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அதாவது ஆடி மாதத்தில் தேடி தேடி விதைத்த விதைகள் அனைத்தும் பயிராக வளர்ந்து மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்யப்பட்டு விடும். பின்னர் அறுவடை செய்ததை உற்சாகமாக கொண்டாடப்படும் வகையில் இதனை அறுவடைத் திருநாள் என்றும் அழைக்கின்றனர். அறுவடை செய்த புத்தரிசியைக் கொண்டு பொங்கலிடப்படுவதுதான் சிறப்பு.

Mattu Pongal Wishes in Tamil

மாட்டுத்தொழுவத்தில் தோரணம் கட்டி சிறப்பு பூஜைக்கு தயாராக நிற்கும் காளைகள்... பசுமாடுகள்...(பைல்படம்)

மாட்டுப்பொங்கல்

மாட்டுப்பொங்கல் என்பது தை மாதத்தின் இரண்டாவது நாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உழவர்கள் அன்றாடம் நடமாடும் உழவு வயல்களில் தோரணம் கட்டி வாயில்லா ஜூவன்களுக்கு உற்சாகத்தினைக் கொடுக்கும் வகையில் கொண்டாடப்படும் நிகழ்வுதான் மாட்டுப்பொங்கல்.

இது மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கல், கன்றுப்பொங்கல் எனவும் மாற்று பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தினந்தோறும் உழவர் பெருமக்களோடு பழகி உழவுத்தொழிலுக்கு உறுதுணை புரியும் பசுக்களுக்குநன்றி தெரிவிக்கும் வகையில் பசுக்களை வழிபடும் நாளாக கொண்டாடுகின்றனர்.

துாய்மைப்பணி

மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவதால் மாடுகள் கட்டும் தொழுவம் அனைத்தும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே துாய்மைப்படுத்தப்படும். இதற்கான பணிகள் துரிதமாகவே நடக்கும். அன்றைய தினம் உழவுக்கு வந்தனம் செய்யும் கால்நடைகளை குளிப்பாட்டி மாடுகளின் கொம்புகள் அனைத்தும் உரிய முறையில் சீவப்பட்டு அதற்கு வர்ணம் பூசும் பணியானது நடக்கும். கொம்புகளில் சலங்கையை கட்டிவிடுவர். பின்னர் தோலில் செய்யப்பட்ட கழுத்து பட்டைகளை மாடுகளுக்குஅணிவித்து அழகு சேர்ப்பர். புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக்கயிறு என அனைத்து கயிறுகளும் அன்றைய தினம்புதியதாக மாற்றப்படும். பின்னர் திருநீறு பட்டையிட்டு அதில் சந்தனம், குங்குமம் இடுவர்.

Mattu Pongal Wishes in Tamil

ஹைய்யா... இன்னிக்கு  நமக்கு  லீவ்.... ராஜமரியாதைதான் போங்க...இன்று ஒரு நாள் மட்டும்   ஹைய்யா...(பைல்படம்)

உழவுக்கருவிகள்

வருடந்தோறும் உழவுப்பணிகளுக்காக உபயோகப்படுத்தப்படும் உழவுக்கருவிகளை வரிசையாக சுத்தம் செய்து வைப்பர். பின்னர் இதனை உரிய முறையில் கழுவி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு பூஜை நடக்கும் இடத்தில் வரிசையாக அடுக்கி வைப்பர். மேலும் தோட்டத்தில் விளைந்த பச்சை பயறுகளை வைத்தும். ஒரு வாழை இலையில் தேங்காய், பழம், நாட்டுச்சர்க்கரை உட்பட அனைத்தும் வரிசையாக அடுக்கி வைப்பர். மாடுகள் கட்டப்படும் தொழுவத்தில் அன்றுபொங்கல் புது பானையில் வைத்து அதனை நைவேத்தியம் செய்தபின் மாடுகளுக்கும் அன்று பொங்கல் , பழம் உள்ளிட்டவைகளை உணவாக கொடுப்பது வழக்கம்.

Mattu Pongal Wishes in Tamil

வீரம்,  தீரம், விளைந்த தமிழ் மண்ணில்  வீரர்களின் திறமையை பறைசாற்ற காத்திருக்கும் காளை (பைல்படம்)

மாட்டுப்பொங்கலன்று பல்வேறு விளையாட்டுபோட்டிகள் நடந்தாலும் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பிரசித்தி பெற்றது.அதுவும் மதுரை அலங்கா நல்லுார் ஜல்லிக்கட்டினைக் காண வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருவது தமிழகத்திற்கே கிடைத்தபெருமையாகும்.

மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்இதோ....

உழவர்களின் தோழர்களான கால்நடைகளுக்காககொண்டாடப்படும்...அற்புத திருநாள்..மாட்டுப்பொங்கல்

ஆண்டுதோறும் நமக்காக உடலை வருத்தி பால் வழங்கும்கோமாதாவினை வணங்கும் நன்னாள்இது... வணங்குவோம்... மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்...

மனிதர்களின் சிரமங்களைப் போக்கவே இறைவன்கால்நடைகளை படைத்தானா?-..... வாழ்த்துகள்...வாயில்லா ஜீவன்களுக்கு...

பாரம்பரிய வீட்டுவிலங்குகளாக கருதப்படும்கால்நடைகளுக்கு இன்று திருவிழா....வணங்குவோம்...

உழவனின் உற்ற தோழனாய், வீரத்தின் அடையாளமாகவிளங்கும் மாடுகளுக்கு இன்று திருவிழா....

உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்....

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்

மனிதனுக்கு பால் கொடுத்து தோள்கொடுத்துமனிதனுக்காக தன்னையே அர்ப்பணித்த கோமாதாவை வணங்குவோம்...என்றென்றும்.. வாழ்த்துகள்....

மனித நேயத்தோடு மாடுகளை பராமரிக்கும்உழவு பெருமக்களுக்கு மாட்டுப்பொங்கல்வாழ்த்துகள்..

வாயில்லா ஜூவன்களுக்குஆண்டுக்கு ஒரு முறை ஓய்வுவாழ்த்துவோம்.. வளமாக வாழ... வாழ்த்துவோம்...

Mattu Pongal Wishes in Tamil

மாடுகளைக் குளிப்பாட்டி பூஜையிட்டு  உற்சாகமாக ஊர்வலமாக அழைத்துசெல்கின்றனர். (பைல்படம்)

இறைவன் மனிதருக்கு கொடையாக வழங்கிய கால்நடைகளுக்கு இன்று ஒரு நாள் திருவிழா...வாழ்த்துவோம்...வ ணங்குவோம்...வாழ்த்துகள்...

விவசாயிகளின் நண்பன் கால்நடைகளுக்கு இன்றுகொண்டாட்டம்...ஒரு நாள் மட்டும்...வாழ்த்துவோம்..

உழவுத்தொழில் உதவும் கால்நடைகளுக்கு அற்புத கொண்டாட்டத் திருவிழா... வாழ்த்துகள்....

இன்று ஒரு நாள் மட்டும் கால்நடைகளுக்கு ஓய்வுஆனால் பாலுக்கு விடுமுறை இல்லை.. வாழ்த்துகள்...

காலம் முழுக்க கஷ்டப்படும் கால்நடைகளுக்கு இன்று ஒரு நாள் மட்டுந்தான் நிரந்தர ஓய்வு... வாழ்த்துகள்... வணங்குவோம்...என்றென்றும்.. அன்புடன்...

கால்நடைகளின் தீவனத்தில் பிளாஸ்டிக்கலந்துள்ளதா? என ஆய்வு செய்து கொடுங்க...

வாயில்லா ஜூவன்களை இன்றாவது வதைக்காமல்அன்புடன் பராமரியுங்க... மாட்டுப்பொங்கல்வாழ்த்துகள்..

வாழ்க்கை முழுவதும் நமக்காக அர்ப்பணிக்கும்கால்நடைகளை அன்புடன் பராமரிப்போம் என்றென்றும்..

நம் உழவு வயல்களுக்கு காவலன்... விவசாயிகளுக்கு தோழன்...ஆம் அவர்களுக்கு இன்று ஒரு நாள் திருவிழா...

போற்றுவோம்... போற்றுவோம்... வாழ்த்துகள்...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News