மாமியாரை மெச்சும்மருமகள் உண்டா? ..... படிச்சு பாருங்களேன்...

Mamiyar Marumagal Quotes in Tamil-நாட்டில்திருமணமாகும்அனைவருக்கும் உள்ள பிரச்னை மாமியார்,மருமகள் பிரச்னைதாங்க. ஒருசிலருக்கு ஒத்து வந்தாலும் சிலர் எப்போதும் எதுகை மோனையாவே இருந்தா எப்டீங்க...;

Update: 2022-09-21 12:02 GMT

Mamiyar Marumagal Quotes in Tamil

திருமணங்கள்சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொன்னாலும் அதற்கு பிறகு வரும் பிரச்னைகள்தான் நமக்கு ரொம்ப கஷ்டத்தைக்கொடுக்குதுங்க...அப்படி என்னங்க-? ன்னு கேட்கறீங்களா-? ஆமாங்க... காவிரி பிரச்னையை கூட தீர்த்துவிடலாம் ஆனா... இந்த மாமியார் -மருமகள் பிரச்னைங்க மட்டும் இந்த உலகம்இருக்கும் வரை இருக்குமாங்க...அப்படீன்னு கேட்கறாரு ஒருத்தர்? என்னத்தைசொல்ல. போங்க..

மனமிருந்தால் எதற்கும் மார்க்கம் உண்டுங்க.. தன்னுடைய அம்மாவை மெச்சும்மருமகள் அதேபோல் தன் கணவனின் அம்மாவையும் கரிசனத்தோடு பார்க்கணுமா? இல்லையா?- அது ஏங்க ... பிரிவினை.. இது இப்ப இல்லீங்க... நாம பிறக்காததுக்கு முன்ன இருந்தே இந்த பிரச்னைகள் உண்டுங்களாங்கோ?அப்புறம் எப்படிங்க நீங்களும்நானும் தீர்த்து வைத்துவிட முடியும்.

பற்றாக்குறைக்கு பற்ற வைக்கறதுக்குன்னே ஒரு நாளைக்கு இரவு வரைக்கும் தொடர்கள். மாமியாரை கவிழ்ப்பது எப்படின்னு? டீடெய்லா டெமோ காட்டினா எந்த மருமகள் சும்மா இருப்பாங்க போங்க... திருத்தலாம்னு நினைச்சா தொடர்கள்ல கொடுக்கிற ஐடியாவாலா அவள மாத்தவே முடியலைன்னு பலமாமியார்கள் புலம்பறாங்களாங்க... என்னத்தைச் சொல்ல.

இந்த தொடர்களால் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றம் வரும்னு பார்த்தா பிரச்னைங்கதான் வரும்போல தெரியுதுங்க.. பத்தாக்குறைக்கு ஒவ்வொரு டிவியிலும் பல நேரங்கள்ல க்ரைம் டைம்னு ஒரு புரோக்ரோம் வேற போடறதைப்பார்த்தா மனசு பக்.. பக்.. னு அடிச்சுகுதுங்க...அத பார்த்து... ஏதாவது ஏடோகூடமாபண்ணிட்டாங்கன்னா என்ன பண்றதுன்னு பயமாத்தான் இருக்கது போங்க...

ஆனா...நானும் பல வருஷமா பாக்கறங்க... மாமியாரின் மீது பாசம் வைத்த மருமகளை பார்க்கவே இல்லைங்க... அப்படி நடிப்பவர்களை நிறைய பார்த்திருக்கேன்.. ஆனா உண்மையிலே ஒரு 10சதவீத மருமகள்கள் நாட்டில் இருப்பாங்களானுதான்னு கேள்விக்குறியா இருக்குதுங்க--வீட்டுக்கு வீடு இந்த பிரச்னை பனிப்போர் மாதிரி போய்ட்டு இருக்குதுங்க...

இரண்டு பேரும் ஒன்னா இருக்கையில எந்த பிரச்னையும் வரதில்லைங்க. ஆனா யாராவது ஒருத்தர்இல்லாத நேரத்திலஅந்த மாப்பிள்ளை தீர்ந்தாரு போங்க... இவங்க கதையை கேட்டு கேட்டு அவருக்கு துாக்கமே வந்துடுங்க...இந்தப்பக்கம் அம்மா.. அந்தப்பக்கம் பொண்டாட்டி...யாருக்குங்க அவரு பதில் பேச முடியும்...இரண்டும் வேணுமே... என்னத்தைச் சொல்ல போங்க...

இதுக்கு அரசாங்கம் ஒரு நல்ல யோசனைய சொன்னா கூட நாட்டு மக்களின் பலரது வீட்டில் பிரச்னையே வராதுங்க போங்க. எத்தனையே திட்டத்த போடறாங்க...இந்த பிரச்னைக்கு ஒரு வடிகாலு அரசு தேடாதுங்களா... அப்படினு கேட்கறது காதில விழுதுங்க.. இதுக்கெல்லாம் அரசு என்ன பண்ணுங்க..நீங்க வேற.. நீங்களாதான் பைசல் பண்ணிக்கோணும்...போங்க...

மாமியார்-மருமகளுக்கான வாசகங்கள் இதோ... உங்களுக்காக

மருமகள் என்றும் மறு மகளாவதில்லை.. மருமகள் என்பது பெயரளவில் மட்டுமே . அவளை என்றும் மகளாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவளுக்கு மரியாதை தரவேண்டாம். அவளும் சக மனுஷி என நினைத்தால் போதும்.இதில் விதிவிலக்குகளும் உண்டு..அவர்களை நான் குறிப்பிடவில்லை..

நின்றால் குற்றம்..நடந்தால் குற்றம்..மாமியார் மருமகளிடையே மட்டுமல்ல. காதலனிடமும், காதலியிடமும்தான்..

கணவன்இருக்கும்போது ஒரு விதமாகவும், இல்லாத போது ஒரு விதமாகவும் மனைவி என்கிற மருமகள்கள் செய்வது சரியென்றால் இதுவும் சரியே.

மகன்கள் இருக்கும்போது ஒரு விதமும், இல்லாத போது இன்னொரு விதமுமாய் நடந்துகொள்ளும்அம்மாக்கள் என்கிற மாமியார்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?

திருமணம் ஆன பெண்கள்

அலாரம்இல்லாமலேயே எந்திரிச்சிடுவோம் மாமியார் வீட்ல அடிக்கற அலாரத்தை அடிச்சு நிப்பாட்டிட்டு அடிச்சு போட்டமாதிரி துாங்குவோம் அம்மா வீட்ல...

சாப்பிடுறோமா இல்லையோ கரெக்ட் டயத்துக்கு சமைச்சிடுவோம். மாமியார் வீட்ல.

சமைச்ச சாப்பாடு காத்துக்கிட்டுக்கிட்டுருக்கும் நமக்காக அம்மாவீட்ல.

மொபைல் வச்ச இடமே மறந்து போகும் மாமியார் வீட்ல

கையைவிட்டு மொபைல் கீழே இறங்காது அம்மா வீட்ல

ஓடிக்கிட்டிருக்கிற டிவியை வெறுமனே பார்ப்போம் மாமியார் வீட்ல.

ரிமோட் நம்ம கையில பாடாய் படும் நம்ம அம்மா வீட்ல..

இதெல்லாம் சரிதானே...

பெண்களுக்கு தனது அம்மா மற்றும்அப்பாவை(பெண் எழுதியது) கவனித்துக்கொள்ளும் உரிமை கிடைத்திருந்தால் நமது தேசத்தில் முதியோர் இல்லம் இருந்திருக்காது...

பதிலாக ஆண் எழுதியது....பெண்கள் தனது மாமியார் மாமனாரை தனது அம்மா அப்பாவாக நினைத்திருந்தால் இந்த தேசத்தில் என்ன உலகத்தில் எந்த மூலையிலும் முதியோர் இல்லமே இருந்திருக்காது... என்னத்தை சொல்ல போங்க..

மாமியார் மருமகள் சண்டையில அம்மா கிட்ட கம்முன்னும் பொண்டாட்டிகிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்...

மருமகனை மகனாக நினைக்கும் மாமியார்களுக்கு மருமகளை மகளாக இல்லாவிட்டாலும் மனுஷியாக பார்ப்பதற்கு கூட மனம் வருவதில்லை ..

இளமையில் தான் அனுபவித்ததை முதுமையில் தன் மருமகளுக்கு திருப்பி கொடுக்கிறார்கள் சில மாமியார்கள்.

மாமியார், மருமகள் சண்டையில மனைவி பக்கமும் இல்லாமல் அம்மா பக்கமும் இல்லாம பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்.

மருமகள் என்பவள் சுவற்றில் அடிக்கப்பட்ட பந்து போல பிறந்த வீட்டிற்கு சென்றதும் திரும்பி விட வேண்டும் அதே வீட்டின் மகள் என்பவள் கிணற்றில் போட்டகல் போல தாய்வீட்டில் நிரந்தரமாக கூட இருக்கலாம்.

புருஷன் அடித்த அடியை வாங்கி அதே அடியை திருப்பி கொடுக்கிறாள் மருமகள் மாமியாருக்கு...


தற்கால மருமகளின் ஒப்பந்தம்

எங்கே ஷாப்பிங்,டூர் போவதாக இருந்தாலும் என் குழந்தையை மாமியார் பார்த்துக்கணும்.. மாமியார் குழந்தையை நான் பார்த்துக்குவேன்... எப்படீ?

துன்பத்தில் சேலைக்காக நுால், நுாலுக்காக சேலை, அழலாம் வந்து ஒட்டிக்கொண்ட சாயம் அழுவதேன்.. மருமகள்.

சில மருமகள்களுக்குமட்டுமே மாமியார்கள்இன்னொரு தாயாக கிடைக்கிறார்கள்.

மருமகளே.,.நீ உன் இஷ்டத்துக்கு நடக்க இது ஒன்னும் உங்க அம்மா வீடு கிடையாது புரியுதா?-.

அத்தை நீங்களும்உங்க இஷ்டத்துக்கு அதிகாரம் பண்ண இது ஒன்னும் உங்க அம்மா வீடும் கிடையாது..

மாமியார்: என்னம்மா சமையல் செஞ்சிருந்த சாம்பார்ல உப்பே இல்ல?

மருமகள்: அந்த உப்பு சாம்பார்ல கரைஞ்சு போயிருக்கும் விடுங்க அத்த.

மகள் தனிக்குடித்தனம் போனால் கெட்டிக்காரி

மருமகள் தனிக்குடித்தனம் போனால் கொடுமைக்காரி

என் மருமகளுக்கு ரொம்பத்தான் கொழுப்பு? ஏன் என்ன செஞ்சா?-

நான் பாலை வைச்சு பால்கோவா பண்றேன்..

நீங்க ரசத்தை வைச்சு ரசகுல்லா பண்ணுங்கிறா...

பெண்களின் நீண்ட நேர துாக்கத்திற்கு புகழ் பெற்றஇடம் தாய்வீடு

வேறு எங்கும் கிளைகள் கிடையாது

பிறந்து வளர்ந்த வீட்டிற்கே விருந்தாளியா போற கொடுமை

திருமணம் ஆன பெண்களை தவிர வேறு யாருக்கும் கிடையாது போங்க..

அம்மா துாங்குறா பார் சத்தம் போடாம விளையாடுங்க என்றால் அது அம்மா வீடு..

விளையாட விட்டுட்டு இவபாட்டுக்கு துாங்குறா பார் என்றால் மாமியார் வீடு.

மருமகளே உனக்கு சமைக்க தெரியாது என்பதைக்கூட நான் பொறுத்துக்குவேன். ஆனா...

பாலை சிம்ல வைனு சொன்னதுக்கு சிம் 1ஆ-- அல்லது சிம் 2 ஆ ன்னு கேட்ட பாரு அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலம்மா....


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News