காதலின் தீபத்தை நெஞ்சில் ஏற்றி விட்டீர்களா?
Love Propose Kavithai in Tamil-சரியான தருணத்தில் சரியாக சொல்லப்படுகின்ற காதல் மட்டுமே வெற்றி பெறுகின்றன காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது.;
Love Propose Kavithai in Tamil
நாம் காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கப்படுகிறோமா? என்பது முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான்.
நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. காதலை சொல்வதிலும் கூட ஒரு கவித்துவம் இருக்கவேண்டும்.
இருப்பதிலேயே பெரிய கஷ்டம் காதலை புரப்போஸ் பண்ணுவது தான். காதல் என்று வந்து விட்டால், எல்லாரும் சொதப்பத்தான் செய்வோம். நம் மனதில் இருக்கும் காதலை சரியாக சொல்ல முடியாவிட்டால் அது காதல் தோல்வியில் தான் முடியும். அதனால் தான் உங்க மனதில் இருக்கும் அன்பை அழகாக கவிநயத்துடன் உங்க லவ்வருக்கு பிடித்த வகையில் சொல்ல வேண்டும். "ஐ லவ் யூ" என்ற மூன்று எழுத்தாக இருந்தால் கூட மனதிலிருந்து எழும் போது அதன் சக்தியே தனி தான்.
இதோ உங்களுக்காக லவ் ப்ரபோசல் கவிதைகள் சில
நீயும் கஜினியும் ஒன்று தான்
ஒவ்வொரு முறை வரும்போதும்
கொள்ளையடித்து விட்டு செல்கிறாய்
காதல் இனிக்கும் கரும்பா? எரிக்கும் நெருப்பா?
தெரியவில்லை...
காதல் பாற்கடல் அமிர்தமா? பாம்பின் நஞ்சா?
ருசித்ததில்லை...
காதல் பூங்காவின் தென்றலா? பாலைவன புயலா?
புரியாத புதிர்...
இதையெல்லாம் அனுபவிக்க,
எனக்கு காதல் வரம் தருவாயா?
என் மேல் போர் தொடுப்பதை நிறுத்தி விடு
வேண்டுமானால் என்னை காதல் என்ற சிறையில்
ஆயுள்கைதி ஆக்கிவிடு
பெண்ணே உன் கண்களும் மனதும் பேசி கொள்ளும் ஒன்றை உன் உதடு சொல்வது எப்போது? காத்திருக்கிறேன் காலங்களில் கரைந்து
என்னவளே என் மனதில் உள்ள எனது எண்ணத்தை நீ அறிந்தும் அறியாதது போல நடிக்கிறாயா? இல்லை தகுந்த சமயம் அமையட்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறாயா?
உன் பார்வை வரம் கிடைக்க தினமும் ஏங்கி தவிக்கிறது என் காதல் அணுக்கள்
பெண்ணே ! சிறிது நேரம் உன் வெட்கத்தை விலக்கி வைத்து என் காதலை உன்னிடம் கூற சிறிது வாய்ப்பாவது கொடு
என் தனிமை வாழ்க்கைக்கு துணை தேடிய எனக்கு உன்னை எந்தன் வாழ்க்கை துணையாய் அந்த தெய்வம் அனுப்பிய தேவதையாய் நான் உணர்கிறேன்.
இந்த உலகில் எவ்வளவு மொழிகள் இருப்பினும் என் காதலை உன்னிடம் சொல்வதற்கு தகுந்த மொழி நீயும் நானும் பார்க்கும் பார்வை மொழிகளே
உன் உள்ளம் என்ற ஒன்றில் நான் இருந்தால் போதும் இந்த ஆயுள் காலம் முழுவதும் உயிராய் இருப்பேன்.
நீ மூச்சுவிடும் சுவாசம் தான் என்னை தினமும் எழுப்பும் காற்று, உன் கைவிரல்களின் தொடுதலை கண்டு தான் நான் எழுகிறேன் உன் ஒவ்வொரு விரல்களும் எனக்கு தாலாட்டுகள் என் தலையை நீ வருடி விடும் காற்று என் மனதையும் பறித்து செல்கிறது. நான் கடவுளிடம் வேண்டுவது ஒன்று உன்னை மணக்க எனக்கு வரம் கொடுக்க மாட்டாரா!.
நான் காதலிக்கவில்லை உன்னால் காதலிக்கப்படுகிறேன். நீ எனக்கு கிடைத்த அபூர்வம் என் வாழ்நாள் முழுவதையும் உன்னுடன் மட்டுமே செலவழிக்க விரும்புகிறேன்
உன்னால் நான் தவிக்கிறேன் ஒவ்வொரு நொடியும் துடிக்கிறேன் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு நீ வேண்டும் வேண்டும் என்று சொல்கிறது. நான் உன்னை எப்போதும் என்றென்றும் காதல் செய்வேன்
காதல் முட்கள் நிறைந்தது அதில் வலியும் சந்தோஷமும் இரண்டும் இருக்கும் எந்த வலிகளுக்கு மத்தியிலும் உனை இமைப் போல் காப்பேன் உன் பக்கத்திலயே நின்று என்றென்றும் நேசிப்பேன்
இந்த உலகத்திலேயே அழகான வார்த்தை அன்பு.
அந்த அன்பைக் கொண்ட நபர் நீங்கள் தான்
அதனால் தான் என் காதல் உங்களை மட்டுமே சுற்றி வருகிறது
என் வானில் மின்னும் நட்சத்திரம் நீ தான்
அதனால் தான் உன்னை தேடுகிறேன்
என்னுள் காதல் கொள்வாயா
என் கனவில் வரும் தேவதை நீயே இரவு முழுவதையும் திருடிக் கொண்டவளே வா இருவரும் இணைந்து காதல் டூயட் பாடலாம்
யாராவது எனக்காக இருக்கிறார் என்றால் அது நீ தான் நீ மட்டும் தான் அதனால் தான் உன்னுடனயே இருக்க ஆசைப்படுகிறேன்
வாழ்க்கையில் பல நொடிகளை நாம் கடந்து செல்கிறோம் ஆனால் நான் உன்னை பார்த்த நொடிகள் மட்டும் ஏன் கடக்கவே இல்லை இன்னும் என் மனதில் நிலையாக நிற்கிறது.
யாரும் கொடுக்காத மகிழ்ச்சியை கொடுக்கிறாயே அதனால் தான் இப்பொழுதும் எப்பொழுதுமே உன்னுடன் இருக்க ஆசை
என்னில் பாதி நீ
என் துக்கத்தை தாங்கும் நண்பன் நீ
என் உலகம் நீ
அதனால் தான் என்னவோ என் இதயம்
சக்கரம் போட்டு உன்னையே சுற்றி வருகிறது.
என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்.
கேட்கின்ற இசை எல்லாம் நீதானே
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானே
காதல் பெறுவதல்ல நீயும் நானும் உணர்வது அப்பொழுது தான் அது காலம் முழுவதும் வாழும் என்னுள் உணருவாயா நம் காதலை!
உன் கண்களின் காதல்வரம் வேண்டி
உன்னையே சுற்றி வருகிறது என் இதயம்
வருடங்கள் கடந்துவிட்டது.
ஒரே ஒருமுறை என் விழிகளை பார்!
என் காதல் வாழ்ந்து விட்டு போகட்டும்
புத்தகம் அனைத்தும் புரட்டி விட்டேன்
காதலின் அர்த்தம் தேடி!
உண் கண்களை கண்டதும் புரிந்து கொண்டேன்
காதல் என்னவென்று
இரவு பகலாய்
இம்சிக்கும் உன் நினைவை அழிக்க
நிஜமாக நீ வேண்டும் எனக்கு
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2