Litchi fruit benefits in tamil லிச்சி பழம் சாப்பிட்டிருக்கீங்களா? டேஸ்ட் மட்டுமில்ல, சத்தும் சூப்பர்

லிச்சி பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் மூலமாகும். இப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையுடன் இருக்கும்

Update: 2023-08-17 13:18 GMT

லிச்சி பழம்

கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும் லிச்சி பழம், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் லிச்சி பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த லிச்சி பழம் இளஞ்சிவப்பு நிறத்திலும் முட்டை வடிவத்திலும் இருக்கும். இந்த லிச்சி பழம் அனைவராலும் விரும்பப்படும் சுவையான சுவை கொண்டது.

தற்போது இப்பழம் தென்னிந்தியாவின் சூப்பர் மார்கெட்டுகளில் அதிகம் கிடைப்பதைக் காணலாம். இப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையுடன் இருக்கும்.

லிச்சி பழத்தை தமிழில் விழுதி, விளத்தி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறார்கள். லிச்சி பழத்தினுடைய விதையில் இருந்து எடுக்கும் எக்ஸ்ட்டாட்டில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக இந்த விதையில் பாலிபினைல்கள், ஃபிளவனாய்டுகள், ப்ரோ - ஆந்தோசயனைன் ஆகிய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன.


லிச்சி பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

லிச்சி முக்கியமாக நீர் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளால் ஆனது.

3.5-அவுன்ஸ் (100-கிராம்) புதிய லிச்சியில் உள்ள ஊட்டச்சத்துகள்:

  • கலோரிகள்: 66 கிராம்
  • புரதம்: 0.8 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள்: 16.5 கிராம்
  • சர்க்கரை: 15.2 கிராம்
  • ஃபைபர்: 1.3 கிராம்
  • கொழுப்பு: 0.4 கிராம்
  • கார்போஹைட்ரேட் மற்றும் ஃபைபர்

தண்ணீரைத் தவிர, லிச்சி முக்கியமாக கார்போஹைட்ரேட்டுகளால் ஆனது. லிச்சியில் உள்ள பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையிலிருந்து வருகின்றன, அவை அவற்றின் இனிப்பு சுவைக்கு காரணமாகின்றன. அவை ஒப்பீட்டளவில் குறைந்த நார்ச்சத்து கொண்டவை.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

லிச்சிகள் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் மூலமாகும், அவற்றுள்:

வைட்டமின் சி: லிச்சியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு லிச்சி தினசரி உட்கொள்ளும் வைட்டமின் சியில் 9% வழங்குகிறது.

தாமிரம்: லிச்சிகள் தாமிரத்தின் நல்ல மூலமாகும். போதுமான அளவு தாமிர உட்கொள்ளல் இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பொட்டாசியம்: போதுமான அளவு உண்ணும்போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து.


லிச்சி பழத்தின் நன்மைகள்

நல்ல செரிமானம்

லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இதனை உட்கொண்டால் செரிமானம் சீராக நடைப்பெற்று, கோடையில் ஏற்படும் வயிறு கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

புற்றுநோய் எதிர்ப்பு சக்தி

லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

இதய ஆரோக்கியம்

லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

கண்களுக்கு நல்லது

லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நோயெதிர்ப்பு சக்தி

லிச்சிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

ரத்த உற்பத்தி

லிச்சிப் பழம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும். எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும்.

லிச்சி பழத்தினுடைய விதைகள் நம்முடைய தலைமுடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்த விதையிலுள்ள மூலக்கூறுகளில் உள்ள பாலிபினைல்கள் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்திருக்கச் செய்வதோடு சருமத்தின் எலாஸிட்டியையும் அதிகரிக்கச் செய்யும்.

இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் சருமத்தில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுப்பதோடு சருமச் சுருக்கங்களையும் போக்கி பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்கச் செய்யும்.

Tags:    

Similar News