வாழ்வதற்கு ஒவ்வொரு நிமிடமும் தைரியம் வேண்டும்:வாழ்க்கை வாழ்வதற்கே.....
Life Quotes in Tamil-வாழ்க்கை என்பதனை ரசனையோடு வாழகற்றுக்கொள்ள வேண்டும். ரசனையில்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல... சகிப்புத்தன்மையும் அவசியம் தேவை.;
Life Quotes in Tamil
Life Quotes in Tamil
Life Quotes in Tamil
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.... வாழ்வதற்கு நமக்கு தனி தைரியம் வேண்டும்... அந்த அளவுக்கு உலக சூழல் மிகவும் மோசமாகி வருகிறது. சாதாரணமாக எங்கும் வெளியில் சென்றால் கூட உஷாராக இருக்க வேண்டியது அவசியமாகிறது.அதை தனிமனித பாதுகாப்பு என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.நீங்கள் சட்டம், ஒழுங்கு, விதிகள் ஆகியவற்றை முறையாக கடைப்பிடிப்பவராக இருக்கலாம். ஆனால் உங்களைப்போல் எல்லோரும் அதனை கடைப்பிடிக்கிறார்களா? இல்லையே... மிதமான வேகந்தான் பாதுகாப்பு என போக்குவரத்து துறை விதிகளில் சொல்கிறது.நம்மில் எத்தனை பேர் சாதாரண வேகத்தில் செல்கிறார்கள். இக்கால சிறு குழந்தைகள் கூட வேகத்தைத்தான் விரும்புகிறது. டமால்... டுமீல்தான்... கடைசியில்.. என்னங்க வாழ்க்கை... பதறிய காரியம் சிதறிவிடும் என்பது போல் வேக வேகமாக போய் திடீரென பயந்தால் விபத்துதான்... அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாதுங்கோ...
இதுபோல் நடக்கும் விபத்துகளில் நடந்து செல்பவர்கள் பலர் எக்கு தப்பாக மாட்டிக்கொண்டு உயிரிழப்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.. அவர் என்ன தவறு செய்தார். இந்த நிகழ்வு எதனைக் காட்டுகிறது. நாம் அனைவருமே உரிய விதிமுறைகளைக்கடைப்பிடிக்காத பட்சத்தில் அப்பாவி உயிர்கள் அநாவசியமாக உயிரிழக்க நேரிடும் என்பதுதான் உண்மையிலும் உண்மைங்க.. ஆக அனைவருக்கும் சமூக பொறுப்பு வேண்டும்...
Life Quotes in Tamil
Life Quotes in Tamil
வாழ்க்கைன்னா என்னங்க... வாசகங்களை படிங்க...
நல்லது எது!கெட்டது எது!என்பதை யார் வேண்டுமானாலும் கூறலாம்ஆனால்ஆராய மட்டும் மறந்து விடாதே.உன் சுய சிந்தனையை முடக்கி விடாதே !
எந்த ஒரு முடிவு எடுத்தாலும்மூளை சொல்வதை கேள்உன் மனதை கேட்காதே.மனதுக்கு ஆசைப்பட தான் தெரியும்மூளைக்கு தான் சிந்திக்க தெரியும்.
நாய்க்கு இல்லை ஆறாவது அறிவுஆனால்அதற்கு உண்டு நன்றி உணர்வுபகுத்தறிவு உள்ள நம் பலருக்குஎன்னவோ சிறிதும் இல்லை அந்த" நன்றி உணர்வு "
வெளிப்படுத்த முடியாத சில உணர்வுகள்தவிர்க்க முடியாத சில இழப்புகள்
அனுபவிக்கமுடியாத சில சந்தோஷங்கள்எல்லாம் நிறைந்ததுதான் வாழ்க்கை.
பேசும் முன்னாள் கேள்எழுதும் முன்னாள் யோசிசெலவழிக்கும் முன்னாள் சம்பாதி
பிறரை குறை கூறும் முன்னாள்உன்னை என்னை பார்.
உங்கள் தோல்விகளைஒரு நாளும்உங்கள் இதயத்திற்கு வர விடாதீர்கள்உங்கள் வெற்றியைஒரு நாளும்உங்ககள் தலைக்கு அனுமதிக்காதீர்கள்.
தோல்வி கண்டஉனக்கு தான் வெற்றியின் அருமை புரியும் எனவேதன்னம்பிக்கை மட்டும் மனதில் கொண்டுவெற்றிக்காக வரிந்து கட்டு.
எந்த ஒரு சூழ்நிலையிலும்நீ பொறுமையாய் இருக்கிறாய் என்றால்அதற்கு கவலை படாதேஅது மண்ணில் விழுந்த விதையின் குணம்.
"உலகம்"ஒரு வித்யாசமான பள்ளிஇங்கே பாடம் சொல்லி கொடுத்துதேர்வு வைப்பது இல்லை,தேர்வு வைத்த பிறகேபாடம் நடத்த படுகிறது.
மற்றவர்களுக்குதீமை விளைவிக்கும் போதுநினைவில்கொள்உனக்கான நாளைய துன்பத்தைநீயே விதைத்து கொண்டிருக்கிறாய்.
Life Quotes in Tamil
Life Quotes in Tamil
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்துசில காயங்களுக்கு பிரிவு மருந்துஆனால்எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து"அமைதி"
சின்ன சின்ன சந்தோஷத்திலும்சொர்க்கம் உண்டுசின்ன சின்னதாய் இருப்பதனாலோபல பெயருக்குஇது தெரியாமல் போவதுண்டு.
மரணத்திற்குஒரு நிமிட தைரியம் போதும்வாழ்வதற்குஒவ்வொரு நிமிடமும் தைரியம் வேண்டும்.
"காலம்"ஒவ்வொரு கஷ்டத்திற்கு பின்பும்கண்டிப்பாகஏதோ ஒரு மகிழ்ச்சியினைஒளித்து வைத்து இருக்கும்.
அளவு கடந்துகஷ்டத்தை அனுபவிக்கிறாய்என்று எண்ணாதேஉனக்காக எல்லையில்லாத சந்தோசம்காத்திருக்கும்.
பேசி கொண்டே இருக்காதீர்கள்சீக்கிரமே வெறுக்கப்படுவீர்கள்.
மௌனமாக இருங்கள்அதிகமாக தேடப்படுவீர்கள்.
சலித்து கொள்பவன்வாய்ப்பில் உள்ள கஷ்டத்தை பார்க்கிறான்சாதிப்பவன்கஷ்டத்தில் உள்ள வாய்ப்பினை பார்க்கிறான்.
இதுவும் கடந்து போகும்என்பதை விடஇதுவும் பழகி போகும்என்பதையே வாழ்க்கைசில சமயங்களில் கற்று தருகிறது.
வியர்வை துளிகளும்கண்ணீர் துளிகளும்உப்பாக இருக்கலாம் ஆனால்அது தான் உன் வாழ்க்கையைஇனிப்பாக மாற்றும்.
ஒருவனை மனிதனாக ஆக்குபவைவசதிகளும் உதவிகளும் இல்லைஅவனுக்கு ஏற்படும்துன்பங்களும் இடையூறுகளுமே.
Life Quotes in Tamil
Life Quotes in Tamil
உன்னை வீழ்த்தும் அளவிற்குவிதிகள் எழுதப்பட்டிருந்தால்விதிகளை வீழ்த்தும் அளவிற்குவழிகளும் நிறுவப்பட்டிருக்கும்.
"பழி"சொல்ல தெரிந்த யாருக்கும்இங்கே உனக்கு வழிசொல்ல போவதில்லைஉன் வாழ்க்கை உன் கையில்.
மனம் தான்மனித வாழ்வின் விளைநிலம்அதை செம்மையாகவைத்து கொண்டால்உன் வாழ்வு வளம் பெரும்.
வாழ்க்கையில்நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும்நமக்கு ஏதோ ஒன்றைகற்பித்து விட்டு தான் செல்கிறார்கள்.
"காலம்"என்றுமே உனக்காக நிற்காதுநீ தான் காலத்திற்கு தகுந்த மாதிரிஉன்னுள் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
எவ்வளவு பெரிய வீட்டில்வாழ்கிறோம் என்பது பெரிதல்லஎவ்வளவு நிம்மதியாக வாழ்கிறோம்என்பதே முக்கியம்.
நல்லவனாய் இரு,ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாதே நல்லவனை இந்த உலகம் மதிப்பது இல்லை.
கரையும் மெழுகில் இருளை கடந்து விட முடியும் என்ற தன்னம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்.
உன் ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் போது,நீ எடுத்து கொண்ட பயணம் முடிந்து இருக்க வேண்டும்,
ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை மிகவும் அழகானது.
உன்னிடம் இருக்கும் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவது உழைப்பும் விட முயற்சியுமே ஆகும்.
வாழ்க்கையில் மீண்டும் திரும்ப பெற முடியாதவை நேரமும்,உயிரும் பேசிய வார்த்தைகளும்.
எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருப்பதைவிட,எதுவும் தெரியாது என்று தெளிவாக இரு.
நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால் நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும்.
தோல்வியில் இருந்து எதையும் கற்று கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி.
தூக்கி எறிந்த பின்பு தான் சிலருக்கு தெரிகிறது கையில் இருந்தது கல் இல்லை வைரம் என்று.
Life Quotes in Tamil
Life Quotes in Tamil
ஒவொருவருக்கும் ஒரு முட்டாள் உதவி தேவைபடுகிறது , தன்னை அறிவாளியாய் காட்டிக்கொள்ள.
உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை உயிரற்ற பணமே முடிவு செய்கிறது ..
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை , முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை
கோபத்திற்கு கொடுக்கும் மரியாதையை யாரும் புன்னகைக்கு கொடுப்பதில்லை.
வாழ்க்கை என்பது ஒரு கேள்வி , நாம் எப்படி வாழ்கிறோம் என்பது நமது பதில்.
எப்போதும் பயத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
நம்மை நாம் கேள்வி கேட்காதவரை நம் தவறுகளை நாம் உணர போவதில்லை.
வலியை நமக்கான வழியாய் மாற்றினால் வாழ்க்கையில் என்றும் வசந்தமே.
நிதானத்தை இழப்பவன் நிம்மதியை சேர்ந்து இழக்கிறான்.சில ஏமாற்றங்களே வாழ்க்கையின் மாற்றங்கள் ஆகின்றன.
வரலாற்றில்வெற்றி பெற்றவனும் இடம் பெறலாம்தோல்வி அடைந்தவனும் இடம் பெறலாம்ஆனால் வேடிக்கை பார்த்தவன்ஒரு நாளும் இடம் பெற முடியாது.
வாழ்க்கையில்நடக்கும் துன்பங்களைகடந்து போக கற்று கொள்ளுங்கள்ஆனால் மறந்து போய்விடாதீர்கள்அது தான் உன் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்.
Life Quotes in Tamil
Life Quotes in Tamil
மூன்று மணிக்கு எழுந்தால்'முனிவன் 'நான்கு மணிக்கு எழுந்தால்' ஞானி '
ஐந்து மணிக்கு எழுந்தால்'அறிஞன் 'ஆறு மணிக்கு எழுந்தால்'மனிதன்,'
ஏழு மணிக்கு எழுந்தால்'எருமை'.
நேற்று செய்ய வேண்டியதை இன்று செய்தால்"சோம்பேறி"இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால்"சுறுசுறுப்பானவர் "நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்தால்"வெற்றியாளன்".
பிறரை பற்றி குறை கூறும் முன்னர்நான் அவர் இடத்தில் இருந்தால்சரியாக நடந்து இருப்போமா
என்று யோசித்து பாருங்கள்அதன் பின்னர் உங்கள் மனம் சொல்லும்அவரை விமர்சிக்க உனக்கு தகுதி இருக்கிறதா என்று!!
ஒருவருக்கு நீ ஆயிரம் உதவி செய்து இருக்கலாம்ஆனால்ஒரு தடவை உன்னிடம் குறை கண்டுவிட்டால்அந்த கணத்தில்நீ செய்த உதவிகள் அனைத்தையும் மறந்து விடுவான்இதுதான் இந்த உலகம்.
இரு பக்கமும் கூர்மையுள்ள கத்தியைமிக ஜாக்கிரதையாக பிடிக்க வேண்டும்அதேபோல எந்த பக்கமும் சேரக்கூடியமனிதர்களிடம் மிக கவனமுடன்'பழக' வேண்டும்
சிலரை மன்னித்து விடுங்கள்சிலரை மறந்து விடுங்கள்சிலரை வெறுத்து விடுங்கள்
யாரையும் தூக்கி சுமக்காதீர்கள்உங்கள் வாழ்க்கையே சுமையாகிவிடும்
பார்க்க கண்களை படைத்த ஆண்டவன்பார்க்காமல் இருக்கஇமைகளை கொடுத்து இருக்கிறான்இரண்டையும் சரியான நேரத்தில் பயன்படுத்துபவனே" புத்திசாலி "
"சொந்தம் "என்று சொல்வதெல்லாம்சொந்தம் இல்லை மானிடாநீ வந்த உலகில் ,அவன் தந்த உடலில்சொந்தம் என்பது ஏதடா?
எல்லாம் தங்கி செல்லும் வழிப் போக்கனே!சோகம் எனும் பறவைகள்உங்கள் தலைக்கு மேல்பறப்பதை தடுக்க முடியாதுஆனால்அது உங்களின் தலையிலேகூடு கட்டி வாழ்வதை தவிர்க்கலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2