உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும் உள்ள மனிதர்களை சந்தித்தவரா நீங்கள்?

Uravu Kavithai in Tamil-இந்த சமுகத்தில் ஒரு சில புறக்கணிக்க முடியாத உறவுகள் உள்ளது. அதை தவிர்க்க முடியாது தான். இருந்தாலும் சற்று விலகி இருக்கலாம்.

Update: 2022-08-29 09:29 GMT

Uravu Kavithai in Tamil

Uravu Kavithai in Tamil

நம்மிடம் தவிர்க்க முடியாத ஓர் உறவு போலியான அன்பை வெளிப்படுத்துகிறார் எனில், அது தெரிந்தும் நீங்கள் அவரிடம் நட்பு தொடர்கிறீர்கள் என்றால் அதன் பின் விளைவு நூறு விஷம் தடவிய அம்புகள் நம் நெஞ்சை பதம் பார்த்தால் எவ்வளவு வலியை ஏற்படுத்துமோ, அதை விட அதிக வலியை ஏற்படுத்தும்.

அந்த போலியான உறவு எதற்காக என்ன்று ஆராய்ந்து, அதற்கான தீர்வை எட்டுவது தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

போலியான உறவுகள் குறித்து பலர் எழுதிய அனுபவங்களை உங்களுக்காக தருகிறோம்

நீயாக வாழ கற்றுக்கொள்

சிலர் உன்னை விரும்புவார்

சிலர் உன்னை வெறுப்பார்

கவலை படாதே இது உன் வாழ்க்கை

நீ மட்டுமே உன்னை எப்பொழுதும் விரும்புவாய்

உனக்காக வாழ்

பச்சோந்தி மனிதர்களை சட்டை செய்யாதே

திடீரெனக் கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே..... பொய்யான அன்பு காரியம் முடித்த பின் உன்னை விட்டு விலகி விடும்...

உனக்கு உண்மையா இருக்குறவங்களுக்கு மட்டும் நீ உண்மையா இரு.. அதை விட்டு அனைவரிடமும் உண்மையாக இருந்தா நீ நல்லவன் இல்ல முட்டாள்...!!!

எல்லாப் பக்கமும் உறவுகள் கசக்கும் போது

மனதிற்கு பிடித்தவரிடம் தான் மனம் ஓடி வருகிறது.

அந்த உறவும் புரிந்துகொள்ளாமல் வதைக்கும் போது

வாழ்க்கை வெறுத்துத்தான் போகிறது.

ஒரு சில உறவுகளின் உண்மை சுயரூபம் தெரிய வரும் போது தான் புரிகிறது,

இவர்களையா உயிருக்கு மேலாக நேசித்தோம் என்று.

எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்ட தான் தெரியும்.. அதுபோல தான் சில உறவும் எவ்வளவு அன்பாக நாம் இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்...

என்ன தான் உரிமையோடு நினைத்துப் பழகினாலும் சில நேரங்களில் நீ யாரோ நான் யாரோ என்று உணர வைத்து விடுகிறது சில உறவுகள்

உடைந்த பொருளை, ஒட்ட வைத்து, என்ன தான் அலங்காரம் செய்தாலும், அதன் பழைய அழகை திரும்பப் பெற இயலாது. சில உறவுகளும் அப்படித்தான்.

உன்னை விட்டு விலகும் உறவிடம் வாதிடாதே

மௌனமாக விலகு..

உன் வலியையும் வேதனையையும் சொல்லி

புரிய வைக்க முயற்சி செய்யாதே...

என்றோ அவர்கள் நம்மை சந்திக்கும்போது,

எண்டா இவர்களை இழந்தோம் என்று

நினைக்கும் அளவிற்கு வாழ்ந்து காட்டு.

அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்!!

ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்; ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்.

இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்.

மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்…

மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்

பல முகமூடி மனிதர்களால்

சில நல்ல மனிதர்களும்

சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள்

வேஷம் போடும் உறவுகளுக்கு நடுவில்

உண்மையான பாசம் தோற்றுத்தான் போகிறது

மானங்கெட்ட மனசுக்கு தான் தெரியவில்லை

அது பாசம் அல்ல வேஷம் என்று

கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால்,

அவர்கள் சொல்லும் பொய்கள் கூட உண்மையாகவே தெரிகிறது

பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருந்தால், உண்மையான அன்பின் முன்னால், போலியான நட்பு தோற்கடிக்கப்படும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News