என்னடா வாழ்க்கை இது என புலம்பாதீங்க! இதுவும் கடந்து போகும்
Life Failure Quotes in Tamil-விரக்தி என்பது மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கக் கூடியது. எவ்விதமான விரக்திக்கும் அடிப்படை காரணம் இயலாமை தான்.;
Life Failure Quotes in Tamil
Life Failure Quotes in Tamil
தோல்வி ஏற்படும் போது, விரக்தி ஏற்பட்டால், தோல்வி ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை தான் யோசிக்க வேண்டும். இப்படி யோசித்தாலே, பாதி சுமையை குறைத்து, கொஞ்சம் கொஞ்சமாக விரக்தியிலிருந்து வெளியில் வர வைக்கும்.
கொஞ்சம் நிதானமும், புத்திசாலித்தனமும், பக்குவமும் இருந்தால், விரக்தியிலிருந்து வெளியே வர முடியும்.
திறந்த மனம் தான்...!
ஆனால், அதில் திறந்து காட்டாத,
திறந்து காட்ட முடியாத,
பக்கங்கள் பல இருக்கின்றன...!
ஏற்றுக்கொள்ள முடியாத
மாற்றங்களுக்கு
பெயர் தான் ஏமாற்றம்..!!
எதுவும் வேண்டாம் என்பது இயல்பு.
எதுவுமே வேண்டாம் என்பது விரக்தி.
எனக்கு எதுவுமே வேண்டாம்.
நூலிழையில் வாய்ப்பை
தவற விட்டவர்களை விட,
நூல் இல்லை என்று வாய்ப்பை
தவற விட்டவர்கள் தான் ஏராளம்
மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும்.
"தோட்டக்காரன் நூறு குடம் நீர் ஊற்றினாலும்
பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்".
கண்ணில் விழுந்த தூசியாய்,
சிலர் செய்துவிட்டுப் போன செயல்கள்.
மனதில் இன்றும் உறுத்திக்
கொண்டு தான் இருக்கிறது
நிரந்தரம் இல்லாத
ஒன்றிற்காக நிம்மதி இல்லாமல்
அலைவது தான் வாழ்க்கை
தேடினது கிடைக்காதானு ஆசை..
ஆசை நிறைவேறாதன்னு எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு தந்த ஏமாற்றம்
ஏமாற்றம் தந்த வலி..
தேவை என்றால் வரும்
உறவுகளையும்.. தேவையில்லாமல்
வரும் உணர்வுகளையும்..
ஒதுக்கி வைக்க கற்றுக்
கொள்ளுங்கள் நிம்மதி
நம்மை தேடி வரும்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2