கோபம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும். உண்மையா?

Kovam Quotes in Tamil-கோபம் என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சி. அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.;

Update: 2022-09-17 12:15 GMT

காட்சி படம்

Kovam Quotes in Tamil-கோபம் எப்போதும் மோசமானதல்ல, ஆனால் அது சரியான முறையில் கையாளப்பட வேண்டும். கோபம் ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம். எதிர்மறை உணர்வுகளை வெளிப் படுத்த இது ஒரு வழியை உங்களுக்கு வழங்கலாம்.ஆனால் அதிகப்படியான கோபம், பிரச்னைகளை ஏற்படுத்தும்.அதிகரித்த ரத்த அழுத்தம் மற்றும் கோபத்துடன் தொடர்புடைய பிற உடல் மாற்றங்கள் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

கோபம் என்பது ஒரு உணர்ச்சி ஆகும். கோபமானது அறிவை இழக்க செய்து பல தவறான காரியங்களை செய்யத் தூண்டுகின்றது. பிரச்சினைகள் ஏற்படும் போது அதை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பதை சிந்தித்திப்பதை விடுத்து கோபம் கொண்டால், பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காண இயலாது.

Kovam quotes in Tamil கோபம் பற்றிய சில பொன்மொழிகளும் வாசகங்களும்

நேர்மையாக இருப்பவர்களுக்கு

கோபம் அதிகமாக வரும்..

காரணம் ஏமாற்றங்களை

தாங்கும் சக்தி அவர்களுக்கு

இருப்பதில்லை..!


கோபம் எனும் இருட்டில்

விழுந்து விடாதே.. பிறகு

பாசம் எனும் பகல்

கண்ணனுக்கு தெரியாது..!

கோபம் வருவதற்கு தகுதியே உரிமை தான்..

உரிமை இருந்தா தான் கோபமும் செல்லுபடியாகும்..

அன்பு இருந்தா தான் அந்த கோபமும்

மதிக்கப்படும்..

கோபத்தில் கூட இழக்காத

நிதானமும் கொட்டாத

வார்த்தைகளும் வருமுன்

காக்கும் மருந்துகள் தான்..!


கோபம் என்பது அடக்கப்பட

வேண்டியது அல்ல..

கடக்கப்பட வேண்டியது..!

ஆணின் கோபம் அதிகமாக

இருந்தாலும் அது அவனுக்கு

பிடித்த பெண்ணிடம்

தோற்று போகும்..!


ஆணின் கோபம்

பெண்ணின் கண்ணீரில்

கரைந்து போகும்.

பெண்ணின் கோபம்

அணைந்து போகும்.

கோபத்தில் கிடைத்ததை எல்லாம் எடுத்தெறிய, எல்லோராலும் முடியும். ஆனால், அந்த கோபத்தையே தூக்கி எறிய, வெகு சிலரால் மட்டுமே முடியும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News