Kiwi Fruit in Tamil name பசலிப்பழம் தெரியுமா? அதாங்க கிவி பழம்.
கிவி பழம் அல்லது பசலிப்பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும்.;
கிவி பழத்தை கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. "சிட்ரஸ்" ரக பழமான அதில் விட்டமின் "ஏ", "சி", "இ" அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட்ட பல நோய்களிலிருந்து இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.
விட்டமின் "சி" யின் பணிகளை விட்டமின் "இ" அதிகரிக்கும். இந்த இரண்டும் பசலிப்பழத்தில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
சில பழங்கள் ஆண்டு முழுவதும் நமக்கு கிடைத்தாலும், சில பழங்கள் ஆண்டின் சில குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கின்றன. கிவி பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு பழமாகும். எந்த பருவத்திலும் கிவி பழத்தை சாப்பிடலாம்.
கிவி பழம் சாப்பிட இனிப்பு புளிப்பு சுவையுடன் இருக்கும். கிவி பழத்தின் நிறம் வெளியே பழுப்பு நிறமாகவும் உட்புறம் பச்சை நிறமாகவும் காணப்படும்.
நாம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நம் வாய், உதடுகள், நாக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் கூச்ச உணர்வு, அரிப்பு போன்றவை ஏற்படும். அது போல் தான் இந்த பழமும் இருக்கும்.
கிவி பழங்கள் பார்க்க குட்டியாய் இருந்தாலும் உடம்புக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது.
கிவி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- இந்த கிவி பழம் இரத்தம் உறைவதை தடுக்கும்.
- இந்த பழம் முக்கியமாக இதய பிரச்சினையை தடுக்கும்.
- உணவிற்கு பிறகு ஜீரண சக்திக்காக கிவி பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
- புற்றுநோய் வராமல் தடுக்கவும் இந்த பழம் பெரும் பங்கு வகிக்கிறது.
- நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் செரிமான திறனை மேம்படுத்துகிறது.
- ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த கிவி பழத்தை சாப்பிட்டு வர விரைவில் ஆஸ்துமா குணமாகும்.
- உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
- கிவி பழத்தை சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதனால் உடலில் நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் வளர்கிறது..
- இதய நோய், இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை பயக்கும். கிவி சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
- கிவி சாப்பிடுவதால், சருமம் பளபளப்பாகும், சுருக்கங்கள் நீங்கும். வயிற்றில் ஏற்படும் உஷ்ணம் மற்றும் அல்சர் போன்ற நோய்களை நீக்குவதில் கிவி மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது.
- கிவியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
- கிவி சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தினமும் கிவி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைகிறது.
- மூட்டு வலி, எலும்பு வலியைப் போக்கவும் கிவி உதவுகிறது. கிவி மன அழுத்தத்தையும், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பையும் குணமாக்குகிறது.
- கிவி பழங்களை அதிகமாக வளரும் குழந்தைகள் சாப்பிட்டால் நோயின்றி ஆரோக்கியமாக வளருவார்கள் .
- கிவி பழத்தை உலர வைத்து சாப்பிடுவதால் முகம் பளபளப்பாக இருக்கும் .தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த உலர்ந்த கிவி பழத்தை எடுத்து கொள்ளலாம்.
கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் இந்த உலர்ந்த கிவி பழத்தை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.