தோல் மினுமினுப்பாகனுமா? இயற்கையான பொருளை பயன்படுத்துங்க!
Kerala Beauty Tips in Tamil-சருமம் பொலிவு பெற கேரள பெண்கள் என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொண்டால், நீங்களும் சரும பொலிவு பெறலாம்.
Kerala Beauty Tips in Tamil-பெண்கள் என்றாலே அழகு தான், அதிலும் கேரள பெண்கள் என்றால் அழகுக்கு அழகு என்று சொல்லலாம். கேரள பெண்கள் தங்களுடைய மேனிபொலிவுக்கு இயற்கை முறையில் தயாரிக்கும் கிரீம்களைதான் பயன் படுத்துவார்கள். அதிலும் கேரள பெண்கள் வீட்டில் தயாரிக்கும் முக பேஸ்ட்டை அதிகம் பயன்படுத்துவார்கள்.
இரசாயனம் கலந்த கிரீம்களையும் பயன்படுத்த மாட்டார்கள். இப்போது சருமஅழகை பராமரிக்க இயற்கைப் பொருட்களை கேரள பெண்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.
மஞ்சள்
மஞ்சளை கேரள பெண்கள் மிக நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். மஞ்சளும் சந்தனமும் கலந்த கலவையை சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக கருதுகிறார்கள்.
ஏனெனில் மஞ்சளும் சந்தனமும் கலந்த கலவை சருமத்திற்கு ஒரு அழகான தங்க நிறத்தை அளிக்கிறது. முகப்பரு மற்றும் அலர்ஜியை போக்குகிறது.
மஞ்சள் மற்றும் சந்தன கலவை, நோய் தொற்று மற்றும் முகத்தில் உள்ள தழும்புகளையும் மறைய செய்யும். மேலும் சருமத்தை மென்மையாக்கி முகத்தின் நிறத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் கேரள பெண்கள் மஞ்சளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
மஞ்சளுடன் எலுமிச்சை சாறு.
எலுமிச்சை தோல் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
மேலும் பாசி பருப்பு மாவுடன், எலுமிச்சை சாறு, மற்றும் மஞ்சள் கலந்த கலவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தில் எண்ணெய் வடித்தலையும் முகப்பரு வராமலும் தடுக்கிறது. மேலும் முகத்தை அழகாகவும் மென்மையாகவும் வைக்கிறது.இதனால் தான் கேரள பெண்கள் முகம் அழகாக இருக்கிறது.
மஞ்சள் எலுமிச்சைபழ சாறு, பாசிப்பருப்பு மாவு பேஸ்ட் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம் .
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு மாவு இரண்டு தேக்கரண்டி
மஞ்சளை அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
சிறிது தண்ணீர்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் பாசிப்பருப்பு மாவு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு, மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல செய்யவும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விடவும்.
உலர்ந்த பிறகு முகத்தை கழுவி விடவும்.
இதை போல் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம்.
கற்றாழை
கற்றாழையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. நாம் அதை நேரடியாக முகத்தில் தடவலாம். கேரள மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சருமம் பொலிவு பெறவும், மலச்சிக்கல் தீரவும் கற்றாழையை பயன்படுத்துகின்றனர்.
கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் ஆகியவை நிரம்பி உள்ளது. அதனால் அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு தீர்வு கற்றாழை ஆகும்.
கற்றாழை சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. கற்றாழையில் 98% நீர் சத்து உள்ளது. இதனால் உடல் குளிர்ச்சி அடைகிறது, சருமத்தை மென்மையாக்கி சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் அலர்ஜியை தடுக்கிறது.
தோல் சுருக்கம் வராமல் தடுக்கிறது. இதனால் கேரள பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
கற்றாழை மற்றும் எலுமிச்சை சருமத்தை மிளிர செய்யும். சருமத்தை வெண்மையாக்க கற்றாழையில் பல வேதி பொருட்கள் உள்ளன. கற்றாழையில் உள்ள 'அலோயின்' என்ற வேதிப்பொருள் தோலில் இருக்கும் மெலனின் நிறமியைக் குறைத்து, மெலனின் உருவாவதைத் தடுக்கிறது.
தோலில் உள்ள கரும்புள்ளிகளுக்கு (ஹைப்பர் பிக்மென்டேஷன்) மெலனின் தான் காரணம். சருமத்தை வெண்மையாக்க கற்றாழையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கற்றாழை ஜெல்
எலுமிச்சை சாறு
செய்முறை
கற்றாழை மற்றும் எலுமிச்சை கலவை உருவாக்க, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அதில் நான்கில் ஒரு பங்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதை தினமும் பயன்படுத்தலாம் வறண்ட சருமம் மற்றும் புண்கள் இருந்தால், எலுமிச்சை எரிச்சலூட்டும். ஆகையால் இந்த பேஸ்ட்டை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
முகம் பொலிவு பெற பயன்படுத்தும் பாசிப்பருப்பு மாவு
கடலைமாவு அல்லது பாசிப்பருப்பு மாவு சரும பராமரிப்புக்கும் வீட்டு வைத்தியதிற்கும் மிகவும் பயன் உள்ள பொருள் ஆகும்.
இது தோல் சுருக்கங்களை நீக்கி சருமத்தை அழகுற செய்கிறது. சருமத்திற்கு அழகான பிரகாசத்தை அளிக்கிறது.
கடலை மாவு, சருமத்திற்கு பல நன்மைகள் அளிக்கிறது. கடலை மாவை நாம் அன்றாடம் பயன் படுத்துவதால் முகம் ஜொலிஜொலிப்புடன் திகழும்.
சருமத்தை இளமையாக வைக்க இந்த மாவு கலவையை எப்படி பயன் படுத்துவது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு மாவு 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி.
பால் கிரீம் 1 தேக்கரண்டி
செய்முறை
மாவுடன் எலுமிச்சை சாறு மற்றும் பால்கிரீம் 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் போலே நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி சுமார் 15-20 நிமிடங்கள் வைத்திருங்கள்.பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
இதே மாதிரி வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.
பப்பாளி + தேன்
பப்பாளி இயற்கையாகவே சருமத்தை வெண்மையாக்கும் தன்மை கொண்டது. வீட்டு வைத்தியம் மூலம் நம் சருமத்தை அழகுபடுத்த பப்பாளி சிறந்த பழம்.
பப்பாளியில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் பப்பெய்ன் போன்றவை சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றவும், இறந்த சரும செல்களை அகற்றவும், முகப்பரு தழும்புகள் மற்றும் தழும்புகளை போக்கவும் மிளிரும் சருமத்தை வெள்ளையாக்கவும் உதவும்.
சந்தனம்
காலங்காலமாக சருமத்தை ஒளிரச் செய்யும் மருந்தாகப் சந்தனத்தை பயன்படுத்துவது இயல்பான நடைமுறை.
சந்தனத்தில் காயங்கள் குணப்படுத்தும் தன்மை உள்ளது. சந்தனம் வயதான தோற்றத்தை குறைக்கிறது. முகத்தில்உள்ள கருமையை போக்குகிறது.
தோல் தடிப்பை குணப்படுத்துவது மற்றும் சருமத்தை உள்ள பழுப்பு நிறத்தைக் குறைப்பது வரை எல்லா நன்மைகளையும் செய்கிறது.
சந்தனம் சருமத்திற்கு ஒரு அதிசய மூலப்பொருளாகும். சந்தனத்தில் இயற்கையான சருமத்தை ஒளிரச் செய்யும் பொருட்கள் இருப்பதால் , சருமத்தை மேம்படுத்த ஃபேஸ் பேக்குகளில் பயன்படுத்தலாம்.
சந்தனம் பேஸ்ட் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சந்தானம்தூள் ஒரு தேக்கரண்டி.
பாதம் தூள் ஒரு தேக்கரண்டி.
சிறிது பால்.
செய்முறை
சந்தன தூள் மற்றும் பாதாம் தூள் கலந்து கொள்ளவும்.
மென்மையான பேஸ்ட்டை உருவாக்க சிறிது பால் சேர்த்து கலந்து இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் உலர விடவும்
பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இந்தமுறையை வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம்.
கேரள பெண்ககள் முகம் அழகாகவும் மென்மையாகவும் இருப்பதற்கு, முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் தினமும் குளிப்பதற்கு முன் சருமத்திற்கு மஞ்சள், சந்தனம், பாசி பருப்பு மாவு என்று ஏதாவது ஒன்றை பயன்படுத்துவார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2