ஆரோக்கியத்தை அள்ளி தரும் கட்லா மீன்

Katla Fish in Tamil -இந்த மீன்களை பொதுமக்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவதால் இவற்றுக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளது

Update: 2022-09-04 08:14 GMT

கட்லா மீன்

Katla Fish in Tamil-கட்லா மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இந்த மீன்கள் நன்னீரில் வளரக்கூடியவை. அதிகப் பட்சம் 5 அடி நீளம், 45 கிலோ எடையளவு வளரும். இது மிக விரைவாக வளரக்கூடியது என்பதால், இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

கட்லா மீனுக்கு பெரிய தலையையும், மேல்நோக்கிய வாயையும், குறுக்குவாட்டத்தில் அகன்ற உடலும் இருக்கும். இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த வெண்மையானது.

இதன் வாய் மேல்நோக்கியவாறு அமைந்துள்ளதால் நீரின் மேல்பரப்பில் உள்ள நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. சில குளங்களின் தண்ணீர் மற்றும் மண் தரத்திற்கேற்ப சில பருவகாலங்களில் 45 நாட்களில் 1.5 கிலோ எடை வரை வளரக்கூடியது.

பொதுவாக அனைத்து வகையான் கட்லா மீன்களும், பொதுவாக மட்கிய பொருள்கள் உணவாக எடுக்கும் பழக்கம் கொண்டவை . புழு, பூச்சிகள், குளத்தடியில் உள்ள சிறு தாவரங்கள், விலங்கின நுண்ணுயிரினங்கள், மட்கிய பொருள்கள் போன்றவைகளை சாதா கெண்டை வகை உண்ணும் .

ஆரோக்கியமாக இயற்கை முறையில் வளர்ந்த கட்லா மீன் வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீனை தேர்வு செய்யலாம்.

இந்த வகை மீன்கள் ஒரே ஆண்டில் 1 – 1 ½ கிலோ எடை வரை வளரும் திறனுடையது. இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும்.

இது அதிக எண்ணெய் நிறைந்த மீன் ஆகும். இதில் அதிகளவு சல்பர் மற்றும் சின்க் நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News