பொதுவுடைமை புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் ன் பொன்மொழிகள்
Karl Marx Quotes Tamil-தன்னுடைய பொதுவுடைமை கருத்துகளின்மூலம் சமூகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ். அவரது பொன்மொழிகளைக் காண்போம்.;
Karl Marx Quotes Tamil
கார்ல் மார்க்ஸ் -மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன் செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். . பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.
கார்ல் மார்க்ஸ், தற்போது செருமனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில், ட்ரையர் நகரில் 1818 மே 5-ஆம் நாள் பிறந்தார்கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ்யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.
அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிசு சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.
ஜார்ஜ் வில்லியம் பிரெடரிக் ஹெகல் என்பவரின் தர்க்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, பொருளாதார அறிஞரான ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களின் செவ்வியல் பொருளியல் கருத்துக்கள், பிரான்சு தத்துவவியலாளர் ஜான் ஜாக் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார். கார்ல் மார்க்ஸ் பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரசல்ஸ் சென்றார். அங்குதான் 1847-ல் "தத்துவத்தின் வறுமைஎன்னும் தமது முதல் நூலை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ஏங்கல்சுடன் சேர்ந்து "பொதுவுடமை அறிக்கைஎனும் நூலையும் வெளியிட்டார். கார்ல் மார்க்ஸின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்ஸ் இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.
ஜனநாயகம் என்பது சமூகவுடைமைக்கான பாதை.
கம்யூனிசக் கோட்பாட்டை சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் கூறலாம்: அனைத்து தனியார் சொத்துக்களையும் ஒழித்தல்.
பெண்களின் சமூக நிலையை வைத்து சமூக முன்னேற்றத்தை அளவிட முடியும்.
மக்களின் மகிழ்ச்சிக்கு முதலில் தேவையானது மதத்தை ஒழிப்பதாகும்.
பெண்களின் எழுச்சி இல்லாமல் பெரிய சமூக மாற்றங்கள் சாத்தியமில்லை என்று வரலாற்றை அறிந்த எவருக்கும் தெரியும்.
அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும்.
நான் புத்தகங்களை விழுங்குவதற்காக தண்டிக்கப்பட்ட ஒரு இயந்திரம்.
உங்களை மகிழ்விக்கும் நபர்களை உங்களைச் சுற்றி வைத்திருங்கள். உங்களைச் சிரிக்க வைக்கும் நபர்கள், உங்களுக்குத் தேவைப்படும்போது உங்களுக்கு உதவி செய்பவர்கள். உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களை உங்கள் வாழ்க்கையில் வைத்திருப்பது மதிப்புக்குரியது.
நீங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு மீனைப் பிடித்துக் கொடுத்தால், அதை நீங்கள் அவனுக்கு விற்கலாம். நீங்கள் ஒரு மனிதனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால், நீங்கள் ஒரு அற்புதமான வணிக வாய்ப்பைக் கெடுக்கிறீர்கள்.
மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்கள் சொந்தப் பாதையை பின்தொடருங்கள்.
மன வலிக்கு ஒரே ஒரு சிறந்த மாற்று மருந்து உள்ளது, அது உடல் வலி.
ஒரு எழுத்தாளர் வாழ்வதற்காகவும் எழுதுவதற்காகவும் பணம் சம்பாதிக்க வேண்டும், ஆனால் அவர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக வாழவும் எழுதவும் கூடாது.
மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து விலக்கிவையுங்கள், அவர்கள் எளிதில் கட்டுப்படுவார்கள்.
ஒரு நாட்டின் பாரம்பரியத்தை பறித்துவிடுங்கள், அவர்கள் இன்னும் எளிதாக சம்மதித்துவிடுவார்கள்.
நாத்திகம் தொடங்கும் இடத்தில் கம்யூனிசம் தொடங்குகிறது.
உங்களால் மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடிந்தால், அவர்களை எளிதில் சம்மதிக்கவைக்க முடியும்.
முதலாளித்துவத்தின் ஒற்றுமையை, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையால் மட்டுமே அசைக்க முடியும்.
எனக்கு பணத்தைப் பிடிக்காது, நாங்கள் போராடுவதற்கு பணம் தான் காரணம்.
வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதில் பணம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
அனைத்து வரலாறுகளும் மனித இயல்பின் தொடர்ச்சியான மாற்றத்தைத் தவிர வேறில்லை.
காரணம் எப்பொழுதும் இருக்கிறது, ஆனால் எப்பொழுதும் நியாயமான வடிவில் இல்லை.
இசை என்பது யதார்த்தத்தின் கண்ணாடி.
மனிதர்கள் தங்கள் சொந்த வரலாற்றை உருவாக்குகிறார்கள், ஆனால் அவர்களின் விருப்பப்படி அதை உருவாக்கவில்லை.
பல பயனுள்ள பொருட்களின் உற்பத்தி பல பயனற்ற மக்களை உருவாக்குகிறது.
ஒவ்வொரு காலகட்டத்தையும் ஆளும் கருத்துக்கள் அதை ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களாகவே இருந்தன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2