பலாப்பழ பணியாரம் செய்வது எப்படி?

Jackfruit paniyaram recipe- மா பலா வாழை என முக்கனிகளில் ஒன்றாக பலா இருக்கிறது. பலாச்சுளை சுவை அலாதியானது. பலாச்சுளையை பயன்படுத்தி செய்யும் பலாப்பழ பணியாரம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

Update: 2024-07-04 14:53 GMT

Jackfruit paniyaram recipe- பலாப்பழ பணியாரம் ரெசிப்பி ( கோப்பு படம்)

Jackfruit paniyaram recipe- தற்போது பலாப்பழ சீசன் என்பதால் மார்கெட்டுகளில் பலாப்பழம் விலைக்குறைவில் விற்கப்படுவதைக் காணலாம். நீங்கள் பலாப்பழ பிரியர் என்றால், அதுவும் அடிக்கடி பலாப்பழத்தை வாங்கி சாப்பிடுபவரானால், அடுத்தமுறை அந்த பலாப்பழத்தை வெறுமனே சாப்பிடாமல், ஒருமுறை அவற்றைக் கொண்டு மாலை வேளையில் பணியாரம் செய்து சாப்பிடுங்கள்.

இந்த பலாப்பழ பணியாரமானது பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்நாக்ஸாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பலாப்பழ பணியாரம் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.

ருசி மிகுந்த பலாப்பழ பணியாரம் குறித்து எளிய செய்முறையை தெரிந்துக்கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

* பலாப்பழம் - 10 துண்டுகள்

* ரவை - 1 கப்

* கோதுமை மாவு - 1 கப்

* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

* உப்பு - 1 சிட்டிகை

"தண்ணீர் - தேவையான அளவு

* ஆப்ப சோடா - 1 சிட்டிகை

* நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பலாப்பழ துண்டுகளில் உள்ள விதைகளை நீக்கிவிட வேண்டும்.

* பின்னர் அந்த பலாப்பழ துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பௌலில் அரைத்த பலாப்பழ விழுதை எடுத்து, அத்துடன் ரவை மற்றும் கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.

* அதன் பின் அதில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.


* 10 நிமிடம் கழித்து, தயாரித்து வைத்துள்ள மாவை நன்கு கிளறி, ஆப்ப சோடாவை சேர்த்து மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ கிளறாமல், ஓளரவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய் ஊற்றி, பின் கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி மூடி வைத்து 5-6 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.

* 5 நிமிடம் கழித்து பணியாரத்தை திருப்பி போட்டு, 2 நிமிடம் மீண்டும் வேக வைத்து எடுத்தால், சுவையான பலாப்பழ பணியாரம் தயார்.

Tags:    

Similar News