Earthquake: நிலநடுக்கம் அளவிடுவது எப்படி? கண்டறிந்தது யார்?
Earthquake: நிலநடுக்கம் அளவிடுவது எப்படி? ரிக்டர் அளவை கண்டறிந்தது யார்? என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க..;
நிலநடுக்கம் அளவிடுவது எப்படி? ரிக்டர் அளவை கண்டறிந்தது யார்? என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க..
நில அதிர்வுமானி என்ற கருவியின் மூலம், நில நடுக்கத்தின் போது ஏற்படும் அதிர் வலைகள், பதிவு செய்யப்படுகின்றன. நம்மால் உணர இயலாத, மிகவும் துல்லியமான அதிர்வுகளையும் இக்கருவி அறிந்து கொள்ளும் . நில நடுக்க அதிர்வலைகள், இக்கருவியினால் உணரப்பட்டு, மின் அலைகளாக மாற்றப்படும். பின்னர் இவை, மின் கருவியில் பதிவு செய்யப்படும்.
கணிணியின் உதவிகொண்டு, இப்பதிவுகளை ஆய்வு செய்தால், நிலநடுக்கம் ஏற்பட்ட இடம், ஏற்பட்ட நேரம், நில நடுக்க சக்தியின் அளவு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். குறைந்தது மூன்று வெவ்வேறு இடங்களில் செய்யப்பட்ட பதிவுகள் இதற்கு தேவைப்படும்.
நிலநடுக்க சக்தியை அளவீடும் விதம்:
நிலநடுக்கம் எந்த அளவு சக்தி வாய்ந்தது என்பது, அது வெளியிடும் ஆற்றலைப் பொறுத்து மதிப்பீடு செய்யப் படுகின்றது. இவ்வாறு மதிப்பிடப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதுதான், ரிக்டர் அளவுகோல் ஆகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் ரிக்டர் என்ற புவி அறிவியல் ஆய்வாளர், 1935 ஆம் ஆண்டு, இந்த அளவுகோல் முறையைக் கண்டறிந்து நடைமுறைக்குக் கொண்டு வந்தார். இதன் வரையறை 1லிருந்து 10 வகை மதிப்புடையதாக உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 1 என்பது, குறைந்த சக்தி கொண்ட நில நடுக்கத்தைக் குறிக்கும். இதை நாம் உணர இயலாத அளவுக்கு மிகவும் குறைவாக இருக்கும். அதிகபட்சமாக 9.3 வரை நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தீவிரமான நில நடுக்கத்தைக் குறிக்கும்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள், இந்தோனேஷியாவில் நில நடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ராட்சத அளவில் சுனாமி அலைகள் ஏற்பட்டன அல்லவா?
இவற்றின் பாதிப்புகளால், சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாம் அறிந்ததே. ரிக்டர் அளவுகோலில், இந் நில நடுக்கத்தின் சக்தி, 9 எண் கொண்டதாக பதிவு செய்யப்பட்டது.
இதன் சக்தி 1500 ஹிமோஷிமா அணு குண்டுகளுக்கு சமமானதாகும். எனவே, இதன் தீவிரத் தன்மையை, நீங்களே கற்பனை செய்து பார்க்கலாம்.